மன்னர் மகனின் திருமணம் உவமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மன்னர் மகனின் திருமணம் இயேசு விண்ணரசை விளக்குவதற்கு பயன்படுத்திய உவமையாகும். இது விவிலியத்தில் மத்தேயு 22:1-14 இல் எழுதப்பட்டுள்ளது. இயேசு இதில் விண்ணரசைப் இளவரசனின் திருமணத்துக்கு ஒப்பிட்டுகிறார். இவ்வுவமை மேலும் பல படிப்பிணைகளையும் கொண்டுள்ளது. இதன் மூலகருத்தாக "அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப் பட்டவர்களோ சிலர்" என்ற வசனத்தை குறிப்பிடலாம்.

உவமை[தொகு]

அரசன் ஒருவன் தனது மகனுக்கு திருமணம் செய்ய ஆயத்தப்படுத்தினான். திருமணத்திற்கு தன் தகுதிகேற்ற பலருக்கு அழைப்பு விடுத்தான். விருந்திற்கான ஏற்பாடுகள் முடிந்தது. அரசன் அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். ஆனால் அழைப்பு பெற்றவர்களோ விருந்துக்கு வர விரும்பவில்லை. மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம்,"நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்" என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். ஆனாலும், அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார் வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். மற்றவர்களோ அரசனுடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார்.

பின்னர் தம் பணியாளர்களிடம்,"திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்" என்றார். அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். அரசர் அவனைப் பார்த்து,"தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?" என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். அப்போது அரசர் தம் பணியாளர்களிடம்,"அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்" என்றார்.

கருத்து[தொகு]

இங்கு கடவுளை அரசராகவும் இயேசு தன்னை இளவரசனாகவும் விண்ணரசை திருமண வீடாகவும் ஒப்பிட்டு இந்த உவமைய இயேசு கூறினார். விண்ணரசிற்கு வருமாறு கடவுளின் மக்களுக்கு (யூதர்) அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள அவ்வழைப்பை புறக்கனிக்கவே கடவுள் அவ்வரசை யூதரல்லாதோருக்கு கொடுத்தார். இருப்பினும் யூதரல்லதவரும் ஆயத்த மற்றிருந்தால் (திருமண ஆடை) திருமணத்தில் பங்கேற்க முடியாது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்பு[தொகு]