உள்ளடக்கத்துக்குச் செல்

நல்ல ஆயன் உவமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நல்ல ஆயன்
திருகோணமலை இருதயபுரம் நானே நல்ல ஆயன் உவமை பொறிக்கப்பட்டுள்ள கிறீஸ்தவ ஆலயம்

நல்ல ஆயன் (The Good Shepherd) இயேசு கூறிய உவமானக் கதையாகும். இது யோவான் நற்செய்தியில் (யோவான் 10:11-18 ) மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இயேசு தன்னை நல்ல ஆயனுக்கு ஒப்பிடுகிறார். அவர் "நல்ல ஆயன் நானே" என கூறுகின்றார். மற்றைய நற்செய்தி நூல்களிலும் இயேசு "நான் எனது ஆடுகளை தவறவிடமாட்டேன்" என பல முறை கூறியிருக்கிறார். இக்கதை சிறிய உவமை எனினும் இக்கதையை கேட்டுக் கொண்டிருந்த யூதரிடையே பெரும் கலகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் இக்கதையின் மூலம் இயேசு தன்னை கடவுள் என தெளிவாக எடுத்து கூறியிருக்கிறார். இக்கதையை கேட்ட யூதருக்கும் இயேசுவின் இந்த கருத்து விளங்கியிருக்க வேண்டும்.

இக்கருத்தில் யூதர்கள் பிளவுபட்டு தங்களுக்குள் விவாதிக்க தொடங்கினர். பலர் இயேசுவை "அவனுக்குப் பேய்பிடித்துவிட்டது பித்துப்பிடித்து அலைகிறான் ஏன் அவன் பேச்சைக் கேட்கிறீர்கள்?" என்று திட்டித்தீர்த்தனர். ஆனால் மற்றவர்களோ "பேய் பிடித்தவனுடைய பேச்சு இப்படியா இருக்கும்? பார்வை அற்றோருக்குப் பேயால் பார்வை அளிக்க இயலுமா?" என்று கேட்டார்கள். இறுதியில் இயேசு மீது கல்லெரிய பார்த்தனர் அவர்களால் அது கூடாமல் போயிற்று அவரை கைது செய்ய பார்த்தனர் இயேசு அவர்களிடமிருந்து மீண்டு வெளியேறினார்.[1][2][3]

உவமை

[தொகு]

நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார். "கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும். கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை.

பின்னுரை

[தொகு]

உவமைக்குப் பிறகு இயேசு தனது கடவுள் தன்மையை பிவ்னருமாறு விளக்குகின்றார். "நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார் நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன் என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஓரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும். தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன் அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன்."

கருத்து

[தொகு]

இப்பின்னுரையில் இயேசு ஆடுகள் என யூத கிறிஸ்தவர்களயும கொட்டிலைச் சேராத ஆடுகள் என யூதரல்லாத கிறிஸ்தவர்களையும் குறிப்பிட்டுள்ளார். ஆயன் ஆடுகளுக்காக உயிரை கொடுப்பார் என்பதன் மூலம் தனது சிலுவை மரணத்தை முன் மொழிந்துள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]

வெளியிணப்புகள்

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
  1. John 10:19–21
  2. Friedrich Justus Knecht (1910). "XLIV. Jesus the Good Shepherd" . A Practical Commentary on Holy Scripture. B. Herder.
  3. Baxter, Roger (1823). "Christ the Good Shepherd" . Meditations For Every Day In The Year. New York: Benziger Brothers.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நல்ல_ஆயன்_உவமை&oldid=4099825" இலிருந்து மீள்விக்கப்பட்டது