கருவஞ்சல்

ஆள்கூறுகள்: 12°10′02″N 75°27′43″E / 12.1673°N 75.4619°E / 12.1673; 75.4619
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருவஞ்சல்
நகரம்
பாலக்காயம் தட்டு ஒரு காட்சி
பாலக்காயம் தட்டு ஒரு காட்சி
கருவஞ்சல் is located in கேரளம்
கருவஞ்சல்
கருவஞ்சல்
கேரளாவில் கருவஞ்சலின் அமைவிடம்
கருவஞ்சல் is located in இந்தியா
கருவஞ்சல்
கருவஞ்சல்
கருவஞ்சல் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°10′02″N 75°27′43″E / 12.1673°N 75.4619°E / 12.1673; 75.4619
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்கண்ணூர்
வட்டம்தளிபரம்பு
அரசு
 • நிர்வாகம்நடுவில் கிராம ஊராட்சி
ஏற்றம்[1]120 m (390 ft)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்670571
தொலைபேசி இணைப்பு குறியீடு04982
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐஎன்-கேஎல்
வாகனப் பதிவுகேஎல் 59
தேர்தல் தொகுதிஇரிக்கூர்
மக்களவைத் தொகுதிகண்ணூர்
அருகிலுள்ள தொடருந்து நிலையம்கண்னூர், கண்ணபுரம்

கருவஞ்சல் (Karuvanchal) என்பது இந்திய மாநிலமான கேரளவில் கண்ணூர் மாவட்டத்திலுள்ள மலைப்பாங்கான ஒரு நகரமாகும். கேரள மலைச்சாலை எண் 59 இதன் வழியாகச் செல்கிறது.[2]

அமைவிடம்[தொகு]

கருவஞ்சல் நகரம் குப்பம் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. குப்பம் ஆறு மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து உருவாகி அரபிக் கடலில் பாய்கிறது. இது கிழக்கே தளிப்பரம்பு-குடகு எல்லை சாலையில் அமைந்துள்ளது. தளிப்பறம்புவின் வடகிழக்கில் சுமார் 22 கி.மீ. தொலைவிலும், கண்ணூருலிருந்து 44 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[3]

பொருளாதாரம்[தொகு]

நகரம் முக்கியமாக ஒரு விவசாய பொருளாதாரத்தைச் சார்ந்துள்ளது. இரப்பர், தென்னை, பாக்கு, முந்திரி, மிளகு போன்ற பயிர்கள் இங்கு பயிரிடப்படுகின்றன.

மாநிலமெங்குமுள்ள மலைப்பகுதிகளிலுள்ள சிறு விவசாயிகளின் அமைப்பான கேரள வர்த்தகக் கூட்டணியின் சார்பில் 2016 ஆம் ஆண்டு 'ஐந்தாவது விதைத் திருவிழா' கருவஞ்சலில் நடைபெற்றது. விவசாயப் பயிர்களையும் விதைகளின் பெரிய தொகுப்பையும் இது காட்சிப்படுத்தியது.[4]

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையின்படி, இங்கு, 12,985 ஆண்களும் 12,890 பெண்களும் என 25,875 மக்கள் உள்ளனர்.[5]

சுற்றுலா[தொகு]

கருவஞ்சல் என்பது பாலக்காயம் தட்டுக்கான நுழைவாயிலாகும். இது இப்பகுதியில் உள்ள முக்கியச் சுற்றுலா தலங்களில் ஒன்று. இது மலபாரின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. இங்கு சாகச சுற்றுலாவை விரும்புவோருக்கான வசதியும் செய்யப்ப்பட்டுள்ளது.[6] சாகசப் பூங்கா, மலையேற்றம், கூடாரங்கள், இயற்கை காட்சிகள் ஆகியவை இங்கு முக்கிய சுற்றுலா ஆர்வங்களாகும். கயிறு சாகசங்கள், பந்து விளையாட்டு , துப்பாக்கி சுடுதல், வில்வித்தை ஆகியவை பூங்காவின் ஈர்ப்புகளாகும்.[7]

போக்குவரத்து[தொகு]

கேரள மலை நெடுஞ்சாலை எண் 59 கருவஞ்சல் நகரம் வழியாக இரிட்டியுடன் பிற நகரங்களையும் இணைகிறது. இரிட்டியின் கிழக்கே உள்ள சாலை மைசூருடனும், பெங்களூருடனும் இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 66 தளிப்பறம்பு வழியாகச் செல்கிறது. மங்களூரையும் மும்பையையும் வடக்குப் பக்கத்திலும், கொச்சியையும் திருவனந்தபுரத்தையும் தெற்குப் பகுதியிலிருந்து அணுகலாம்.

கண்ணூர்,தொடருந்து நிலையமும், கண்ணபுரம் தொடருந்து நிலையமும் அருகிலுள்ளது.கண்ணூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் 43 கி.மீ தூரத்தில் உள்ளது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருவஞ்சல்&oldid=3174789" இலிருந்து மீள்விக்கப்பட்டது