நெகிழ் வட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
8 அங்குலம், 5 14 அங்குலம், 3 12 அங்குலம் ஆகிய அளவுகளையுடைய நெகிழ் வட்டுகள்

நெகிழ் வட்டு (Floppy Disk) எனப்படுவது காந்தத் தொழினுட்பவியலைப் பயன்படுத்தித் தரவுகளை வாசிப்பதும் எழுதுவதும் நடைபெறும் கொண்டு செல்லக்கூடிய வட்டாகும்.[1] இங்கு தரவுகளை வாசிப்பதும் எழுதுவதும் மிகக் குறைந்த கதியில் நடைபெறும். கொள்ளளவு குறைவாகக் காணப்படுகின்றமையால் இன்றைய காலத்தில் நெகிழ் வட்டின் பயன்பாடு குறைந்து கொண்டே செல்கின்றது.

அளவுகள்[தொகு]

நெகிழ் வட்டுகள் 8 அங்குலம் (200 மில்லிமீற்றர்), 5.25 அங்குலம் (133 மில்லிமீற்றர்), 3.5 அங்குலம் (89 மில்லிமீற்றர்) ஆகிய அளவுகளில் தயாரிக்கப்படுகின்றன.[2]

கொள்ளளவு[தொகு]

பொதுவாக 3.5 அங்குல நெகிழ் வட்டு ஒன்றின் கொள்ளளவு 1.44 மெகாபைற்று ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நெகிழ்_வட்டு&oldid=3711574" இருந்து மீள்விக்கப்பட்டது