இலங்கைப் பிரீமியர் இலீகு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கைப் பிரீமியர் இலீகு
SLPLLogo.jpg
நாடு(கள்) {{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை
நிர்வாகி(கள்) இலங்கைத் துடுப்பாட்ட வாரியம்
துடுப்பாட்ட வடிவம் இருபது20
முதலாவது போட்டி 2012
சுற்றுப் போட்டி வடிவம் தொடர்சுழல்முறையும் ஒற்றை வெளியேற்றமும்
தகைமை சாம்பியன்சு இலீகு இருபது20

இலங்கைப் பிரீமியர் இலீகு அல்லது இலங்கைப் பெருங்குழு தொடர் விளையாட்டுப் போட்டிகள் (Sri Lanka Premier League) என்பது இலங்கைத் துடுப்பாட்ட வாரியத்தால் இலங்கையில் நடத்தப்படப் போகின்ற இருபது20 துடுப்பாட்டப் போட்டி ஆகும்.[1] இதனுடைய முதலாவது சுற்றுப் போட்டியானது ஆகத்து 10, 2012 இல் தொடங்குகிறது.[2] இப்போட்டியானது அனைத்து மாகாண இருபது20 சுற்றுப் போட்டிக்குப் பதிலாக நடைபெறுகின்றது.

வரலாறு[தொகு]

பின்னணி[தொகு]

மே 2011இல் இந்தியப் பிரீமியர் இலீகை மாதிரியாகக் கொண்டு ஒரு துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியை நடத்துவுள்ளதாக இலங்கைத் துடுப்பாட்ட வாரியம் அறிவித்தது.

2011 சுற்றுப் போட்டி[தொகு]

சூலை 19, 2011இலிருந்து ஆகத்து 4, 2011 வரை இச்சுற்றுப் போட்டி கொழும்பிலுள்ள ஆர். பிரேமதாச அரங்கத்தில் நடைபெறுவதாக இருந்தது.[3] ஆனாலும் பின்னர், சுற்றுப் போட்டி 2012இற்குப் பிற்போடப்பட்டது.[4]

முதற்சுற்றுப் போட்டி[தொகு]

இலங்கைப் பிரீமியர் இலீகின் முதற்சுற்றுப் போட்டியானது கொழும்பிலும் கண்டியிலும் ஆகத்து 10, 2012இலிருந்து ஆகத்து 31, 2012 வரை உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்களைக் கொண்டு நடைபெறவுள்ளது.[5]

அணிகள்[தொகு]

அணி மாகாணம் முக்கிய வீரர்
பசுனகிர பியர்சு மேன்மாகாணம் திலகரத்ன தில்சான்
கந்துரட்ட கைட்சு மத்திய மாகாணம் குமார் சங்கக்கார
நெகெனகிர நாகாசு கிழக்கு மாகாணம் அஞ்செலோ மாத்தியூசு
உருகுணை இரைனோசு தென்மாகாணம் இலசித்து மாலிங்க
உதுர ஒரிக்சசு வட மாகாணம் முத்தையா முரளிதரன்
ஊவா உனிக்கோன்சு ஊவா மாகாணம் கிறிசு கெயில்
வயம்ப உவொல்வ்சு வடமேன்மாகாணம் மகேல சயவர்தன

[6]

போட்டி வரலாறு[தொகு]

ஆண்டு இறுதிப் போட்டி நடைபெறும் இடம் சுற்றுப் போட்டி விருது பெற்றவர் இறுதிப் போட்டி
வென்ற அணி முடிவு தோற்ற அணி
2011 ஆர். பிரேமதாச அரங்கம் கைவிடப்பட்டது.
2012 ஆர். பிரேமதாச அரங்கம்

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]