உள்ளடக்கத்துக்குச் செல்

சக்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்ரா
Theatrical release poster
இயக்கம்எம். எஸ் ஆனந்தன்
தயாரிப்புவிஷால்
கதைஎம். எஸ் ஆனந்தன்
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்பு
ஒளிப்பதிவுகே. டி. பாலசுப்பிரமணியம்
படத்தொகுப்புதியாகு
கலையகம்விஷால் பிலிம் பேக்டரி
விநியோகம்பி. வி. ஆர். பிக்சர்ஸ்
பி4யு மோசன் பிக்சர்ஸ் (இந்தி பதிப்பு)
வெளியீடுபெப்ரவரி 19, 2021 (2021-02-19)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சக்ரா (Chakra) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி பரபரப்பூட்டும் திரைப்படமாகும். அறிமுக இயககுநர் எம். எஸ். ஆனந்தன் எழுதி இயக்கிய இந்த படத்தில் விஷால், சிரத்தா சிறீநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரெஜினா கசாண்ட்ரா எதிர்மறை பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமானது கணினி குற்றங்கள் மற்றும் இணைய வணிக மோசடிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.[1][2] கணினி ஊடுருவல்காரரை வீழ்த்த ஒன்றாக வேலை செய்யும் ஒரு படை வீரர் மற்றும் ஒரு காவல் அதிகாரியை இந்த படம் பின் தொடர்கிறது. இப்படம் 2021 பெப்ரவரி 19 அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டது, படம் நேர்மறையான, கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[3]

கதைச்சுருக்கம்

[தொகு]

இந்திய விடுதலை நாள் கொண்டாட்டங்கள் நடக்கும் நாளன்று சென்னையில் அடுத்தடுத்து 50 இடங்களில் களவு நடக்கிறது. இந்த திருட்டின்போது யாரும் தாக்கப்படாமல், கொல்லப்படாமல் நடக்கிறது. இந்த திருட்டுகளில் ஒரு திருட்டாக இராணுவ அதிகாரியான சந்துருவின் (விஷால்) வீட்டிலும் திருட்டு நடக்கிது. திருட்டில் அவரது வீட்டிலுள்ள அசோக சக்ரா விருதும் காணாமல் போகிறது. இந்த திருட்டு நிகழ்வுகள் குறித்து துணை ஆணையர் காயத்ரி (ஷிரத்தா) விசாரிக்கிறார். அவருக்கு துணையாக சந்துருவும் (விஷால்) வருகிறார்.

காவல்துறையும் இராணுவ அதிகாரியும் சேர்ந்து இந்த திருட்டுகளைச் செய்தவர்கள் யார் எனத் தேட ஆரம்பிக்கிறார்கள். அந்தத் திருட்டுகளுக்குப் பின்னணியில் இருப்பது யார் என்பதை எப்படி சந்துரு கண்டுபிடிக்கிறார் என்பதுதான் மீதிக் கதை.

நடிப்பு

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

இந்த படம் துவக்கத்தில் விஷாலின் முந்தைய அதிரடி பரபரப்பூட்டும், கணிணி கொந்தர் படமான இரும்பு திரையின் தொடர்ச்சி என கூறப்பட்டது. அது 2018 இல் வணிக ரீதியாக வெற்றி பெற்ற படமாகும். இந்தப் படத்திற்கு இரும்புத் திரை 2 என்று பெயரிடப்பட்டது, ஏனெனில் திரைப்படத்தின் வகை முந்தையதைப் போலவே இருந்தது.[6] இருப்பினும், படத்திற்கு இந்தியாவின் உயர்ந்த இராணுவ விருதான அசோகச் சக்கராவை நினைவூட்டும் விதமாக படத்திற்கு சக்ரா என்று பெயரிடப்பட்டது.[7] பழம்பெரும் நடிகை கே. ஆர். விஜயா மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தின் மூலம் மீண்டும் வந்தார். சிரத்தா சிறீநாத் மற்றும் ரெஜினா கசாண்ட்ரா இருவரும் அவர்களின் பாத்திரங்களுக்கான முறையே தற்காப்பு கலை மற்றும் இருசக்கர வாகன சவாரி பயிற்சி பெற்றனர்.

இசை

[தொகு]

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார்.

  • ஹர்லா பர்லா - யுவன் சங்கர் ராஜா, சஞ்சனா கல்மஞ்சே
  • அம்மா - சின்மயி, பிரார்த்தனா

வெளியீடு

[தொகு]

இந்தப் படம் முதலில் 2020 மே நாளன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் இந்தியாவில் கொரோனாவைரசுத் தொற்று பொது முடக்கத்தினால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.[8] பின்னர் இந்த படம் ஒரே நேரத்தில் 2021 பெப்ரவரி 19 அன்று தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட பதிப்புகளுடன் சக்ர கா ரக்ஷக் (ஆங்கிலம்: சக்ராவின் பாதுகாப்பாளர்) என்ற பெயரில் வெளியிடப்பட்டது.

வணிகம்

[தொகு]

31.5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட சக்ரா, திரையரங்குகளில் 21.5 கோடி ரூபாய் வசூலித்தது. 3.5 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்த போதிலும், படம் மிதமான வெற்றியைப் பெற்றதாக கருதப்பட்டது.[3]

குறிப்புகள்

[தொகு]
  1. "Chakra will deal with e-commerce scam". The Times of India. 6 March 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
  2. "'Chakra' First Look: Vishal is back with yet another action-thriller – Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
  3. 3.0 3.1 "Chakra Closing Collection: Vishal-Shraddha Srinath Starrer Ends Up As An Average Venture". Filmibeat.com. March 2021. பார்க்கப்பட்ட நாள் 1 March 2021.
  4. "Shraddha Srinath roped in for Vishal's Irumbuthirai sequel". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
  5. "Regina Cassandra in a negative role?". Deccan Chronicle (in ஆங்கிலம்). 2020-07-02. பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
  6. "Vishal's Irumbuthirai sequel titled Chakra?". Cinema Express. பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
  7. "Shoot at Site: Vishal is in search of the Chakra". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
  8. "Anand Shankar confirms project with Vishal and Arya". Times of India. 13 October 2020. பார்க்கப்பட்ட நாள் 5 December 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்ரா&oldid=3941275" இலிருந்து மீள்விக்கப்பட்டது