வீடுகட்டிய இருவரின் உவமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வீடுகட்டிய இருவரின் உவமை இயேசு புதிய ஏற்பாட்டில் கூறிய உவமான கதையாகும். இது மத்தேயு 7:24-27 இல் கூறப்பட்டுள்ளது. இயேசுவின் போதனையை பின்பற்றுபவர்கள் அறிவாளிகள் என பொருள்படும்படி கூறினார்.

உவமை[தொகு]

இருவர் வீடு கட்டத்தொடங்கினர். ஒருவன் அறிவாளி தனது வீட்டை பாறை மீது கட்டுகிறான். அறிவிலியான மற்றவன் தனது வீட்டை மணல் மீது கட்டுகிறான். பின்னர் மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது ஆனால் பாறை மீதிருந்த வீடோ விழாமல் நின்றது ஏனெனில் பாறையின் மீது அடித்தளம் இடப்பட்டிருந்ததால் "பாறை மேல் வீடு" விழவில்லை. ஆனால் மணல் மீது கட்டப்பட்ட வீடோ அழிந்த்து.

பொருள்[தொகு]

இந்த உவம்மையின் பொருளானது ; இயேசு சொன்ன இவ் வார்த்தைகளைக் கேட்டு அதன்படி நடக்கிறவன் இயேசு எனும் பாறை மீது தனது அடித்தளத்தை இடுகிறான். ஆனால், அறிவிலியோ அவர் சொற் கேளாமல் போவதால் மணல் மீது தன் அடித்தளத்தை இடுகிறான்.

இறை சொல் கேட்கும் அறிவாளிகள், உலகில் வரும் சோதனைகள் மழை பெய்து பெருக்கெடுத்த ஆறு போல வந்தாலும் அம்மனிதன் (வீடு) பாவ வழிகளுக்குள் விழமாட்டான். ஏனெனில் பாறையான இயேசுவின் சொற்கள் மீது அவன் அடித்தளம் இடப்பட்டிருந்தது.

ஆனால் இயேசு சொன்ன வார்த்தைகளின் படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். உலகில் வரும் சோதனைகள் மழை பெய்து பெருக்கெடுத்த ஆறு போல வரும்போது அம்மனிதன் பாவ வழிகளுக்குள் விழுந்துவிடுவான். ஏனெனில் பாறையான இயேசுவின் சொற்கள் மீது அவன் அடித்தளம் இடப்பட்டவில்லை.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணப்புகள்[தொகு]