பேச்சு:இந்தியாவின் பெண் முதலமைச்சர்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் முதலமைச்சர் என்றாலே மாநில முதலமைச்சர் தானே, எனவே கட்டுரைத் தலைப்பை இந்திய பெண் முதலமைச்சர்களின் பட்டியல் எனக் குறுக்கலாமே ?--மணியன் (பேச்சு) 01:01, 14 மார்ச் 2014 (UTC)

முதலமைச்சர் பதவி இந்தியாவில் மட்டுமல்ல, வேறு சில நாடுகளிலும் உள்ளன என நினைக்கிறேன். ’இந்தியப் பெண் முதலமைச்சர்கள்’ என்பது,

  • இந்தியாவின் பெண் முதலமைச்சர்கள்
  • முதலமைச்சராக பதவி வகித்த இந்தியப் பெண்கள்

என இரு பொருளைத் தரலாம் என்பதால் இந்திய மாநிலப் பெண் முதலமைச்சர்கள் என தலைப்பில் ’மாநில’ என்பதைச் சேர்த்தேன். குழப்பம் வராது என்றால் நீங்கள் குறிப்பிட்டவாறு தலைப்பை மாற்றிவிடலாம். இந்தியப் பெண் என ஒற்று இரட்டிக்கும் என நினைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:11, 15 மார்ச் 2014 (UTC)

உங்கள் கூற்று புரிகிறது :) ஆனால் பிறநாட்டு இந்திய வம்சாவளிப் பெண்களை இந்தியப் பெண்கள் என அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அமெரிக்க இந்தியர்கள் அல்லது (இந்திய அமெரிக்கர்கள்?), ஆத்திரேலிய இந்தியர்கள் எனக் குறிக்கலாம். தவிர பிற முதலமைச்சர்களின் பட்டியல்களில் மாநில என்ற ஒட்டில்லாததைக் காணலாம். எனவே தலைப்பை இந்தியாவின் பெண் முதலமைச்சர்களின் பட்டியல் மாற்றுகிறேன். குழப்பம் இல்லாதிருக்கும் என நினைக்கிறேன்.--மணியன் (பேச்சு) 05:26, 15 மார்ச் 2014 (UTC)

👍 விருப்பம்--Booradleyp1 (பேச்சு) 13:53, 15 மார்ச் 2014 (UTC)