செய்பார்மிசு
செய்பார்மிசு புதைப்படிவ காலம்: | |
---|---|
செசு பேபர் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | ஆக்டினாப்டெர்ஜி
|
வரிசை: | செய்பார்மிசு
|
குடும்பம்: | உரையை காண்க
|
மாதிரி இனம் | |
செசு பேபர் லின்னேயசு, 1758]] |
செய்பார்மிசு (Zeiformes) என்பது கடலில் காணப்படும் ரே-துடுப்பிடப்பட்ட மீன்களான அக்டினோட்டெரிகீயை வகுப்பினைச் சார்ந்த கயிறு மீன் வரிசையாகும். இது குறிப்பிடத்தக்க உணவு மீன் ஆகும். இந்த வரிசையில் ஏழு குடும்பங்களில் சுமார் 33 சிற்றினங்கள் உள்ளன. இவைப் பெரும்பாலும் ஆழ்கடல் வகையின.
செய்பார்ம் மீன்களின் உடல்கள் பொதுவாக மெல்லிய மற்றும் தட்டையானவை. வாய் பெரியது, பிரிக்கக்கூடிய தாடைகளுடன் கூடியது. ஆர்பிட்டோஸ்பெனாய்டு இல்லை. இடுப்பு துடுப்புகளில் 5-10 மென்மையான கதிர்கள் மற்றும் ஒரு முள்ளெலும்பு, 5-10 முதுகு துடுப்பு முள்ளெலும்புகள் மற்றும் 4 குத துடுப்பு முள்ளெலும்புகள் உள்ளன. இவை (குள்ள கயிறு-மேக்ருரோசைட்டசு அகாந்தோபோடசு) முதல் 43 மில்லிமீட்டர்கள் (1.7 அங்) நீளம் முதல் (கயிறு முனை-ஜீயசு கேபன்சிசு) வரை 90 சென்டிமீட்டர்கள் (35 அங்) வரை நீளமுடையன.[1]
இந்த வரிசையில் பன்றி மீன்கள் (கப்ரோயிடே) சேர்க்கப்பட்டிருந்தன. இருப்பினும் அவை தற்போது பேர்சிஃபார்மீசுகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
குடும்பங்கள்
[தொகு]- குடும்ப சிட்டிடே (பார்வை கயிற்றுமீன்)
- குடும்ப கிராமிகோலிபிடிடே (மெல்லுடல் மீன்கள்)
- குடும்ப ஓரியோசோமாடிடே (ஓரியோசு)
- குடும்ப பராசனிடே (பாராசன்கள்)
- குடும்ப சோர்பினிபெர்சிடே (அழிந்துவிட்டது)
- குடும்ப ஜீடே (கயிற்றுமீன்)
- குடும்ப ஜெனியோனிடே (ஜெனியோன்டிட்சு) (முன்னர் மேக்ரோரோசிட்டிடே என்று அழைக்கப்பட்டது)
- குடும்ப பஜாய்தைடே (பஜாய்திசு எலிகன்சு)
வகைகளின் காலவரிசை
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Karrer, C.; John, H-C. (1998). Paxton, J.R.; Eschmeyer, W.N. (eds.). Encyclopedia of Fishes. San Diego: Academic Press. pp. 165–167. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-547665-5.
- Froese, Rainer, and Daniel Pauly, eds. (2005). "Zeiformes" in FishBase. March 2005 version.
- ஜே.எஸ். நெல்சன், உலகின் மீன்கள்
- Sepkoski, Jack (2002). "A compendium of fossil marine animal genera". Bulletins of American Paleontology 363: 1–560. http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=611&rank=class. பார்த்த நாள்: 2011-05-17.