தேசிய அருங்காட்சியகம், மலேசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆள்கூறுகள்: 3°8′15.77″N 101°41′13.99″E / 3.1377139°N 101.6872194°E / 3.1377139; 101.6872194

தேசிய அருங்காட்சியகம்
மியூசியம் நெகரா
موزيوم نڬارا
National museum, KL.JPG
நிறுவப்பட்டது1963
அமைவிடம்ஜலான் தமன்சரா, கோலாலம்பூர், மலேசியா
வகைதேசிய அருங்காட்சியகம்
Public transit accessகோலாலம்பூர் தொடருந்து நிலையம்
வலைத்தளம்www.muziumnegara.gov.my


தேசிய அருங்காட்சியகத்தில் மலேசிய வரலாற்றை விவரிக்கும் பட்டை

தேசிய அருங்காட்சியகம் (மலாய்: மியூசியம் நெகரா) மலேசியாவின் கோலாலம்பூரில் ஜலான் தமன்சராவில் அமைந்துள்ளது. இது பெர்டானா ஏரிப் பூங்காவின் அருகில் உள்ளது. இங்கு மலேசிய வரலாறு, பண்பாடு குறித்து அறியலாம். மினாங்கபாவு கட்டிடவியலின் ரூமா கடாங் பாணியில் கட்டப்பட்டுள்ள அரண்மனை போன்ற கட்டிடம் ஆகும். இதன் முகப்பு மலாய் மற்றும் தற்காலக் கூறுகளைக் கொண்டுள்ளது. இந்த தேசிய அருங்காட்சியகம் ஆகத்தி 31, 1963இல் திறக்கப்பட்டது.[1]

தேசிய அருங்காட்சியகம் மூன்று மாடிகளைக் கொண்டுள்ளது; 109.7 மீட்டர்கள் நீளமும் 15.1 மீட்டர்கள் அகலமும் நடுப்பகுதியில் 37.6 மீட்டர்கள் உயரமும் கொண்டுள்ளது. அருங்காட்சியகத்தில் நான்கு முதன்மை காட்சியகங்கள் இன ஒப்பாய்வியலுக்கும் இயற்கை வரலாற்றுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. பண்பாட்டுக் கூறுகளான திருமணங்கள், விழாக்கள், உடைகள் அரங்கக் காட்சிகளாக வைக்கப்பட்டுள்ளன. வழமையான ஆயுதங்கள், இசைக்கருவிகள், கலை மற்றும் கைவினைப் பொருட்கள், மண்பாண்டப் பொருட்கள், விலங்குகள், தாவரங்கள் ஆகியனவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Muzium Negara". Tourism Malaysia. பார்த்த நாள் 25 May 2014.

வெளி இணைப்புகள்[தொகு]