சிறீகண்டபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சிறீகண்டபுரம்
அடைபெயர்(கள்): நகராட்சி
சிறீகண்டபுரம் is located in கேரளம்
சிறீகண்டபுரம்
சிறீகண்டபுரம்
கேரளாவில் சிறீகண்டபுரத்தின் அமைவிடம்
சிறீகண்டபுரம் is located in இந்தியா
சிறீகண்டபுரம்
சிறீகண்டபுரம்
சிறீகண்டபுரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°02′42″N 75°30′27″E / 12.0451°N 75.5074°E / 12.0451; 75.5074ஆள்கூறுகள்: 12°02′42″N 75°30′27″E / 12.0451°N 75.5074°E / 12.0451; 75.5074
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கண்ணூர்
வட்டம் (தாலுக்கா)தளிப்பறம்பு
நகராட்சி வ்விவப்பட்டது2015
பரப்பளவு
 • மொத்தம்68.72 km2 (26.53 sq mi)
ஏற்றம்[1]31 m (102 ft)
மக்கள்தொகை [2]
 • மொத்தம்33,489
 • அடர்த்தி490/km2 (1,300/sq mi)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்670631
தொலைபேசி இணைப்பு எண்0460
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐஎன்-கேஎல்
வாகனப் பதிவுகேஎல்-59
தேர்தல் தொகுதிஇரிக்கூர்
மக்களவைத் தொகுதிகண்ணூட்
நிர்வாகம்நகராட்சி

சிறீகண்டபுரம் (Sreekandapuram) என்பது இந்திய மாநிலமான கேரளவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள ஒரு முக்கியமான மலை வாழிடம் ஆகும். [3] இந்த ஊரில் சிறீகண்டபுரம் ஆறு அமைந்துள்ளது.

இடம்[தொகு]

இந்த நகரம் அரபிக் கடலில் பாயும் வளப்பட்டணம் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது கண்ணூருக்கு வடகிழக்கில் 33 கிலோமீட்டர் (21 மைல்), தளிப்பறம்பாவிலிருந்து கிழக்கே 20 கிலோமீட்டர் (12 மைல்) மற்றும் இரிட்டிக்கு வடமேற்கே 27 கிலோமீட்டர் (17 மைல்) அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

சிறீகண்டபுரம் வரலாற்று ரீதியாக முஷிக இராச்சியத்தால் ஆளப்பட்டது. சுட்டி மன்னர் சிறீகண்டனின் ஆட்சியின் காரணமாக சிறீகண்டபுரம் அல்லது சிறீகாந்தபுரம் உருவானது என்று வரலாறு கூறுகிறது. கேரளாவில் இசுலாம் பரவுவதற்கான ஆரம்ப மையங்களில் இதுவும் ஒன்றாகும். கொடுங்கல்லூருடன் சேர்ந்து இசுலாம் இங்கு பரவியது என்று நம்பப்படுகிறது. இசுலாம் கேரளாவுக்கு வந்த ஆண்டுகளைப் பற்றி வரலாற்றாசிரியர்களிடையே கருத்து வேறுபாடு இருந்தாலும், முகமது நபியின் காலத்தில் இசுலாம் இங்கு வந்தது என்று நம்பப்படுகிறது. மாலிக் தினாரும் அவரது குழுவும் வளப்பட்டணம் ஆறு வழியாக பழயங்காடி ஆற்றங்கரையை அடைந்ததாக வரலாறு கூறுகிறது. இசுலாத்தின் தீர்க்கதரிசிகளின் குறிப்புகளில், அவர்கள் ஜெரூல், தஹத் மற்றும் ஹயாத் என்ற அரபு பெயர்களால் அறியப்படுகிறார்கள். ஜெரூல் என்ற அரபு பெயர் பின்னர் செரோல், ஹயாத் அய்யகத் மற்றும் தா தாஜாத் என்று அழைக்கப்பட்டது. இதன்படி, இசுலாம் இந்த நாட்டிற்கு வந்து 1400 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது.

பொ.ச.1130 மற்றும் 1140களில் மங்களூரில் வசித்து வந்த யூத வணிகரான ஆபிரகாம் பென் யிஜுவின் பயணங்களில், யூர்பாட்டன் என்று இந்த ஊரைப் பற்றி எழுதியுள்ளார். [4]

நிர்வாகம்[தொகு]

30 வார்டுகளைக் கொண்ட நகரம் 1 நவம்பர் 2015 அன்று நகராட்சியாக நிறுவப்பட்டது. [5]

நிலவியல்[தொகு]

தளிபரம்பா, இரிட்டி, இரிக்கூர், மையில் செம்பந்தொட்டி, எருவீசை, செங்கலை போன்ற கிராமங்கள் இதன் அருகில் அமைந்துள்ளன

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இதன் மக்கள் தொகை 33,489 என்ற அளவில் இருந்தது. இதில் 16,186 ஆண்களும், 17,303 பெண்களும் இருந்தனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1069 பெண்கள் என இருந்தது. பேரூராட்சி வரம்பில் 7,960 வீடுகள் உள்ளன. [6]

போக்குவரத்து[தொகு]

கேரள மாநில நெடுஞ்சாலை (எண் 36) சிறீகண்டபுரம் நகரம் வழியாக தளிபரம்பா மற்றும் இரிட்டியை இணைக்கிறது. கிழக்கு நோக்கிச் செல்லும் சாலை மைசூர் மற்றும் பெங்களூர் மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளுடன் இணைகிறது.

தேசிய நெடுஞ்சாலை (என்.எச் 66 ) தளிபரம்பா நகரம் வழியாக செல்கிறது. இதன் மூலம் மங்களூர் மற்றும் மும்பையை வடக்குப் பகுதியிலும், கொச்சின் மற்றும் திருவனந்தபுரத்தை தெற்குப் பகுதியிலும் அணுகலாம்.

அருகிலுள்ள தொடர் வண்டி நிலையம் 34 கி.மீ. தொலைவில் மங்களூர் - பாலக்காடு பாதையில் அமைந்துள்ள கண்ணூர் தொடருந்து நிலையம் ஆகும்.

கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் 25 கி.மீ. தூரத்திலுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. https://elevationmap.net ›
  2. http://www.kudumbashree.org ›
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2019-09-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-09-29 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  4. Amitav Ghosh, In an Antique Land (Gurgaon: Penguin Random House India, 2009) [first publ. Ravi Dayal 1992); ISBN 9780143066491, pp. 233-35.
  5. http://www.thehindu.com › ... › Kerala LDF retains power in Iritty Municipality - The Hindu
  6. censusindia.gov.in › dchb › 3...PDF Web results Kannur - DISTRICT CENSUS HANDBOOK(refer page nos:272)
Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sreekandapuram
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீகண்டபுரம்&oldid=3410371" இருந்து மீள்விக்கப்பட்டது