ஒளி எழுதுகோல்
ஒளி எழுதுகோல்(light pen) என்பது கணினிக்குத் தகவலை உள்ளீடு செய்ய உதவும் ஒரு வெளிப்புறக் கருவி ஆகும். இது கணினியின் எதிர்மின் கதிர் குழாயுடன் தொழில்நுட்பத்தில் செயல்படும் திரையுடன் இணைந்து செயலாற்றும் 'ஒளி உணர் கோல்' ஆகும். இது தொடுதிரையைப் போன்றே ஆனால் அதிக துல்லியத்துடன் திரையில் காட்சியில் காட்டப்படும் பொருளின் மீது சுட்டுவதற்கும், திரையின் மீது வரைவதற்கும் உதவுகிறது. ஒளி எழுதுகோலானது பலவிதமான எதிர்மின் கதிர் குழாய் தொழில்நுட்பத்தினைச் சார்ந்த காட்சிகருவிகளின் மீது வேலைசெய்தாலும், திரவப் படிகக் காட்சியின் மீது தெளிவாக வேலைசெய்யும் திறமையற்றது.
1955ல், மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தால் உருவாக்கப்பட்டது. [1][2]
ஒளி எழுதுகோலின் தொழில்நுட்பமானது, எதிர்மின் கதிர் குழாய் திரையினை எலக்ட்ரான் கற்றை மூலம் ஸ்கேன் செய்யும்பொழுது திரையின் அருகருகேயுள்ள இரு புள்ளிகளுக்கிடையே ஏற்படும் ஒளிமாற்ற நிகழ்வின் நேரத்தை கணினியோடு பரிமாறிக்கொள்கிறது. எதிர்மின் கதிர் குழாயின் எலக்ட்ரான் கற்றை கொண்டு ஒரு நேரத்தில் திரையின் ஒரு புள்ளியை (பிக்சல்) மட்டும் ஸ்கேன் செய்யமுடியும் என்பதால் கணினி எளிதாக திரையின் பல்வேறு புள்ளிகளை ஸ்கேன் செய்யும் நேரத்தினைப் பின்தொடர முடியும்.
மேலும் பார்க்க[தொகு]
சான்றுகள்[தொகு]
- ↑ "A Critical History of Computer Graphics and Animation". 2009-05-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-05-04 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "The Computer Desktop Encyclopedia (entry for Light Pen)". 2009-05-04 அன்று பார்க்கப்பட்டது.