இரேனியம்(III) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரேனியம்(III) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரேனியம்(III) அயோடைடு, மூவயோடோ இரேனியம்
இனங்காட்டிகள்
15622-42-1
ChemSpider 21170009
EC number 239-698-9
InChI
  • InChI=1S/3HI.Re/h3*1H;/q;;;+3/p-3
    Key: DDMQJDMHHOTHKW-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12984320
SMILES
  • I[Re](I)I
பண்புகள்
I3Re
வாய்ப்பாட்டு எடை 566.92 g·mol−1
தோற்றம் ஊதா கருப்பு படிகங்கள்
அடர்த்தி 6.37 கி/செ,மீ3
உருகுநிலை 800 °C (1,470 °F; 1,070 K)
சிறிதளவு கரையும்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச் சரிவச்சு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இரேனியம்(III) அயோடைடு (Rhenium(III) iodide) என்பது ReI3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரேனியம் மற்றும் அயோடின் சேர்மங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]

தயாரிப்பு[தொகு]

இரேனியம் டெட்ரா அயோடைடு சேர்மத்தை சிதைவு வினைக்கு உட்படுத்தி இரேனியம்(III) அயோடைடு தயாரிக்கப்படுகிறது.:[3][4]

2ReI4 -> 2ReI3 + I2

பெர் இரேனிக் அமிலம் மற்றும் ஐதரயோடிக் அமிலம் ஆகியவற்றின் கலவையில் எத்தனாலை சேர்ப்பதன் மூலம் இரேனியம்(III) அயோடைடு தயாரிப்பது மற்றொரு வழிமுறையாகும்.

HReO4 + 3HI + 2C2H5OH → ReI3 + 4H2O + 2CH3CHO

பண்புகள்[தொகு]

இரேனியம்(III) அயோடைடு ஊதா கலந்த கருப்பு நிறப் படிகங்களாக உருவாகிறது. நீர், அசிட்டோன், எத்தனால், ஈதர் மற்றும் நீர்த்த அமிலக் கரைசல்களில் சிறிதளவு கரையும்.

வேதிப் பண்புகள்[தொகு]

170 ° செல்சியசு வெப்பநிலையில் இரேனியம்(III) அயோடைடை வெற்றிடத்தில் சூடாக்கும்போது இரேனியம்(II) அயோடைடாக சிதைகிறது. 380 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கினால் இரேனியம்(I) அயோடைடாக சிதைகிறது.

2ReI3 -> 2ReI2 + I2
ReI3 -> ReI + I2

மேற்கோள்கள்[தொகு]

  1. "Rhenium(III) Iodide". American Elements. பார்க்கப்பட்ட நாள் 6 May 2023.
  2. "Rhenium(III) iodide". Alfa Chemistry. பார்க்கப்பட்ட நாள் 6 May 2023.
  3. Kemmitt, R. D. W.; Peacock, R. D. (26 January 2016) (in en). The Chemistry of Manganese, Technetium and Rhenium: Pergamon Texts in Inorganic Chemistry. Elsevier. பக். 918. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4831-8762-4. https://books.google.com/books?id=c0n-BAAAQBAJ&dq=rhenium+triiodide&pg=PA918. பார்த்த நாள்: 6 May 2023. 
  4. (in en) Inorganic Syntheses, Volume 7. John Wiley & Sons. 22 September 2009. பக். 185. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-470-13270-8. https://books.google.com/books?id=_MlO2NrHPHwC&dq=rhenium+triiodide&pg=PA185. பார்த்த நாள்: 6 May 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேனியம்(III)_அயோடைடு&oldid=3889128" இலிருந்து மீள்விக்கப்பட்டது