அந்தியோக்கியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
101 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
திருத்தம்
சி (சேர்க்கை)
 
சி (திருத்தம்)
==அந்தியோக்கியா உருவான வரலாறு==
 
கி.மு. 4ஆம் நூற்றாண்டின் இறுதியில் மகா அலக்சாந்தரின் தளபதிகளுள் ஒருவராகிய முதலாம் செலூக்கஸ் நிக்கட்டோர் என்பவர் அந்தியோக்கியாவை நிறுவினார். இந்நகரம் மிகுந்த வளர்ச்சியடைந்து, நடு ஆசியாவில் அலக்சாந்திரியா நகரையே விஞ்சும் அளவுக்கு விரிவுற்றது. இந்நகரத்தில்தான் கிறித்தவ சமயம் முதலில் யூதர் நடுவிலும் பின்னர் யூதரல்லாத பிற இனத்தவரிடையேஇனத்தவரிடையேயும் கி.பி. முதல் நூற்றாண்டில் முனைப்பாகப் பரவத்தொடங்கியது.
 
அந்தியோக்கியா பண்டைய சிரிய நாட்டை ஒருங்கிணைத்த நான்கு பெருநகர்களுள் ஒன்றாகும் (பிற நகர்கள்: செலூக்கியா, அப்பமேயா, இலவோதிக்கேயா). அந்நகர மக்கள் "அந்தியோக்கியர்" என்று அழைக்கப்பட்டனர். அதன் உச்ச வளர்ச்சியின்போது அங்கே ஐந்து இலட்சம் மக்கள் வாழ்ந்தார்களாம். அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டதாலும், [[மம்லுக் வம்சம்|மம்லுக்]] இராணுவம் 1268இல் பேரளவிலான மக்களைக் கொன்றுகுவித்ததாலும் அந்தியோக்கியா நடுக்காலத்தில் சீரழியத் தொடங்கியது. மங்கோலியர் படையெடுப்பால் வர்த்தக வழிகள் அந்தியோக்கியாவின் ஊடே செல்ல தடை எழுந்ததும் இதற்கு ஒரு காரணமாகும்.
 
கி.மு. 83இல் அந்தியோக்கியா அர்மீனிய ஆட்சியின் கீழ் வந்தது. ஆனால், கி.மு. 65இல் அந்தியோக்கிய மக்கள் உரோமையரை அணுகினர். உரோமை ஆட்சியின் போது அந்தியோக்கிய "சுதந்திர நகர்" என்னும் நிலையில் தொடர்ந்தது. உரோமைப் பேரரசர்கள் அந்தியோக்கியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை எகிப்திய அலக்சாந்திரியாவை விடவும் மேலாக வளர்த்தெடுத்தனர். ஜூலியஸ் சீசர் கி.மு. 47இல் அந்தியோவுக்குச் சென்று அது தொடர்ந்து "சுதந்திர நகர்" என்னும் நிலையில் நீடிக்கும் என்று உறுதியளித்தார். சில்ப்பியுஸ் குன்றத்தில் ஜூப்பிட்டர் கடவுளுக்கு மாபெரும் கோவில் கட்டப்பட்டது. உரோமைப் பாணியில் அமைந்த பொதுவெளி (forum) உருவாக்கப்பட்டது. திபேரியுஸ் மன்னரின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட தூண்கள் வரிசை அமைந்த வழி சில்ப்பியுஸ் குன்றத்துக்கு இட்டுச்சென்றது. அக்ரிப்பா, திரயான், அந்தோனியுஸ் பீயுஸ், ஹேட்ரியன் போன்ற உரோமை மன்னர்கள் அந்தியோக்கியாவை அழகுபடுத்தியதோடு பொதுமக்களின் பயன்பாட்டுக்கான கட்டடங்களையும் உருவாக்கினர். அந்தியோக்கியாவில் கோம்மொதுஸ் மன்னன் ஒலிம்பிக் விளையாட்டுகள் நிகழ்த்தினார். கி.பி. 256இல் பெர்சியப் படைகள் அந்தியோக்கியவைத் தாக்கி மக்கள் பலரைக் கொன்றன.
 
==கிறித்தவ வரலாற்றில் அந்தியோக்கியா==
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/735918" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி