சென் பீட்டர்ஸ்பேர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென். பீட்டர்சுபர்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Saint Petersburg
சென் பீட்டர்ஸ்பேர்க்
Санкт-Петербург
Saint Petersburg
கொடி சின்னம்
பெரிய நகர் மத்திய மாநகர்
Government
 •  ஆளுநர் ஜார்ஜ் போதாவசென்கோ
பரப்பு
 •  மொத்தம் 605.8 கிமீ2 (82வது)
2,33,090 சதுர மைல்
 •  நீர் (%) 7%
மக்கள் தொகை
 •  2007 கணக்கெடுப்பு 4,879,566 (4வது)
 •  2001 கணக்கெடுப்பு 5,028,000
 •  அடர்த்தி 1439/km2 (82வது)
199/sq mi

சென் பீட்டர்ஸ்பேர்க் (Saint Petersburg, ரஷ்ய மொழி: Санкт-Петербу́рг (சாங்க்ட் பீட்டர்பூர்க், Sankt Peterburg) ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமாகும். இது நீவா ஆற்றின் அருகே, பின்லாந்து வளைகுடாவின் கிழக்கே பால்டிக் கடலின் கரையோரத்தில் அமைந்திருக்கிறது. இதன் வேறு பெயர்கள்: பெட்ரோகிராட் (Петрогра́д, 1914 - 1924), லெனின்கிராட் (Ленингра́д, 1924 - 1991)[1].

இந்நகரம் சார் மன்னனான முதலாம் பீட்டரினால் மே 27, 1703 இல் அவனது "ஐரோப்பாவுக்கான கண்ணாடி"யாக அமைக்கப்பட்டது[2]. இந்நகரம் ரஷ்ய சாம்ராச்சியத்தின் தலைநகராக இருநூறு ஆண்டுகளுக்கு (1712-1728, 1732-1918) மேலாக இருந்து வந்துள்ளது. 1918 இல் ரஷ்யப் புரட்சி வரையில் இது தலைநகராக இருந்தது.[3]. மாஸ்கோ, லண்டன் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இது ஐரோப்பாவின் மூன்றாவது பெரிய நகரமாகும். 4.6 மில்லியன் மக்கள் இங்கு வசிக்கிறார்கள். இதன் மொத்தப் பரப்பளவு 1439 சதுர கிமீ ஆகும்.

வரலாறு[தொகு]

ஸார் பீட்டர் பெருமகனரால் சுபானு ஆண்டு வைகாசி மாதம் 17ம் நாள் (27 மே 1703), திங்கட்கிழமையன்று சென் பீட்டர்ஸ்பேர்க் என்ற பெயரிட்டு நிறுவினார். மேலும் ருசியப் பேரரசின் தலைநகராக இருநூற்றாண்டுகளுக்கு மேலாக (1712–1728, 1732–1918) இருந்தது. 1917 ஆண்டில் நடந்த ருசியப் புரட்சிக்கு பின்னர், 1918ம் ஆண்டிலிருந்து தலைநகரை மாற்றியது ருசியப் பேரரசு[3].

புவி அமைப்பு[தொகு]

நகரின் மொத்த பரப்பளவு, 605.8 square kilometers (233.9 sq mi)வாக உள்ளது. ஒருங்கிணைந்த நகராக ​ஒன்பது நகராட்சி நகரங்கள் மற்றும் இருபத்தியொரு நகர குடியேற்றங்களை கொண்டு 1,439 square kilometers (556 sq mi)வாக உள்ளது.

காலநிலை[தொகு]

சென் பீட்டர்ஸ்பேர்க்கின் காலநிலை, ஈரப்பத தட்பவெப்பத்தைக் கொண்டுள்ளது. கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் இங்குள்ள நேவா ஆறு, உறைபனியால் மூடியிருக்கும். நகரில் சராசரியாக 135 நாட்கள், உறைபனி இல்லாத காலமாக நீடிக்கிறது. நகரின் புறநகர் பகுதிகளைவிட சற்று வெப்பமான காலநிலையை கொண்டிருக்கிறது. வானிலையானது ஆண்டு முழுவதும் மாறி மாறி வரும்[4][5].

தட்பவெப்ப நிலை தகவல், சென் பீட்டர்ஸ்பேர்க்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 8.7
(47.7)
10.2
(50.4)
14.9
(58.8)
25.3
(77.5)
30.9
(87.6)
34.6
(94.3)
35.3
(95.5)
37.1
(98.8)
30.4
(86.7)
21.0
(69.8)
12.3
(54.1)
10.9
(51.6)
37.1
(98.8)
உயர் சராசரி °C (°F) -3.0
(26.6)
-3.0
(26.6)
2.0
(35.6)
9.3
(48.7)
16.0
(60.8)
20.0
(68)
23.0
(73.4)
20.8
(69.4)
15.0
(59)
8.6
(47.5)
2.0
(35.6)
-1.5
(29.3)
9.1
(48.4)
தினசரி சராசரி °C (°F) -5.5
(22.1)
-5.8
(21.6)
-1.3
(29.7)
5.1
(41.2)
11.3
(52.3)
15.7
(60.3)
18.8
(65.8)
16.9
(62.4)
11.6
(52.9)
6.2
(43.2)
0.1
(32.2)
-3.7
(25.3)
5.8
(42.4)
தாழ் சராசரி °C (°F) -8.0
(17.6)
-8.5
(16.7)
-4.2
(24.4)
1.5
(34.7)
7.0
(44.6)
11.7
(53.1)
15.0
(59)
13.4
(56.1)
8.8
(47.8)
4.0
(39.2)
-1.8
(28.8)
-6.1
(21)
2.7
(36.9)
பதியப்பட்ட தாழ் °C (°F) -35.9
(-32.6)
-35.2
(-31.4)
-29.9
(-21.8)
-21.8
(-7.2)
-6.6
(20.1)
0.1
(32.2)
4.9
(40.8)
1.3
(34.3)
-3.1
(26.4)
-12.9
(8.8)
-22.2
(-8)
-34.4
(-29.9)
-35.9
(-32.6)
பொழிவு mm (inches) 44
(1.73)
33
(1.3)
37
(1.46)
31
(1.22)
46
(1.81)
71
(2.8)
79
(3.11)
83
(3.27)
64
(2.52)
68
(2.68)
55
(2.17)
51
(2.01)
661
(26.02)
ஈரப்பதம் 86 84 79 69 65 69 71 76 80 83 86 87 78
சராசரி மழை நாட்கள் 9 7 10 13 16 18 17 17 20 20 16 10 173
சராசரி பனிபொழி நாட்கள் 25 23 16 8 1 0.1 0 0 0.1 5 16 23 117
சூரியஒளி நேரம் 21.7 53.7 124.0 180.0 260.4 276.0 266.6 213.9 129.0 71.3 24.0 12.4 1,633.0
Source #1: Pogoda.ru.net[6]
Source #2: HKO (sunshine hours)[7]

போக்குவரத்து[தொகு]

சென் பீட்டர்ஸ்பேர்க்கானது, போக்குவரத்தின் முனையமாக உள்ளது. ரஷ்ய தொடர்வண்டி நிலையமானது, 1837 முதன் முதலாக கட்டப்பட்டது. அதன் பின்னர் நகரின் போக்குவரத்து உள்கட்டமைப்பானது அசுர வேகத்துடன் வளர்ச்சி பெற்றது. டிராம், மெட்ரோ, உள்ளூர் மேம்பாட்டுச் சாலைகள் மற்றும் தொடருந்து சேவைகள் என பல போக்குவரத்து சாதனங்கள் தன்னகத்தே அடக்கியுள்ளது. நகரானது, தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய மற்றும் சர்வதேச தொடருந்துத் தடங்களை மூலம் ரஷ்யா முழுவதும் பரந்த உலகுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சென் பீட்டர்ஸ்பேர்க் மெட்ரோ வரைபடம்
Saint Petersburg metro map ENG.png

தொடருந்து[தொகு]

1851ம் ஆண்டு மாஸ்கோவையும் சென் பீட்டர்ஸ்பேர்க்கையும் இணைக்கும் 651 kilometers (405 mi) நீளம் கொண்ட தெடருந்து தடத்தின் மூலம் பயணியர், மூன்றரை மணியிலிருந்து ஒன்பது மணி வரைககுள் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு சென்றுவிடலாம்[8].

முக்கிய தொடருந்து முனையங்கள்
விட்டப்சிகி தொடருந்து முனையம்  
மோஸ்கோவசிகி தொடருந்து முனையம்  
பல்டிசிகி தொடருந்து முனையம்  
பின்லியான்துசிகி தொடருந்து முனையம்  
லாதோசிகி தொடருந்து முனையம்  

வானூர்தி[தொகு]

புல்கோவா பன்னாட்டு விமான நிலையமே பிரதான நிலையமாக அமைந்துள்ளது[9]. இதற்கு அடுத்த நிலையாக மூன்று விமான நிலையஙகள் வணிகத்திற்காக பயன்படுத்துகின்றனர். நகரிலிருந்து விமான நிலையத்திற்கு, 24 மணிநேரமும் பேருந்து சேவையுள்ளது.

அரண்மனை

சான்றுகள்[தொகு]

  1. சாங்க்ட் பீட்டர்ஸ்பேர்க் நகர ஆளுநர்
  2. மகா பீட்டர்: அவனது வாழ்வும் உலகமும் (Knopf, 1980]) by Robert K. Massie, ISBN 0-394-50032-6
  3. 3.0 3.1 Nicholas and Alexandra: An Intimate Account of the Last of the Romanovs and the Fall of Imperial Russia (Athenum, 1967) by Robert K. Massie, ASIN B000CGP8M2 (also, Ballantine Books, 2000, ISBN 0-345-43831-0 and Black Dog & Leventhal Publishers, 2005, ISBN 1-57912-433-X)
  4. "Climate St. Peterburg - Historical weather records". Tutiempo.net. பார்த்த நாள் 2012-11-16.
  5. "Архив погоды в Санкт-Петербурге, Санкт-Петербург". Rp5.ru. பார்த்த நாள் 2012-11-16.
  6. "Pogoda.ru.net" (Russian). Weather and Climate (Погода и климат). பார்த்த நாள் March 29, 2013.
  7. "சென் பீட்டர்ஸ்பேர்க்கின் காலநிலை பற்றிய குறிப்புகள், ருசியா". ஹாங்காங் ஆய்வுக்கூடம். பார்த்த நாள் March 29, 2013.
  8. "Results of train ticket inquiry, Russian train schedules and Russian train tickets". RZD.com. பார்த்த நாள் January 1, 2011.
  9. "Россия - российские авиалинии". Rossiya-airlines.com (2007-07-25). பார்த்த நாள் 2012-11-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்_பீட்டர்ஸ்பேர்க்&oldid=2229674" இருந்து மீள்விக்கப்பட்டது