ரஷ்ய தேசிய நூலகம்

ஆள்கூறுகள்: 59°56′01″N 030°20′08″E / 59.93361°N 30.33556°E / 59.93361; 30.33556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The National Library of Russia
நூலகத்தின் 18ஆம் நூற்றாண்டு கட்டிடம்
faces Nevsky Prospekt
நாடுரஷ்யா
வகைதேசிய நூலகம்
தொடக்கம்1795 (229 ஆண்டுகளுக்கு முன்னர்) (1795)
Reference to legal mandateDecree of the Government of the Russian Federation authorizing the Statute of the Federal State Institution "The National Library of Russia" (March 23, 2001)
அமைவிடம்புனித பீட்டர்ஸ்பெக்
அமைவிடம்59°56′01″N 030°20′08″E / 59.93361°N 30.33556°E / 59.93361; 30.33556
Collection
Items collectedபுத்தகங்கள்,பத்திரிக்கைகள், நாளிதழ்கள், இதழ்கள், ரஷ்ய அரசுப் பதிப்புகள், இசைத் தாள்கள், இசைப்பதிவுகள், தரவுத்தளங்கள், வரைப்படங்கள், தபால் தலைகள், அச்சுப்பதிப்புகள், ஓவியங்கள், கைப்பிரதிகள் மற்றும் ஊடகம்.
அளவு36,475,000 தொகுப்புகள் (15,000,000 புத்தகங்கள்)
சேகரிப்புக்கான அளவுகோல்ரஷ்ய பதிப்புகளின் சட்ட ஆவண வைப்பு மையம்; "ரோஷிகா" ரஷ்யாவைப் பற்றிய பதிப்புகள் அல்லது வெளிநாடுகளில் வசிக்கும் ரஷ்ய மக்களால் வெளியிடப்பட்ட பதிப்புகள்; தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டு அறிவார்ந்த வெளியீடுகள் மற்றும் பிற பொருட்கள்.
Legal depositYes (Legal Deposit Law[1])
Access and use
Access requirementsவாசிப்பு அறைகள்; - இலவசம். ரஷிய குடியிருப்பாளர்கள் 14 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். வெளிநாட்டு பார்வையாளர்கள் தங்கள் விசா காலம் இருக்கும் வரையில் அனுமதிக்கப்படுவர்.
சுழற்சி8,880,000 (2007)
Population served1,150,000 (2007)
ஏனைய தகவல்கள்
நிதிநிலை569,200,000 RUB ($23,400,000)
இயக்குநர்Alexander Vershinin Edit on Wikidata
பணியாளர்கள்1,850
இணையதளம்www.nlr.ru/eng/
Map
Map

ரஷ்ய தேசிய நூலகம் (National Library of Russia -NLR) புனித பீட்டர்ஸ்பெக் நகரில் அமைந்துள்ளது ((1795 ஆண்டு முதல் 1917 ஆண்டு வரை இம்பீரியல் பொது நூலகம் என்று அறியப்பட்டது; 1917 முதல் 1925 ஆண்டு வரை ரஷ்ய பொது நூலகம் என்று அறியப்பட்டது ; 1925 ஆம் ஆண்டு முதல் 1992 ஆம் ஆண்டு வரை அரச பொது நூலகம் என்றும் (1932 ஆம் ஆண்டில் சால்டிகோவ் செசென்டிரின் என்று பெயரிடப்பட்டது). இந்த நூலகம், ரஷ்ய நாட்டின் பழமை வாய்ந்த பொது நூலகம் மட்டுமல்ல, நாட்டின் முதல் தேசிய நூலகமும் ஆகும். NLR தற்பொழுது உலகின் முக்கிய நூலகங்களுள் ஒன்றாகவும் மற்றும் உலகின் மிகப்பெரிய நூலகங்களில் பட்டியலில் எட்டாவது இடத்திலும் உள்ளது. மேலும் இது ரஷ்ய கூட்டமைப்பின் இரண்டாவது வளமான நூலகம், தேசிய பாரம்பரியத்தின் கருவூலம், மற்றும் அனைத்து ரஷ்ய தகவல், ஆராய்ச்சி மற்றும் கலாச்சார மையமாக உள்ளது. நூலகத்தின் வரலாற்றில், தேசியளவில் அச்சிடப்பட்டு வெளியீடப்படும் நூல்களை விரிவாக கையகப்படுத்துதலை இந்நூலகம் நோக்கமாக கொண்டுள்ளது மற்றும் இந்நூலகத்தில் உள்ள அனைத்து தொகுப்புகளும் இலவசமாகப் அனைவரும் பெற அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தை மாஸ்கோவில் அமைந்துள்ள ரஷிய மாநில நூலகத்தோடு குழப்பி கொள்ளக் கூடாது.

வரலாறு[தொகு]

நிறுவுதல்[தொகு]

இம்பீரியல் பொது நூலகம் 1795 ஆம் ஆண்டில் பேரரசர் கேத்தரின் என்பவரல் நிறுவப்பட்டது. இது வார்சாவில், பிஷப் சாலுஸ்கி என்பவரால் கட்டப்பட்ட புகழ்பெற்ற போலிஷ் தேசிய நூலகத்தின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டது, இது 1794 ஆம் ஆண்டில் போலந்து பிரிவினையின்போது ரஷ்யர்களால் கைப்பற்றப்பட்டது.[2]

ரஷ்யாவில் ஒரு பொது நூலகம் என்ற யோசனை 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருவானது.[3] ஆனால் ரஷ்யாவிற்கு ஞானோதயம் வரும் வரையில் உருவாகவில்லை. ஒரு ரஷ்ய பொது நூலகத்தின் திட்டம் 1766 ஆம் ஆண்டில் கேத்தரினுக்கு சமர்ப்பிக்கப்பட்டது, ஆனால் பேரரசி தான் இறப்பதற்கு 18 மாதங்கள் இருக்கும் வரையில், அதாவது 27 மே 1795 ஆம் தேதி வரையில் அனுமதி வழங்கவில்லை. நூலகக் கட்டிடம் அமைப்பதற்கான இடம் நிவஸ்கி அவன்யு மற்றும் சதாவோயா தெரு மூலையில், ரஷ்ய பேரரசின் தலைநகர் மத்தியில் அமைக்கப்பட்டது. கட்டுமான வேலை உடனடியாக ஆரம்பிக்கப் பட்டு கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகள் வரை நீடித்தது. இந்த கட்டிடத்தை வடிவமைத்தவர் யோகோர் சோகோலோவ் (1796-1801 ஆண்டுக்குள் கட்டப்பட்டது) ஒரு நியோகாசியல் பாணியில் வடிவமைக்கப்பட்டது.

நூலகத்தின் ஆரம்பம் என்பது போலந்து-லிதுவேனிய நாடுகளின் பொதுநலவாய வெளிநாட்டு மொழி துறையின் சாலுஸ்கி நூலகத்தினை (420,000 தொகுதிகள்) ரஷ்ய அரசாங்கத்தால் பகுதியளவில் பறிமுதல் செய்யப்பட்டது, ஆனால் கைபற்றப்பட்ட பல தொகுதிகள், ரஷ்ய வீரர்கள் இலாபத்திற்கு விற்றனர்.[4] 1921 ஆம் ஆண்டில் ரஷ்ய SFSR ஆல் நூலகத்தில் இருந்த சில போலிஷ் மொழி நூல்கள் (சுமார் 55,000 தலைப்புகள்) போலந்துக்கு ரஷ்யா திருப்பி அனுப்பியது.[5]

நூலகம் ஆரம்பித்த ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு, நூலகம் காம்டே மேரி-காபிரியேல்-ஃப்ளோரண்ட்-ஆகஸ்டே டி குயிகுல்-கோபியரால் நடத்தப்பட்டது. நூலகங்களின் பகுப்புகள் விசேஷமாக தொகுக்கப்பட்ட கையேட்டின் படி நூல்கள் ஒழுங்கமைக்கப்பட்டன.[6] 1810 ஆம் ஆண்டில், ரஷ்யாவின் பேரரசர் முதலாவது (I) அலெக்ஸாண்டர் நூலகச் சட்டத்தை ஒப்புக் கொண்டார், ரஷ்யாவில் அனைத்து அச்சிடப்பட்ட விஷயங்களுக்கான இரண்டு சட்ட பிரதிகள் நூலகத்தில் வைக்கப்பட்டது.[7]

நூலகம் 1812 ஆம் ஆண்டு பொது மக்களுக்காக திறப்பதாக இருந்தது, ஆனால் நெப்போலியனின் படையெடுப்பு காரணமாக அதிக மதிப்புமிக்க தொகுப்புகள் பாதுகாக்கப்பட வேண்டியிருந்ததால், இரண்டு வருடங்களுக்குத் திறப்புவிழா ஒத்திவைக்கப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் நூலகத்தை நிர்வகித்த கவுண்ட் அலெக்சாண்டர் ஸ்ட்ரோகோனோவின் கீழ், ரோஷிகா திட்டம் ஆரம்பிக்கப்பட்டது, இந்த திட்டத்தின் மூலம் ரஷ்யாவில் வந்தசேரும் வெளிநாட்டு புத்தகங்களின் ஒரு பரந்த தொகுப்பு உள்ளது. மிக மதிப்புமிக்க பொக்கிஷங்களில் சில, அதாவது ஓஸ்ட்ரோமின் நற்செய்தி என்ற புத்தகம் ஸ்லாவோனிக் தேவாலயத்தில், பழைய கிழக்கு ஸ்லாவிக் மொழியில் எழுதப்பட்ட முந்தைய புத்தகம் (இது ரஷ்ய மொழியில் இறுதியில் மொழி பெயர்கப்பட்டு உருவானது) மற்றும் ரஷ்ய முதன்மை காலவரிசை வரலாறான ஹைபியன் கோடெக்ஸ். போன்றவைகள் ஸ்ட்ரோகோனோவால் இந்நூலகத்தில் பாதுகாக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Legal Deposit Law
  2. Stuart (1989) p 201
  3. Императорская Публичная библиотека за сто лет [A Hundred Years of Imperial Public Library], 1814–1914. SPb : print. by V.F. Kirschbaum, 1914. P. 1.
  4. Малый энциклопедический словарь Брокгауза и Ефрона, published in the Imperial Russia in the early 1900s
  5. Great Soviet Encyclopedia, 3rd. edition
  6. Оленин А. Н. Опыт нового библиографического порядка для Санкт-Петербургской Публичной библиотеки [Tentative bibliographical scheme for the Public Library in Saint Petersburg]. SPb, 1809. 8, 112 p.
  7. Положение о управлении имп. Публичною библиотекою // Акты, относящиеся до нового образования Императорской библиотеки... [ Imp. Library administration/ In: Acts concerning the foundation of Imperial Library...] [SPb.], 1810. pp. 8—11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஷ்ய_தேசிய_நூலகம்&oldid=3032623" இலிருந்து மீள்விக்கப்பட்டது