புளித்த மா உவமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புளித்த மா இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமைக் கதையாகும். இது விவிலியத்தின் புதிய ஏற்பாட்டின் மத்தேயு 13:33, லூக்கா 13:20-21 இல் காணப்படுகிறது. இது ஒரு வசனம் மட்டும் கொண்ட சிறிய‌‌ெ உவமையாகும். இதில் இயேசு விண்ணரசை புளிப்பு மாவிற்கு (ஈஸ்ட்) ஒப்பிடுகிறார்.

உவமை[தொகு]

பெண் ஒருத்தி புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தாள். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்

பொருள்[தொகு]

இது விண்ணரசின் பரம்பலைக் குறிக்கிறது. அதாவது புளிப்பு மா சிறிய அளவாகும் ஆனால் அது மூன்று மரக்கால் மாவையுமே புளிக்கச் செய்கிறது. இதுபோல உலகில் கிறிஸ்தவமும் (விண்ணரசு) சிறிய ஆரம்பத்திலிருந்து பெரிய அளவிற்கு பரவும் என்பது இதன் பொருளாகும். மேலும் இயேசு அலகையின் புளிப்பு மா குறித்தும் எச்சரிக்கையாக இருக்க கூறுகின்றார். ஒருவர் தனக்குள் அல்கையில் சிறிய அளவு புளிப்பு மாவை உள்ளெடுத்தால் முழுவதும் புளிப்பாய் மாறுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

வெளியிணப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புளித்த_மா_உவமை&oldid=3222050" இருந்து மீள்விக்கப்பட்டது