கோவிந்தசாமி பழனிவேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜி. பழனிவேல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பழனிவேல் கோவிந்தசாமி
G. Palanivel
மலேசிய இந்தியக் காங்கிரசின் 8-ஆவது தலைவர்
பதவியில்
6 டிசம்பர் 2010 – 23 சூன் 2013
Deputyச. சுப்பிரமணியம்
முன்னையவர்ச. சாமிவேலு
பின்னவர்ச. சுப்பிரமணியம்
தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டுக்கான நாடாளுமன்றச் செயலாளர்
பதவியில்
1995–1999
ஊரக வளர்ச்சி துணை அமைச்சர்
பதவியில்
2004–2009
மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு துணை அமைச்சர்
பதவியில்
2009–2011
தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருட்கள் துணை அமைச்சர்
பதவியில்
2011–2013
பிரதமர் துறை அமைச்சர்
பதவியில்
2013–2015
இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
பதவியில்
2015–2018
மக்களவை (மலேசியா)
பதவியில்
1990–2008
மேலவை (மலேசியா)
பதவியில்
2013–2018
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Palanivel s/o K. Govindasamy

1 மார்ச்சு 1949 (1949-03-01) (அகவை 75)
ஜோர்ஜ் டவுன், பினாங்கு, மலேசியா
குடியுரிமைமலேசியர்
அரசியல் கட்சிமலேசிய இந்திய காங்கிரசு (2014 வரையில்)
சுயேட்சை (2014 தொடங்கி)
துணைவர்(s)கனகம் பழனிவேல்
Kanagam Palanivel
பிள்ளைகள்4 மகன்கள்
வாழிடம்(s)கோலாலம்பூர், மலேசியா
முன்னாள் கல்லூரிமலாயா பல்கலைக்கழகம்
Bachelor of Arts
வேலைஅரசியல்வாதி
இணையத்தளம்www.gpalanivel.com.my

டத்தோ ஜி. பழனிவேல் அல்லது பழனிவேல் கோவிந்தசாமி (மலாய்: G. Palaniveli; ஆங்கிலம்: Palanivel s/o K. Govindasamy) (பிறப்பு: 1 மார்ச் 1949), என்பவர் ஒரு மலேசிய அரசியல்வாதி; பாரிசான் நேசனல் (Barisan Nasional) கூட்டணியின் ஓர் உறுப்புக் கட்சியான மலேசிய இந்திய காங்கிரசு (Malaysian Indian Congress) கட்சியின் 8-ஆவது தலைவர்; மற்றும் மலேசிய அமைச்சரவையில் அமைச்சராகவும்; துணை அமைச்சராகவும் பதவி வகித்தவர். இவர் மலேசியா, பகாங், கேமரன் மலை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

பொது[தொகு]

பழனிவேல், 1949 மார்ச் 1-ஆம் தேதி பினாங்கு, ஜோர்ஜ் டவுன் நகரில் பிறந்தார். 1972-ஆம் ஆண்டில், மலாயா பல்கலைக்கழகத்தில் (University of Malaya) வரலாற்றுக் கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றார்.

தொடக்கக் காலத்தில் கோலாலம்பூரில் உள்ள கூன் கல்வி நிலையத்தில் (Goon Institute) ஆசிரியராகவும்; பின்னர் குவாந்தான் நகரில் உள்ள அடாபி கல்லூரியிலும் (Maktab Adabi) ஆசிரியராகவும் பணி புரிந்தார். அத்துடன் 1968-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய இந்திய காங்கிரசு (Malaysian Indian Congress) கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார்.

மலாயா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அதே 1972-ஆம் ஆண்டில், மலேசிய இந்திய காங்கிரசு பெட்டாலிங் கிளையின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மலேசிய அருங்காட்சியகத்தில் ஆராய்ச்சியாளர் பணி[தொகு]

பின்னர் அவர் மலேசிய தேசிய அருங்காட்சியகத்தில் (National Museum of Malaysia) உதவி ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார். 1974-இல், அவர் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தில் (Consumer Association of Penang) பணிபுரிய பினாங்கு சென்றார். அங்கு செயல் இயக்குநராக பதவியில் அமர்த்தப்பட்டார்.

1977-ஆம் ஆண்டில் மலேசிய அரசாங்கத்தின் பெர்னாமா (Bernama) செய்தி நிறுவனத்தில் ஒரு பத்திரிகையாளராகச் சேர்ந்தார். அங்கு அவர் பொருளாதார செய்தி ஆசிரியராக (Economic News Editor) பதவி உயர்த்தப் பட்டார். இந்தக் காலக் கட்டத்தில்தான் அவர் ம.இ.கா.வின் தலைவர்; பொதுப் பணித்துறை அமைச்சர்; ச. சாமிவேலு அவர்களுக்குச் செய்திச் செயலாளராகப் பணிபுரிய அழைக்கப்பட்டார்.

2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல்[தொகு]

மலேசிய இயற்கை வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஜி. பழனிவேல், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை 9 செப்டம்பர் 2014-இல் புது தில்லியில் சந்தித்த போது எடுத்த படம்.

அந்த அழைப்பே அவரின் அரசியல் வாழ்வில் முக்கியமான பயணத்திற்கு களம் அமைத்தது. 1990-ஆம் ஆண்டில் நாட்டின் பொதுத் தேர்தலில் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் 2008 மார்ச் 8-ஆம் தேதி வரையில் ஒவ்வொரு பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்று வந்தார்.

2008-ஆம் ஆண்டில் ஆளும் கூட்டணிக்கு எதிரான வாக்காளர்களின் உணர்வு அலைகளினால்; 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பழனிவேல் தோல்வி அடைந்தார். அந்தத் தேர்தலில் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி (Ruling Coalition); பதின்மூன்றில் நான்கு மாநிலங்களை எதிர்க்கட்சிகளிடம் இழந்தது; மற்றும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையையும் இழந்தது.

மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு[தொகு]

தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் (Ministry of National Unity) நாடாளுமன்றச் செயலாளராக பழனிவேல் நியமிக்கப்பட்டதன் மூலம் அவரின் அரசாங்கப் பதவிகள் ஆரம்பமாகின. அதன் பின்னர் 1999 முதல் 2004 வரை மலேசிய கிராமப்புற மேம்பாட்டுத் துறையின் (Ministry of Rural Development of Malaysia) துணை அமைச்சராக இருந்தார்.

பின்னர் அவர் குடும்ப மேம்பாட்டு நலத் துறையின் (Ministry of Welfare and Family Development) துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பழனிவேல் தோல்வி அடையும் வரையில் அவர் துணை அமைச்சராகத் தொடர்ந்தார்.

டெலிகாம் மலேசியா[தொகு]

பழனிவேல் டோட்டோ அமைப்பின் (Sports Toto) வணிக ஆலோசகராகவும்; இருந்தார். மற்றும் டெலிகாம் மலேசியா (Telekom Malaysia) நிறுவனத்தின் இயக்குநர்கள் ஒருவராகவும் இருந்தார்.

பழனிவேலின் மனைவியின் பெயர் டத்தின் கனகம் பழனிவேலை (Datin Kanagam). இவர்களுக்கு நான்கு மகன்கள் உள்ளனர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Palanivel, Datuk". Saiee Driss (Biodata Tokoh). 2 March 2008. http://biodatatokoh.blogspot.my/2008/03/palanivel-datuk.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்தசாமி_பழனிவேல்&oldid=3905789" இலிருந்து மீள்விக்கப்பட்டது