இயக்குபிடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு வகை நிகழ்பட ஆட்ட இயக்குபிடி.

ஜாய்ஸ்டிக் அல்லது இயக்குபிடி என்பது ஒரு குச்சியை உள்ளடக்கிய ஒரு உள்ளீட்டுக் கருவி ஆகும். இதன் அடித்தள மையத்தில் உள்ள அந்த குச்சியின் மூலம் சுழலும் கோணம் அல்லது இயக்கத்தை அதை கட்டுப்படுத்தும் சாதனத்திற்கு தெரிவிக்கிறது. இயக்குபிடிகள் பெரும்பாலும் நிகழ்பட விளையாட்டுகளை கட்டுப்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இவை பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அழுத்தும்-பொத்தான்களை கொண்டுள்ளன. மற்றும் இதன் இயக்க நிலையை கணினி மூலம் படிக்கப்பட இயலும்.

மேலும் இந்த இயக்குபிடிகள் கிரேன்கள், பார வண்டிகள், நீரடி ஆளில்லா வாகனங்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் போன்ற கட்டுப்பாட்டு இயந்திரங்களை கையாளப் பயன்படுத்தப்படுகின்றன.

வான்போக்குவரத்து[தொகு]

ஒரு மிதவை வானூர்தியின் விமானியறையில் புலப்படும் அதன் கருப்பு நிற இயக்குபிடி

இயக்குபிடிகள் விமானங்களை கட்டுப்படுத்த உதவுகின்றன. இயக்குபிடிகள் ஆரம்ப விமானங்களில் இருந்தன, இருப்பினும் அவற்றின் இயந்திர மூலங்கள் நிச்சயமற்ற இருந்தன. இவை இந்த வகை விமானங்களை குறிப்பிட்ட கோணத்தில், குறிப்பிட்ட சுழற்சியில் இயக்க பயன்படுத்தப்படுகின்றன.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜாய்ஸ்டிக்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இயக்குபிடி&oldid=2753045" இருந்து மீள்விக்கப்பட்டது