பிரேமினி சபாரத்தினம்
பிரேமினி சபாரத்தினம் | |
---|---|
![]() | |
பிறப்பு | சாவகச்சேரி |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
தாட்சாயணி என்ற புனைபெயரில் எழுதிக் கொண்டிருக்கும் பிரேமினி சபாரத்தினம் ஈழத்து எழுத்தாளர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், போன்றவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் எழுதியவைகள், பல சிறுகதை, கவிதைப் போட்டிகளில் முதற் பரிசில்களைப் பெற்றிருக்கிறார்.
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]தாட்சாயணி இலங்கையில் யாழ்ப்பாணம், சாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சாவகச்சேரி இந்து மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப் பட்டதாரி ஆவார். பிராந்தியத் திட்டமிடலில் முதுமாணிப் பட்டமும் பெற்றவர்.
எழுத்துலக வாழ்வு
[தொகு]இவர் ஈழத்தின் போர்க்காலச் சூழ்நிலையில் முகிழ்ந்த எழுத்தாளர். யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து அதன் வாழ்வியல் நெருக்கடிகளை இலக்கியமாக்கியிருப்பவர். இவரது கவிதை ஒன்று 1993இல் சுபமங்களா வெளியிட்ட இலங்கைச் சிறப்பிதழில் பிரசுரமாகி பலரது கவனத்தையும் பெற்றது.
வெளிவந்த நூல்கள்
[தொகு]- ஒரு மரணமும் சில மனிதர்களும்- சிறுகதைத் தொகுப்பு - ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை - (2004),ஞானம் விருது பெற்றது.
- இளவேனில் மீண்டும் வரும் - சிறுகதைத் தொகுப்பு - மீரா பதிப்பகம் (2007)
- தூரப் போகும் நாரைகள் - சிறுகதைத் தொகுப்பு
- கடவுளோடு பேசுதல் - சில ஆன்மீகக் குறிப்புகள் - உரை நடை - மீரா பதிப்பகம் (2009)
- அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும் - சிறுகதைத் தொகுப்பு - மீரா பதிப்பகம் (2011)
வெளி இணைப்புகள்
[தொகு]- வாசகர் வட்டம் ரெ.பாண்டியன்
- தாட்சாயணியின் வலைப்பதிவு