இரக்கமற்ற பணியாளன் உவமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரக்கமற்ற பணியாளன்

இரக்கமற்ற பணியாளன் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமாணக் கதையாகும். இது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் லூக்கா17:3-4 இலும் மத்தேயு18:21-35 இலும் காணப்படுகிறது. இது இயேசுவின் சீடரான பேதுரு இயேசுவிடம் தன் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் தனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டப்போது பதிலாக கூறிய உவமையாகும். இது பாவ மன்னிப்பு பற்றியது.[1][2][3]

உவமை[தொகு]

பணியாளன்

அரசர் ஒருவர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குறிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து," என்னைப் பொறுத்தருள்க எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்" என்றான். அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார்.

ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனரியம் (denarius) கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு," நீ பட்ட கடனைத் திருப்பித் தா" எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான். அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் அரசனிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். அப்போது தலைவர் அவனை வரவழைத்து," பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லாவா? என்று கேட்டார். அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார்.

பொருள்[தொகு]

ஒருவன் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் கடவுளும் அவனை மன்னிக்க மாட்டார் என்பது கருத்தாகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்பு[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Unmerciful servant
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்[தொகு]

  1. R. T. France, The Gospel According to Matthew: An introduction and commentary, Eerdmans, 1985, ISBN 0-8028-0063-7, p. 277.
  2. Craig S. Keener, A Commentary on the Gospel of Matthew, Eerdmans, 1999, ISBN 0-8028-3821-9, pp. 456–461.
  3. 60,000,000 denarii divided by 6 days per week divided by 50 weeks = 200,000 years' wages.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரக்கமற்ற_பணியாளன்_உவமை&oldid=3768949" இலிருந்து மீள்விக்கப்பட்டது