உள்ளடக்கத்துக்குச் செல்

காணாமல் போன ஆடு உவமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காணாமல் போன ஆடு இயேசு தனது போதனைகளின் போது கூறிய ஒரு உவமானக் கதையாகும். இது இயேசுவை பரிசேயர் இயேசுவை பாவிகளுடன் சேர்ந்து அவர்களுக்கு போதிக்கிறார் என குற்றஞ்சாட்டியபோது, மனம் திரும்புதல் பற்றி கூறிய மூன்று உவமைகளில் முதலாவதாகும். இயேசு நீதிமான்களுக்கன்றி பாவிகளுக்கே அதிகமாக தேவை என்பதை வழியுறுத்து முகமாக கூறப்பட்டது. காணாமல் போன காசு உவமை, ஊதாரி மைந்தன் உவமை என்பவற்றுடன் ஒரே பொருளை கொண்டிருக்கிறது. இது மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளில் கூறப்பட்டுள்ளது. லூக்கா 15:1-7,மத்தேயு 18:12-13.

[1][2][3]

உவமை

[தொகு]

ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட்டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார். வீட்டுக்கு வந்து, நண்பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, "என்னோடு மகிழுங்கள். ஏனெனில் காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்து விட்டேன்" என்பார்.

பொருள்

[தொகு]

காணாமல் போன ஆடு பாவ வழியில் சென்று கடவுளை விட்டு தூரமாக இருக்கும் மனிதரை குறிக்கிறது. அவன் மீண்டும் கடவுளிடம் திரும்பும் போது விண்ணரசில் மிக மகிழ்ச்சி உண்டாகும். மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும். பொருளை இவற்றுடன் ஒப்பிடுக; காணாமல் போன காசு உவமை, ஊதாரி மைந்தன் உவமை.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]

வெளியிணப்புகள்

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
  1. Richard N. Longenecker, The Challenge of Jesus' Parables, Eerdmans, 2000, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-4638-6, pp. 201–204.
  2. Joel B. Green, The Gospel of Luke, Eerdmans, 1997, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8028-2315-7, p. 526.
  3. Knecht, Friedrich Justus (1910). "XLIV. Jesus the Good Shepherd." . A Practical Commentary on Holy Scripture. B. Herder.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காணாமல்_போன_ஆடு_உவமை&oldid=3889976" இலிருந்து மீள்விக்கப்பட்டது