குழந்தைகள் இளையோர் சிறக்க... (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குழந்தைகள் இளையோர் சிறக்க...
நூல் பெயர்:குழந்தைகள் இளையோர் சிறக்க...
ஆசிரியர்(கள்):வேதா இலங்காதிலகம்
வகை:குழந்தை வளர்ப்பு
துறை:ஆலோசனைகள்
இடம்:மணிமேகலை பிரசுரம்,
தபால் பெட்டி எண்: 1447,
7 (ப.எ.4), தணிகாசலம் சாலை
தியாகராய நகர்,
சென்னை -600 017.
மொழி:தமிழ்
பக்கங்கள்:160
பதிப்பகர்:மணிமேகலை பிரசுரம்
பதிப்பு:2004
ஆக்க அனுமதி:நூல் ஆசிரியருக்கு

இந்நூல் குழந்தைகள் இளையோர் சிறப்புடன் திகழத் தேவையான ஆலோசனைகளைக் கொண்ட நூலாக 160 பக்கங்களுடன் விலை குறிப்பிடப்படாமல் வெளியிடப்பட்டுள்ளது.

நூலாசிரியர்[தொகு]

நூலாசிரியர் வேதா இலங்காதிலகம் உலகம் முழுவதுமுள்ள குறிப்பிடத்தக்க சில தமிழ்ப் பெண் கவிஞர்களுள் ஒருவர். இலங்கையில் பிறந்த இவர் 1987 ஆம் ஆண்டில் வாழ்வாதாரத்திற்காக டென்மார்க் நாட்டிற்குச் சென்று அங்கு ஒரு பாலர் பள்ளியில் பணிபுரிந்து கொண்டு தன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

அணிந்துரை[தொகு]

ஜெர்மனியிலிருந்து வெளிவரும் கலை, இலக்கிய, சமூக இருமாத இதழான "மண்" முதன்மை ஆசிரியர் வ.சிவராஜா இந்நூலிற்கு ஆறு பக்கங்களில் அணிந்துரை அளித்திருக்கிறார்.

சிறப்புரை[தொகு]

டென்மார்க்கில் வசிக்கும் உளவியல் நிபுணரான வி. சிறீகதிர்காமநாதன் இந்நூலிற்கு நான்கு பக்கங்களில் சிறப்பான சிறப்புரை ஒன்றைத் தந்திருக்கிறார்.

பொருளடக்கம்[தொகு]

நூலாசிரியர் பாலர் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுவதால் குழந்தைகள் மற்றும் இளையோர் தேவைகளை மனதிற்கொண்டு, டென்மார்க் நாட்டில் டெனிஷ் மொழியில் வெளியான சில கட்டுரைகளை மொழிபெயர்த்து தமிழில் குழந்தைகள் மற்றும் இளையோர்க்கு உதவும் விதமாகவும், இவர்கள் வளர்ப்பில் பெற்றோர்க்கு ஆலோசனைகளை அளிக்கும் விதமாகவும் 34 கட்டுரைகளைத் தந்துள்ளார். மேலும் இவர் கவிஞராக இருப்பதால் ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் ஒரு கவிதையைத் தந்திருக்கிறார். நூலின் கடைசிப் பக்கங்களில் குழந்தைகளுக்கான 13 கவிதைகளையும் தந்திருக்கிறார்.

வெளி இணைப்புகள்[தொகு]