டி. ஜி. தியாகராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டி. ஜி. தியாகராஜன்
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட தயாரிப்பாளர்
உறவினர்கள்ஆர். எம். வீரப்பன்

டி. ஜி. தியாகராஜன் (T. G. Thyagarajan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். [1] இவர் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படமான மூன்றாம் பிறை மூலம் திரைப்பட தயாரிப்பாளராக அறிமுகமானார். சத்ய ஜோதி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நிறுவியவர். இவர் தனது தயாரிப்பு நிறுவனத்தின் வழியாக 30 க்கும் மேற்பட்ட திரைப்படங்களையும் சில தொலைக்காட்சி தொடர்களையும் தயாரித்துள்ளார். இவரது தந்தை வீனஸ் கோவிந்தராஜனும் ஒரு புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளராவார். [2]

தொழில்[தொகு]

தியாகராஜன் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தை நிறுவுவதற்கு முன்பு 1970களில் தனது மாமனார் ஆர். எம். வீரப்பனுக்கு சொந்தமான சத்திய மூவிசுடன் சேர்ந்து திரைப்படங்களை தயாரித்தார். [3] இவரது முதல் சுயாதீன தயாரிப்பு படமான கமல்ஹாசன் நடித்த மூன்றாம் பிறை (1982) வணிகரீதியான வெற்றியையும், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டையும் பெற்றது. இப்படம் சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதையும் பெற்றது. இவரது அடுத்த தயாரிப்பான பகல் நிலவு (1985) மணிரத்னத்தின் இயங்கத்தில் எடுக்கபட்டது. இதுவும் வணிகரீதியாக வெற்றிப் படமாகும்.

தியாகராஜன் வெற்றிப் படமான பார்த்திபன் கனவு (2003) படத்தை தயாரித்தார். இது சிறந்த படத்திற்கான தமிழக அரசு விருதைப் பெற்றது. இவரது அடுத்த மூன்று படங்களான எம் மகன் (2006), ஜெயம் கொண்டான் (2009), பாணா காத்தாடி (2010) ஆகியவை குறைந்த செலவில் எடுக்கபட்ட படங்களாக இருந்தபோதிலும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டன. இதன் பிறகு மூன்று நட்சத்திரங்களான தனுஷ், விக்ரம் பிரபு, அஜித் குமார் ஆகியோரைக் கொண்டு 2016-2017 இடையில் முறையே தொடரி (2016), சத்திரியன் (2017), விவேகம் போன்ற படங்களை தயாரித்தார். 2019 ஆம் ஆண்டில், இவரது தயாரிப்பு நிறுவனம் தயாரித்த விஸ்வாசம் சுமார் 200 கோடி வசூல் ஈட்டி வணிக ரீதியாக வெற்றி பெற்றது, இது இவரது தொழில் வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றியாகும். பிறகு மீண்டும் தனுசைக் கொண்டு பட்டாஸ் (2020) படத்தை தயாரித்தார். இதில் தமிழ் தற்காப்பு கலையான அடிமுறையை சித்தரித்துள்ளது. [4]

திரைப்படவியல்[தொகு]

தொலைக்காட்சி[தொகு]

குறிப்புகள்[தொகு]

 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஜி._தியாகராஜன்&oldid=3142099" இருந்து மீள்விக்கப்பட்டது