அன்வரா தைமூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்வரா தைமூர்
8 வது அஸ்ஸாம் முதலமைச்சர்
பதவியில்
6 டிசம்பர் 1980 – 30 ஜூன் 1981
முன்னையவர்குடியரசு ஆட்சி
பின்னவர்குடியரசு ஆட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1936-11-24)24 நவம்பர் 1936
அஸ்ஸாம் மாகாணம், பிரித்தானிய இந்தியா, அஸ்ஸாம் மாநிலம் (தற்போது)
இறப்பு28 செப்டம்பர் 2020(2020-09-28) (அகவை 83)
ஆஸ்திரேலியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ், பிறகுஅகில இந்திய ஜனநாயக முன்னணி
முன்னாள் கல்லூரிஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்

சையதா அன்வரா தைமூர் ( 1936 ஆம் ஆண்டு நவம்பர் 24 - 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 28) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு டிசம்பர் 6 முதல் 1981 ஆம் ஆண்டு ஜூன் 30 வரை இந்திய மாநிலமான அஸ்ஸாம் மாநிலத்திற்கு முதலமைச்சராக இருந்தார். [1] இவர் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று ஆஸ்திரேலியாவில் இறந்தார் [2]

அரசியல் வாழ்க்கை[தொகு]

அன்வாரா 1956 ஆம் ஆண்டில் ஜோர்ஹாட்டின் டெபிச்சரன் பாருவா பெண்கள் கல்லூரியில் பொருளாதாரத்துறையில் விரிவுரையாளராக பணியாற்றினார். 1972, 1978, 1983 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் அஸ்ஸாம் சட்டமன்றத்திற்கு சட்டமன்ற உறுப்பினராக ( எம்.எல்.ஏ ) தேர்ந்தெடுக்கப்பட்டார். 1988 ஆம் ஆண்டில் இவர் இந்திய நாடாளுமன்றத்திற்கு ( மாநிலங்களவ ) பரிந்துரைக்கப்பட்டார். [3] 1991 ஆம் ஆண்டில் இவர் அஸ்ஸாமின் விவசாயத்துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவர் அஸ்ஸாமின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்தார்.

அஸ்ஸாம் வரலாற்றில் முதலமைச்சராகிய முதல் பெண் மற்றும் ஒரே முஸ்லிம் இவர் தான். இந்திய வரலாற்றிலும் எந்தவொரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த ஒரே முஸ்லிம் பெண் முதலமைச்சர் இவர் தான். [4] இவரது ஆட்சிக் காலம் 1980 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 1981 ஆம் ஆண்டு ஜூன் வரையிலானது. இந்தியாவில் ஜனாதிபதி ஆட்சியினால் இவரது அரசு ஆறு மாதங்களில் முடிவடைந்தது. 1983 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை காலகட்டத்தில் இவர் அஸ்ஸாம் மாநிலத்தின் பொதுபணி துறை அமைச்சராக இருந்தார்.


இவர் 2011 ஆம் ஆண்டில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியில் சேர்ந்தார்.

கல்வி[தொகு]

இவர் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். [5] [6]

சர்ச்சை[தொகு]

2019 ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (என்.ஆர்.சி) இறுதி வரைவில் இவரின் பெயர் சேர்க்கப்படவில்லை.

வகித்த பதவிகள்[தொகு]

ஆண்டு விளக்கம்
1972-1978 5 வது அசாம் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
 • அமைச்சரவை அமைச்சர் - கல்வி (1975–78)
1978-1983 6 வது அசாம் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
1983-1985 7 வது அசாம் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
 • அமைச்சரவை அமைச்சர் - பொதுப்பணித்துறை
1988-1990 மாநிலங்களவையில் பரிந்துரைக்கப்பட்டார்
1991-1996 9 வது அசாம் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
 • அமைச்சரவை அமைச்சர் - வேளாண்மை, ஹஜ் மற்றும் வக்ஃபு சொத்து
2004-2010 மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
 • தலைவர் - அட்டவணையில் வழங்கப்பட்ட ஆவணங்களுக்கான குழு (2004-10)
 • உறுப்பினர் - நகர்ப்புற மேம்பாட்டு குழு (2004–10)
 • உறுப்பினர் - பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான குழு (2004–10)
 • உறுப்பினர் - பொது நோக்கங்கள் குழு (2004–10)
 • உறுப்பினர் - சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழு (2004–10)
 • துணைத் தலைவர் - இந்தியா-பங்களாதேஷ் நாடாளுமன்ற நட்புக் குழு (2005-10)
 • உறுப்பினர் - சிறுபான்மைத் துறையின் தேசிய ஆலோசனைக் குழு (2006-10)

வெளி குறிப்புகள்[தொகு]

இந்தியாவில் பட்டியல் பழங்குடியினரின் கலைக்களஞ்சியம்: பி.கே. மொஹந்தி எழுதிய ஐந்து தொகுதியில் பக்கம் 124.

இறப்பு[தொகு]

இவர் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று ஆஸ்திரேலியாவில் காலமானார். [7] [8]

குறிப்புகள்[தொகு]

 1. "'Spurned' Taimur in AIUDF - Denied a ticket, one deserts, the other turns mentor".
 2. "Assam's lone female chief minister Syeda Anwara Taimur passes away". The News Mill (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-09-28. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.
 3. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 19 December 2019. பார்க்கப்பட்ட நாள் 13 July 2015.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 4. "Kudos to Mehbooba Mufti, but where are Kashmir's female politicians?".
 5. "Archived copy". Archived from the original on 13 July 2015. பார்க்கப்பட்ட நாள் 13 July 2015.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 6. http://www.amu.ac.in/pdf/Alumni.pdf
 7. "Former Assam CM Anwara Taimur no more". News Live (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 28 September 2020.
 8. "Assam's lone female chief minister Syeda Anwara Taimur passes away". The News Mill (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-09-28. பார்க்கப்பட்ட நாள் 2020-09-28.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்வரா_தைமூர்&oldid=3075581" இலிருந்து மீள்விக்கப்பட்டது