அலெக்சாந்தர் பூஷ்கின்
அலெக்சாந்தர் பூஷ்கின் | |
---|---|
ஓரெஸ்டு கிப்ரீன்சுக்கி 1827 இல் வரைந்த பூஷ்கினின் ஓவியம் | |
பிறப்பு | அலெக்சாந்தர் செர்கேயெவிச் பூஷ்கின் 6 சூன் 1799 மாஸ்கோ, உருசியப் பேரரசு |
இறப்பு | 10 பெப்ரவரி 1837 சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியப் பேரரசு | (அகவை 37)
தொழில் | கவிஞர், புதின, நாடக எழுத்தாளர் |
மொழி | உருசியம், பிரெஞ்சு |
தேசியம் | உருசியர் |
காலம் | உருசிய இலக்கியத்தின் பொற்காலம் |
வகை | புதினம், கவிதைகள், நாடகம், சிறுகதை, தேவதைக் கதை |
இலக்கிய இயக்கம் | புனைவியம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | இயூஜின் ஒனேகின், காப்டனின் மகள், போரிசு கோதுனோவ், ருசுலானும் லுத்மீலாவும் |
துணைவர் | நத்தாலியா பூஷ்கினா (1831–1837) |
பிள்ளைகள் | மரியா, அலெக்சாந்தர், கிரிகோரி, நத்தாலியா |
குடும்பத்தினர் | செர்கே பூச்கின், நதியெஸ்தா கன்னிபெல் |
கையொப்பம் | |
![]() |
அலெக்சாந்தர் செர்கேயெவிச் பூஷ்கின் (Aleksandr Sergeyevich Pushkin,[1] உருசியம்: Алекса́ндр Серге́евич Пу́шкин, சூன் 6 [யூ.நா. மே 26] 1799 - பெப்ரவரி 10 [யூ.நா. சனவரி 29] 1837) உருசிய மொழியின் ஒரு சிறந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர்.[2] மிகப்பெரிய கவிஞராக பலரால் கருதப்படும் இவர் நவீன உருசிய இலக்கியத்தின் நிறுவனர்.
பூஷ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் ரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தின.
வாழ்க்கை[தொகு]
அலெக்சாந்தர் புஷ்கின் ரஷ்ய உயர்குடியைச் சேர்ந்த செர்கேய் புஷ்கினுக்கும் நதேழ்தா கண்ணிபாலுக்கும் மகனாக 1799ல் பிறந்தார். தன் மைத்துனரான ஜார்ஜா த அந்தேசுடனான துப்பாக்கிச் சண்டையில் குண்டடிபட்டு இறந்தார்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Pushkin". Random House Webster's Unabridged Dictionary.
- ↑ "புஷ்கினின் வாழ்க்கைவரலாறு (ஆங்கிலத்தில்)" இம் மூலத்தில் இருந்து 2019-04-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190401220028/http://www.faculty.virginia.edu/dostoevsky/texts/devil_pushkinbio.html.