திமீத்ரி மெண்டெலீவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திமீத்ரி மெண்டெலீவ்
DIMendeleevCab.jpg
பிறப்பு திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ் (Dmitri Ivanovich Mendeleev)
பெப்ரவரி 8, 1834(1834-02-08)
Verkhnie Aremzyani, Russian Empire
இறப்பு 2 பெப்ரவரி 1907(1907-02-02) (அகவை 72)
புனித பீட்டர்ஸ் பேர்க்
தேசியம் உருசியன்
துறை வேதியியல், பௌதிகவியல்
கல்வி கற்ற இடங்கள் Saint Petersburg University
Notable students Dmitri Petrovich Konovalov, Valery Gemilian, Alexander Baykov
அறியப்படுவது தனிம அட்டவணையை உருவாக்கியமை.
ஈல்யா ரேப்பின் வரைந்த திமீத்ரி மென்டெலீவின் உருவப் படம்

திமீத்ரி இவனோவிச் மெண்டெலீவ்[1] (Dimitri Mendeleev ரஷ்ய மொழி: Дми́трий Ива́нович Менделе́ев, (பெப்ரவரி 8 [யூ.நா. ஜனவரி 27] 1834 – பெப்ரவரி 2 [யூ.நா. ] 1907, ரஷ்ய வேதியியலாளரும் கண்டுபிடிப்பாளரும் ஆவார். இவர் வேதியியல் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்த முயன்று, தனிமங்களின் அணு நிறைகளை அடிப்படையாகக் கொண்டு‍ முதலாவது ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார்.[2] அவரது காலத்தில் கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை மென்டெலீவ் வரையறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

தீமீத்ரி மென்டெலீவ் ரஷ்யாவின் சைபீரியாவில் தோபோல்ஸ்க் என்ற இடத்தில் பெப்ரவரி 8, 1834 இல் இவான் பவ்லோவிச் மென்டெலீவ் மற்றும் மரீயா திமீத்ரியெவ்னா மென்டெலீவா என்பவருக்கும் 17வது கடைசி மகவாகப் பிறந்தார். 13வது வயதில் தந்தை காலமானார். தாயாரின் தொழிற்சாலை தீயில் எரிந்து அழிந்தது. வறுமையீல் வாடிய மென்டெலீவின் குடும்பம் 1849 ஆம் ஆண்டில் சென் பீட்டர்ஸ்பேர்க் நகருக்கு இடம்பெயர்ந்தது. அங்கு 1850ம் ஆண்டில் திமீத்ரி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து படித்து பட்டம் பெற்றார். அப்போது மெண்டெலீவுக்கு காசநோய் பீடித்ததால் 1855 இல் கருங்கடல் பகுதியில் உள்ள கிரிமியாவுக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது. முற்றாக நோய் குணமானதும் மீண்டும் 1857 இல் சென் பீட்டர்ஸ்பேர்க் திரும்பினார்.

1859 க்கும் 1861க்கும் இடையில் இவர் ஜெர்மனியின் ஹைடெல்பூர்க் நகரில் வேதியியல் ஆய்வுகளில் ஈடுபட்டார். 1861 இல் நிறமாலைகாட்டி (spectroscope) பற்றிய ஒரு நூலை எழுதி வெளியிட்டர். இது அவருக்குப் பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது. 1862 இல் மெண்டெலீவ் சென் பீட்டர்ஸ்பேர்க் அரச தொழில்நுட்பக் கல்லூரியில் வேதியியல் பேராசிரியரானார். 1863 இல் சென் பீட்டர்ஸ்பேர்க் அரச பல்கலைக்கழகத்தில் பேராசிரியரானார். 1865 இல் நீருடன் அற்ககோலின் சேர்க்கை குறித்த ஆய்வுக்காக முனைவர் பட்டத்தையும் பெற்றார்.

ஆவர்த்தன அட்டவணை[தொகு]

மென்டெலீவின் ஆவர்த்தன அட்டவணை

மென்டெலீவ் ஆசிரியரான பின்னர் மாணவர்களுக்காக வேதியியலின் தத்துவங்கள் (1868-1870) என்ற நூலை எழுதினார். வேதியியல் தனிமங்களின் இயல்புகளை வகைப்படுத்தும் போதே அவர் தனது ஆவர்த்தன அட்டவணையை அறிமுகப்படுத்தினார்.

அணுத்திணிவு குறித்த பல தகவல்கள் கிடைத்தபோது அவர் தனக்கென பின்வரும் அட்டவணையைத் தயாரித்தார்:

Cl 35.5 K 39 Ca 40
Br 80 Rb 85 Sr 88
I 127 Cs 133 Ba 137

இந்த முறையில் வேறு தனிமங்களைச் சேர்த்தபோது ஆவர்த்தன அட்டவணை உருவானது.

மார்ச் 6, 1869 இல் மெண்டெலீவ் ரஷ்ய வேதியியல் கழகத்தில் தான் தயாரித்த அட்டவணையை சமர்ப்பித்தார். இந்த அட்டவணையில் அப்போது பல கண்டிபிடிக்கப்படாத மூலகங்களின் இயல்புகளையும் எதிர்வு கூறி அட்டவணையை முழுமைப்படுத்தியிருந்தார். மென்டெலீவ் இவ்வட்டவணைய வெளிப்படுத்திய சில மாதங்களின் பின்னர் ஜெர்மனியின் ஜூலியஸ் மேயர் என்பவர் அதே மாதிரியான அட்டவணையை அறிவித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Also romanized Mendeleyev or Mendeleef
  2. Sr, Venkatesan (31 அக்டோபர், 2013). "அரசு தேர்விற்கான அறிவரங்கம்: வேதியியல் - நிலக்கரி". தினமணி. மூல முகவரியிலிருந்து 31 அக்டோபர், 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 நவம்பர், 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திமீத்ரி_மெண்டெலீவ்&oldid=2210244" இருந்து மீள்விக்கப்பட்டது