ஐஇஇஇ 1394

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐஇஇஇ 1394 இடைமுகப்பு

ஐஇஇஇ 1394 இடைமுகப்பின் சின்னம்
வகைதொடர்
வடிவமைப்பாளர்ஐஇஇஇ பி1394 தொழிற்குழு
வடிவமைத்த நாள்1995
தயாரிப்பாளர்வெவ்வேறு
வெளியீடு1995–இன்று
நீளம்4.5 மீட்டர்கள் (அதியுயர்)
அகலம்1
Hot pluggableஆம்
Daisy chainஆம், 62 கருவிகள் வரை
வெளிவாரிஆம்
Pins4, 6, 9, 12
அதிகூடிய அழுத்தம்30 V
அதிகூடிய. மின்னோட்டம்1.5 A
Data signalஆம்
Bitrate400–3200 Mbit/செ (50–400 MB/s)

ஐஇஇஇ 1394 இடைமுகப்பு (IEEE 1394 interface) எனப்படுவது நிலையான இடைமுகப்பு வகையைச் சேர்ந்த அதியுயர் வேக வரிசை தொடர் தகவல் பரிமாற்ற ஊடகமாகும். இதனால் 400 MB/s வரையான வேகத்தில் தகவல் பரிமாற்ற முடிவதால் நிஜ நேர தகவல் தொடர்பு ஊடகமாக கருதப்படுகிறது.

இது FireWire என்ற பெயரில் ஆப்பிள் நிறுவனத்தால் 1980 களில் உருவாக்கப்பட்டது. ஐஇஇஇ ஆனது அகிலத் தொடர் பாட்டை (USB) இன் வகையைச் சேர்ந்தது, எனினும் பயன்பாட்டில் யு.எஸ்.பி வகையே அதிகமாக உள்ளது. அப்பிள் நிறுவனத்தின் 2000 ஆண்டுகளில் வெளிவந்த கணிணிகளில் FireWire (ஐ.இ.இ.இ) இணைக்க கூடிய இடைமுகப்பு காணப்பட்டது எனினும் அது தற்போது குறைவடைந்து 2013 FireWire இன் சிறிய அளவுள்ள இடைமுகப்பு காணப்படுகிறது. இதே இடைமுகப்பு சொனி நிறுவனத்தால் ஐ.லின்க் (I.LINK) என அழைக்கப் படுகிறது. அதிக செலவு காரணமாக சில வேளைகளில் ஐ.இ.இ.இ 1394 இற்கு மாற்றாக parallel SCSI என்ற இடைமுகம் பயன்படுத்தப்படுகிறது.

ஐ.இ.இ.இ 1394 ஆனது பெரும்பாலும் உயர்தர ஒலி, ஒளி பரிமாற்றத்திற்கே அதிக அளவில் பயன் படுத்தப்படுகிறது. இவ் இணைப்பு முறை கம்பியில்லா இணைப்பு (wireless), ஒளியிழை இணைப்பு (fiber optic), சாதாரண வடம் (coaxial) ஆகிய மூன்று முறைகளிலும் இணைக்க முடிகிறது.

வளர்ச்சி[தொகு]

6 முனைகளை உடையதும், 4 முனைகளை உடையதும் FireWire 400 வகையை சேர்ந்த இணைப்பான்கள்

ஐ.இ.இ.இ 1394 ஆனது தொடர் தகவல் பரிமாற்ற (serial bus) வகையைச் சேர்ந்தது ஆகும் அதாவது இங்கு தகவல் பரிமாற்றத்தின் போது ஒரு தடவையில் ஒரு பிட் தகவலே அனுப்ப, பெற முடியும். ஒரு பிட் தகவலை அனுப்ப, பெற எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை வைத்தே இதன் வேகம் கணிக்கப்படுகிறது. இதற்கு முற்றிலும் எதிரான முறையில் பரல்லெல் (Parallel) முறை தகவல் பரிமாற்றம் காணப்படுகிறது. இங்கு தகவல் தொடராக அல்லாமல் ஒரே தடவையில் குறிப்பிட்ட அளவு தகவல் பரிமாற்றப்படுகிறது இதற்கா இதில் அதிகளவு முனைகள் (pins) காணப்படுகிறது.

தொழில்நுட்ப விபரங்கள்[தொகு]

மாற்று வழியாக எதர்நெட் (Ethernet) மூலமாக இணைக்க கூடிய 1394c வகையை சேர்ந்த இணைப்பான்

ஐ.இ.இ.இ 1394 இன் மூலம் 63 இற்கும் அதிகமான வெவ்வேறு வகையைச் சேர்ந்த கருவிகளை இணைக்கப்படுகிறது. வலையமைப்பு (Networking) துறையிலும் குறிப்பாக சகா-சகா (Peer-to-Peer) போன்ற ஒரே கணினியில் பல கணினிகளையும், ஒரே வருடியை, அச்சு இயந்திரத்தை பல கணினிகளாலும் பயன்படுத்தும் வகையில் அமைப்பதற்கு இது பெரிதும் உதவுகிறது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஇஇஇ_1394&oldid=1574804" இலிருந்து மீள்விக்கப்பட்டது