விசைப்பலகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசைப்பலகை
விசைப்பலகை
தமிழ்99 விசைப்பலகை தளக்கோலம்

விசைப்பலகை (Keyboard) அல்லது தட்டச்சுப்பலகை கணினிக்குத் தகவல்களை உள்ளீடு செய்ய உதவும் ஒரு வெளிப்புறக் கருவி. இந்த விசைப்பலகைகளில் எழுத்துகள், எண்கள், குறிகள், கட்டளைகள் ஆகிய விசைகள் அடுத்தடுத்து இருக்கும். தேவைக்கேற்ப இந்த விசைகளை தட்டுவதன் மூலம் கணினிக்கு கட்டளைகளையும் உள்ளீடுகளையும் வழங்கலாம். பெரும்பாலான மொழிகளுக்கு அவற்றின் எழுத்துகளைக் கொண்ட விசைப்பலகைகள் உள்ளன. தமிழ் 99, தமிழ்நாடு அரசின் ஏற்பு பெற்ற தமிழ் மொழிக்கான தரப்படுத்தப்பட்ட விசைப்பலகை ஆகும். ரெங்கநாதன் விசைப்பலகை, இலங்கை அரசினால் சீர்தரப்படுத்தப்பட்ட தமிழ் விசைப்பலகை ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசைப்பலகை&oldid=3738591" இலிருந்து மீள்விக்கப்பட்டது