கருணாநிதி குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கருணாநிதி குடும்பம் என்பது தமிழ்நாட்டில், இந்தியாவில் அரசியல், வணிக, ஊடகத்துறை செல்வாக்கு மிக்க குடும்பங்களில் ஒன்றாகும். கருணாநிதி, அவரது மகன்கள், மகள்கள், மருமக்கள்கள் என விரிந்த அவரின் குடும்பத்தவர்கள் தமிழ்நாட்டின் பல துறைகளில் செல்வாக்குச் செலுத்துகிறார்கள்.

குடும்பம்[தொகு]

மனைவிகள்

  • பத்மாவதி
  • ராசாத்தி அம்மாள்
  • தயாளு அம்மாள்

சகோதரியின் பேரன்கள்கள்

அரசியல்[தொகு]

கருணாநிதி[தொகு]

சமூக இயக்கமாக இருந்த திராவிட இயக்கம், 1949- ல் திமுக அரசியல் கட்சியாக உருவெடுத்து, 1967-ல் முதல்முறையாக அண்ணாத்துரை தலைமையில் ஆட்சியை வென்றது. அண்ணாத்துரை 1969 இல் இறந்தார். அவருக்குப் பின் மு. கருணாநிதி திமுகவின் தலைவராகவும், தமிழக முதல்வராகவும் தெரிவானார். அன்று முதல் கருணாந்தி ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்துள்ளார். தற்போது 87 வயதைத் தாண்டிய கருணாநிதி தமிழ்நாட்டின் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவாராக உள்ளார். 2008-2009 இல் இவரது ஆட்சியின் போதே பெரும் ஈழத்தமிழர் இனப்படுகொலை இலங்கையில் நடந்தது. நடுவண் அரசு இவரது கட்சியின் ஆதரவிலேயே ஆட்சியில் இருந்தும் இவர் எந்தவித பலனைத் தந்த நடவடிக்கைகளை எடுக்காதற்காக அப்பொழுதும் பின்னரும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.[1][2] இதே காலப் பகுதியில் கருணாநிதியின் பிற குடும்பத்தாரும் ஊழல் விவகாரங்களிலும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.[3]

மு. க. இசுடாலின்[தொகு]

கருணாநியின் மகன். தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் 2009-2011 காலப் பகுதியில் இருந்தவர். அதற்கு முன்னர் சட்டமன்ற அவை உறுப்பினராகவும் சென்னை மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் இசுடாலின் பொறுப்பு வகித்துள்ளார். இவரே கருணாநிதியின் தேர்தெடுக்கப்பட்ட திமுக வாரிசாக ஊடகத்தில் அறியப்படுகிறார்.

மு. க. அழகிரி[தொகு]

கருணாநிதியின் மகன். 2009 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்குப் பின் அமைக்கப்பட்ட மன்மோகன்சிங்கின் நடுவண் அமைச்சரவையில் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் பதவியை வகித்துவருகிறார். இவர் கருணாநிதிக்குப் பின்பு திமுக தலைமை பதவிக்கு போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனிமொழி[தொகு]

கருணாநிதியின் மகள். நடுவண் அரசு சட்டமன்ற அவை உறுப்பினராக உள்ளார். இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வுத்துறையால் விசாரிக்கப்படுகிறார்.

முரசொலி மாறன்[தொகு]

கருணாநிதியின், மூத்த சகோதரி சண்முகத்தம்மாளின் மகன். திமுக பரப்புரை பத்திரிகையான முரசொலியின் ஆசிரியராக இருந்தவர். மூன்று முறை நடுவண் அமைச்சராக இருந்தவர்.

முரசொலி செல்வம்[தொகு]

கருணாநிதியின், மூத்த சகோதரி சண்முகத்தம்மாளின் மற்றொரு மகன். கருணாநிதியின் மகள் செல்வியை மணந்துள்ளார். பெங்களூரில் ஒளிபரப்பாகும் சன் குழுமத்தை சேர்ந்த கன்னட மொழியிலானா உதயா தொலைக்காட்சியை நிர்வகித்து வருகிறார்.

தயாநிதி மாறன்[தொகு]

முரசொலி மாறனின் மகன், கருணாநிதியின், சகோதரியின் பேரன். முன்னர் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொடர்புத் துறையின் நடுவண் அமைச்சராக இருந்தவர். நெசவுத்துறை அமைச்சராக இருந்து ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவி விலகினார்.

ஊடகத்துறை[தொகு]

வணிகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கருணாநிதி_குடும்பம்&oldid=1639804" இருந்து மீள்விக்கப்பட்டது