சுட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு தற்கால கணினிச் சுட்டி. இதில் வழமையாக காணப்படும் இரண்டு பொத்தான்களும் உருட்டுச் சக்கரமும் உள்ளன.

சுட்டி என்பது கணினிக்குத் தகவலை உள்ளீடு செய்ய உதவும் ஒரு வெளிப்புறக் கருவி ஆகும். காட்சித்திரையில் தோன்றும் எழுத்துகளையும் படங்களையும் இக்கருவி சுட்ட வல்லது. கைக்கடக்கமான பெட்டியாகிய இச்சுட்டி, படத்தில் காட்டப்பட்டுள்ளது போல அதன் மேல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விசைகளைக் கொண்டிருக்கும். இச்சுட்டியைத் தட்டையான ஒரு பரப்பில் வைத்து நகர்த்துவதன் மூலம் கணினித் திரையிலுள்ள ஒரு குறியீட்டின் நகர்வை நாம் கட்டுப்படுத்தலாம். அதுமட்டுமின்றி, சுட்டியைக் கொண்டு நாம் திரையில் காணப்படும் பொருள்களைத் தேர்தெடுக்கலாம்; அப்பொருளை நகர்த்தலாம்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சுட்டி&oldid=2220044" இருந்து மீள்விக்கப்பட்டது