இந்தியாவின் பெண் முதலமைச்சர்கள் பட்டியல்
Jump to navigation
Jump to search
இந்தியாவில் தற்போது பதவியிலுள்ள ஒரே பெண் முதலமைச்சர்- மம்தா பானர்ஜி.
இந்திய முதலமைச்சர் இந்திய மாநிலமொன்றின் அரசினை தலைமையேற்று நடத்தும் சட்டப் பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். இவர் மாநிலத்தினை வழிநடத்திட பெரும்பாலான செயலாக்க அதிகாரங்களை உடையவர். சட்டப் பேரவையின் ஐந்தாண்டு காலமும் இவர் பணிபுரியவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படவும் கூடும். 28 இந்திய மாநிலங்களுக்கும் ஏழு ஆட்சிப்பகுதிகளுக்கும் முப்பது முதலமைச்சர்கள் உள்ளனர்[1].
இந்திய மாநில முதலமைச்சர்களாக பதினான்கு பெண்கள் பதவி வகித்துள்ளனர். தற்சமயம் மம்தா பானர்ஜி முதலமைச்சர் பதவியிலுள்ளார்.[2] பெண் முதலமைச்சர்களைக கொண்ட பதினோரு மாநிலங்களில் தில்லி, தமிழ் நாடு மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களும் இருமுறை பெண் முதலமைச்சரைக் கொண்ட மாநிலங்களாகும். இந்திய மாநிலப் பெண் முதலச்சர்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
இந்திய மாநிலங்களின் பெண் முதலமைச்சர்கள்[தொகு]
- குறியீடு
- * தற்சமயம் பதவியில் உள்ளவர்
எண் | பெயர் | புகைப்படம் | மாநிலம் | பதவிக் காலம் | மொத்த பதவிக் காலம் | கட்சி | |
---|---|---|---|---|---|---|---|
1 | சுசேதா கிருபளானி | – | உத்தரப் பிரதேசம் | அக்டோபர் 2, 1963 – மார்ச் 13, 1967 | 1258 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
2 | நந்தினி சத்பதி | – | ஒரிசா | ஜூன் 14, 1972 – மார்ச் 3, 1973 மார்ச் 6, 1974 – டிசம்பர் 16, 1976 |
1278 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
3 | சசிகலா ககோட்கர் | – | கோவா | ஆகஸ்ட் 12, 1973 – ஏப்ரல் 27, 1979 | 2084 நாட்கள் | மகாராஷ்த்ரவாதி கோமந்தக் கட்சி | |
4 | சையத் அன்வரா தைமூர் | – | அசாம் | டிசம்பர் 6, 1980 – ஜூன் 30, 1981 | 206 நாட்கள் | Iஇந்திய தேசிய காங்கிரஸ் | |
5 | ஜானகி இராமச்சந்திரன் | ![]() |
தமிழ்நாடு | ஜனவரி 7–30, 1988 | 23 நாட்கள் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | |
6 | ஜெ. ஜெயலலிதா | ![]() |
தமிழ்நாடு | ஜூன் 24, 1991 – மே 12, 1996 மே 14, 2001 – செப்டம்பர் 21, 2001 மார்ச் 2, 2002 – மே 12, 2006 மே 16, 2011 – டிசம்பர் 5, 2016 |
5238 நாட்கள் | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | |
7 | மாயாவதி | உத்தரப் பிரதேசம் | ஜூன் 13, 1995 – அக்டோபர் 18, 1995 மார்ச் 21, 1997 – செப்டம்பர் 21, 1997 மே 3, 2002 – ஆகஸ்ட் 29, 2003 மே 13, 2007 – மார்ச் 7, 2012 |
2554 நாட்கள் | பகுஜன் சமாஜ் கட்சி | ||
8 | ரஜிந்தர் கௌர் பட்டல் | – | பஞ்சாப் | ஜனவரி 21, 1996 – பெப்ரவரி 12, 1997 | 388 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
9 | ராப்ரி தேவி | ![]() |
பீகார் | ஜூலை, 25 1997 – பெப்ரவரி 11, 1999 மார்ச் 9, 1999 – மார்ச் 2, 2000 மார்ச் 11, 2000 – மார்ச் 6, 2005 |
2746 நாட்கள் | இராச்டிரிய ஜனதா தளம் | |
10 | சுஷ்மா சுவராஜ் | ![]() |
தில்லி | அக்டோபர் 13, 1998 – டிசம்பர் 3, 1998 | 51 நாட்கள் | பாரதிய ஜனதா கட்சி | |
11 | ஷீலா தீக்சித் | ![]() |
தில்லி | டிசம்பர் 3, 1998 – டிசம்பர் 8, 2013 | 5484 நாட்கள் | இந்திய தேசிய காங்கிரஸ் | |
12 | உமா பாரதி | ![]() |
மத்திய பிரதேசம் | டிசம்பர் 8, 2003 – ஆகஸ்ட் 23, 2004 | 259 நாட்கள் | பாரதிய ஜனதா கட்சி | |
13 | வசுந்தரா ராஜே * | ராஜஸ்தான் | டிசம்பர் 8, 2003 – டிசம்பர் 11, 2008 டிசம்பர் 8, 2013 – தற்சமயம் |
பாரதிய ஜனதா கட்சி | |||
14 | மம்தா பானர்ஜி * | மேற்கு வங்காளம் | மே 20, 2011 – தற்சமயம் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |||
15 | ஆனந்திபென் படேல் * | குசராத்து | மே 22, 2014 – தற்சமயம் | பாரதிய ஜனதா கட்சி |
இவற்றையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "My Government > Who's Who > Chief Ministers". National Portal of India. பார்த்த நாள் 18 பெப்ரவரி 2014.
- ↑ http://iofsbrotherhood.org/site/forum/messages.php?webtag=WEBTAG&msg=18427.1