உள்ளடக்கத்துக்குச் செல்

உலகில் உள்ள மீன்கள் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உலகில் உள்ள மீன்கள் (Fishes of the World, ஃபிசசு ஒஃப் தி வர்ல்டு) என்பது மீன்களின் தொகுதியியலுக்கான (systematics) ஒரு நிலையான மேற்கோள் நூலாகும். இதை எழுதியவர் சூசை எசு. நெல்சன் (Joseph S. Nelson) என்பவர். இதில் சுமார் 25,000 மீன்களுக்கான தெளிவு மற்றும் விரிவான விளக்கங்களுடன் தரப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள வைலி பதிப்பகத்தினரால் இதன் நான்காம் பதிப்பு வெளியிடப்பட்டது.

இதன் முதல் பதிப்பு 1976ம் ஆண்டு வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து 1984 மற்றும் 1994 (John Wiley & Sons, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-54713-1) முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவதுப் பதிப்பு வெளிவந்தது. முதல் பதிப்பு வெளிவந்து முப்பது ஆண்டுகள் கழித்து உலகத்தில் உள்ள மீன்கள் என்னும் நூலின் நான்காம் பதிப்பு மார்ச் மாதம் 2006ம் (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-25031-7) ஆண்டு வெளியானது.

ஆசிரியர்

[தொகு]

முனைவர். சூசை எசு. நெல்சன் என்பவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மீன் பற்றிய ஆய்வில் மூழ்கியிருந்தவர். இவர் ஆல்பர்டோ பல்கலைக்கழகம், எட்மாண்டன், கனடாவில் உள்ள உயிரறிவியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசியராவார். இவர் மீனின் மனிதர் என்றுப் பாராட்டுமளவுக்கு மீன் குறித்த நுட்பமான அறிவும் காலத்திற்கேற்ற வளர்ச்சியும் பெற்றிருந்தார். இவர் 515 மீன் குடும்பங்களைப் பற்றியும் குறைந்தது 28,000 மீன்கள் குறித்த வகைப்பாட்டையும் அறிவையும் பெற்றிருந்தார் என்பது மிகையாகாது. இவர் எழுதிய உலகில் உள்ள மீன்கள் என்னும் நூல் மீனில் பணியாற்றுபவர்களுக்கு ஒரு மிகப்பெரிய குடையாகும்.[1],[2]

நூலின் சிறப்புகள்

[தொகு]
  • மீனியியலில் குறிப்பிடத்தக்க மற்றும் நிகரிலா படைப்பாகும்.
  • இந்நூல் சுற்றுச்சூழல் வல்லுநர்கள், மீனியியல் வேலை செய்பவர்கள், மாணவர்கள், பரிந்துரையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு சிறந்த வழிகாட்டி நூலாகும்.
  • அந்நூலில் குறிப்பிடப்பட்ட மீன்களைக் குறித்த செம்மையான விளக்கங்களும் அதனை விவரிக்கும் எண்ணிலடங்கா எளிமையான வரைபடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது.
  • வகைப்பாட்டியலில் - வகைப்படுத்தப்பட்ட காரணம், முக்கியப் பண்புகள் குறித்தத் தெளிவான விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.[3]
  • இந்நூலின் நான்காம் பதிப்பே மீன்களில் டி.என்.ஏ மூலக்கூறுப் பண்பைக் கொண்டு ஆராய்தல் பற்றிய தெளிவான அறிவு கொடுக்கப்பட்ட நூலாகும்.

மேற்கோள்கள்

[தொகு]