கைதடி
Appearance
கைதடி | |
---|---|
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பிசெ பிரிவு | தென்மராட்சி |
கைதடி இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாணம் தென்மராட்சியில் நான்கு பக்கமும் கடல் நீரேரிகளால் சூழப்பட்ட பகுதியாகும்.
இங்கு சித்த மருத்துவக் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. ஸ்ரீ வாலாம்பிகை அம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.கைதடி வீரகத்திப் பிள்ளையார் ஆலயம் இந்த ஊரின் தொன்மையை பறைசாற்றுகின்றது. சைவமும் தமிழும் தழைத்தொங்கும் இவ் ஊரில் கற்பக விநாயகர் ஆலயம், இணுங்கித்தோட்டம் முருகன் ஆலயம், கையிற்றசிட்டி முருகன் ஆலயம், மாவடிக்கந்தன் முருகன் ஆலயம், ஸ்ரீ வாலம்பிகை அம்மன் ஆலயம் ஆகிய ஆலயங்கள் மகோற்சவ பூஜைகள் இடம்பெறுகின்ற ஆலயங்களாகும்.