அலுமினியம் அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலுமினியம் அசிட்டேட் இன் மூலக்கூற்று வாய்பாடு

அலுமினியம் அசிட்டேட்டு அல்லது அலுமினியம் எத்தனோயேட்டு (Aluminium acetate or aluminium ethanoate) என்பது அசிட்டிக் அமிலத்தினுடைய அலுமினிய உப்பாகும்[1]. இவ்வுப்பு சிலவேளைகளில் AlAc[2] என்று சுருக்க வடிவிலும் குறிக்கப்படுகிறது. ஆனால் அலுமினியம் அசிட்டேட்டின் மூலக்கூற்று வாய்ப்பாடு C6H9AlO6 ஆகும். வேதியியலில் மூன்று வகையான அலுமினியம் அசிட்டேட்டுகள் அறியக்கிடைக்கின்றன.

  1. .நடுநிலை அலுமினியம் மூவசிட்டேட்டு - Al(C2H3O2)3
  2. .அடிப்படை அலுமினியம் இருவசிட்டேட்டு- HOAl(C2H3O2)2, அடிப்படை அலுமினியம் அசிட்டேட்டு என்றும் அழைக்கப்படுகிறது.
  3. .அடிப்படை அலுமினியம் ஒரசிட்டேட்டு - (HO)2AlC2H3O2


மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலுமினியம்_அசிட்டேட்டு&oldid=2159048" இலிருந்து மீள்விக்கப்பட்டது