இரவிகாந்த்
இரவிகாந்த் | |
---|---|
பிறப்பு | இரவி சீனிவாசன் 28 மே 1962 தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1987-தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | அம்பிகா (தி.2000; மணமுறிவு.2002) |
இரவிகாந்த் (Ravikanth) என்பவர் ஒரு இந்திய நடிகராவார். இவரு குறிப்பாக தமிழ் படங்களில் நடித்துவருகிறார்.[1][2]
தொழில்
[தொகு]இரவி ஒலிப் பொறியாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். அந்நிறுவனம் மூடப்பட்டபோது, இவர் ஒரு நாடக குழுவில் சேர்ந்தார். குழுவில், இயக்குனர் கே. பாலசந்தரின் இணை இயக்குநரான அனந்துக்கு சாருஹாசன் இவரை அறிமுகப்படுத்தினார். விரைவில், இரவிக்கு ரவிகாந்த் என்ற திரைப் பெயர் கொடுக்கப்பட்டு, பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் (1987) திரைப்படத்தில் அறிமுகமானார்.[3][4] இந்த காலகட்டத்தில், இவர் அபூர்வ சகோதரர்கள் (1989) திரைப்படத்தில் துணை வேடத்தில் நடித்தார். ஆனால் படத்தின் நீளம் கருதி அவரது பகுதிகள் குறைக்கப்பட்டன. ரவிகாந்த் பின்னர் தொலைக்காட்சி தொடர்களில் பணிபுரிந்தார், கே. பாலசந்தரின் தயாரிப்புகளான சஹானா, சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து நடித்தார்.[5]
2000 களில், ரவிகாந்த் சரோஜா (2008) தொடங்கி வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் தொடர்ந்து நடித்தார். வெங்கட் பிரபுவின் நகைச்சுவை நாடகப்படமான கோவாவில், இரவிகாந்த் பதினொரு வித்தியாசமான கதாபாத்திரங்களை சித்தரித்து நடித்தார்.[3][6] அதன் பின்னர் இவர் அதே இயக்குனருடன் மங்கத்தா, பிரியாணி (2013) போன்ற படங்களில் தோன்றினார். 2000 களில் இவர் நடித்து பிரேம்ஜி- முக்கிய பாத்திரத்தில் நடித்த 2010, பாக்யராஜ் மற்றும் சிலம்பரசன் நடித்த கெட்டவன் போன்றவை தயாரிப்பின் நடுவில் கைவிடப்பட்டன.[4]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]இரவிகாந்த் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் 2000 ஆம் ஆண்டில் நடிகை அம்பிகாவை மணந்தார். பின்னர் இவர் 2002 இல் அம்பிகாவை விவாகரத்து செய்தார்.[7][8]
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1987 | மனதில் உறுதி வேண்டும் | ||
1990 | 13-ம் நம்பர் வீடு | ரேகாவின் கணவர் | |
1994 | சின்னமுத்து | ||
அத்த மக ரத்தினமே | |||
1995 | பாட்டு வாத்தியார் | பேச்சிமுத்து | |
1997 | அபிமன்யு | பிரகாஷ் | |
1999 | சுயம்வரம் | திருமண விருந்தினர் | |
2003 | ஆஞ்சநேயா | காவல்துறை அதிகாரி | |
2008 | சரோஜா | ||
2010 | கோவா | 11 பாத்திரங்கள் | |
2011 | மங்காத்தா | செட்டியாரின் உதவியாளர் | |
2013 | பிரியாணி | சந்திரசேகர் | |
2015 | எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல் | வனராஜன் | |
2021 | சக்ரா | ||
மாநாடு | படப்பிடிப்பில் |
தொலைக்காட்சி
[தொகு]ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | சேனல் |
---|---|---|---|
சஹானா | ஜெயா டி.வி. | ||
சொல்லத்தான் நினைக்கிறேன் | ஜீ தமிழ் | ||
2013 - 2017 | வம்சம் | சிவரம் | சன் |
குறிப்புகள்
[தொகு]- ↑ "12-ல ஒண்ணு லேடி கெட்டப்; அப்போ VP, பிரேம்ஜி, வைபவ் பண்ண சேட்டை இருக்கே... - 'கோவா' ரவிகாந்த்". www.vikatan.com/.
- ↑ "The Indian Express - Google News Archive Search". news.google.com.
- ↑ 3.0 3.1 "Goa was my big break: Ravikanth". The New Indian Express. Archived from the original on 2014-12-24. பார்க்கப்பட்ட நாள் 2021-03-28.
- ↑ 4.0 4.1 "Video". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 2020-08-22.
- ↑ https://www.newindianexpress.com/entertainment/2009/mar/25/kbs-new-serial-35543.html
- ↑ https://cinema.dinamalar.com/cinema-news/1655/special-report/Goa-movie-special-Hi-lites.htm
- ↑ "Ambika - Malayalam actors who have married more than once". The Times of India.
- ↑ http://archives.thinakaran.lk/2013/02/12/?fn=f1302125