அமிர்தசரஸ் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அம்ரித்சர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அமிர்தசரஸ்
ਅੰਮ੍ਰਿਤਸਰ ਜ਼ਿਲ੍ਹਾ
மாவட்டம்
வடமேற்கு பஞ்சாபில் அமைவிடம்
இந்தியாவின் பஞ்சாபில் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
பெயர்ச்சூட்டுஅமிர்தம்
தலைமையிடம்அமிர்தசரஸ்
பரப்பளவு
 • மொத்தம்2,683 km2 (1,036 sq mi)
மக்கள்தொகை (2011)‡[›]
 • மொத்தம்2,490,891
 • அடர்த்தி930/km2 (2,400/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிபஞ்சாபி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்143 001
தொலைபேசி குறியீடு91 183 XXX XXXX
எழுத்தறிவு76.27%
இணையதளம்amritsar.nic.in
PB-02

அமிர்தசரஸ் மாவட்டம் (Amritsar district) (பஞ்சாபி:ਅੰਮ੍ਰਿਤਸਰ ਜ਼ਿਲ੍ਹਾ) வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் இருபத்து இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அமிர்தசரஸ் நகரம் ஆகும்.

மக்கள் தொகை மிகுந்த பஞ்சாப் மாநில மாவட்டங்களில் லூதியானா மாவட்டத்திற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் அமிர்தசரஸ் மாவட்டம் உள்ளது.[1]

சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் செயற்குழு இம்மாவட்டத் தலைமையிடமான அமிர்தசரசில் அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

அமிர்சரஸ் மாவட்டத்தின் வடகிழக்கில் குர்தாஸ்பூர் மாவட்டம், தென்கிழக்கில் கபூர்தலா மாவட்டம், தெற்கில் தரண் தரண் மாவட்டம், மேற்கில் பாகிஸ்தான் எல்லைகளாக கொண்டது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

அமிர்தசரஸ் மாவட்டம் அமிர்தசரஸ் I, அமிர்தசரஸ் II, அஜ்னாலா மற்றும் பாபா பாகாலா என நான்கு வருவாய் வட்டங்களும், அட்டாரி, லோபோக், மஜிதா, இராம்தாஸ், தர்சிகா என ஐந்து துணை வருவாய் வட்டங்களையும் கொண்டது.

உள்ளாட்சி அமைப்புகள்[தொகு]

ஊரக வளர்ச்சிக்காக அஜ்னாலா, அட்டாரி, சோகவான், ஹர்ச சீனா, சண்டியாலா, மஜிதா, ராய்யா, வெர்கா மற்றும் தர்சிகா என ஒன்பது ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது.

அரசியல்[தொகு]

அமிர்தரஸ் மாவட்டம் அஜ்னாலா, இராஜசான்சி, மஜிதா, சண்டியாலா (தனி), அமிர்தசரஸ் வடக்கு, அமிர்தசரஸ் மேற்கு (தனி), அமிர்தசரஸ் மையம், அமிர்தசரஸ் கிழக்கு, அமிர்தசரஸ் தெற்கு, அட்டாரி (தனி), பாபா பாக்லா என 11 சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது.

மேலும் அமிர்தசரஸ் மாவட்டம் அமிர்தசரஸ் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியையும் கொண்டுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,490,656 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 46.42% மக்களும்; நகரப்புறங்களில் 53.58% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 15.47% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,318,408 ஆண்களும் மற்றும் 1,172,248 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 889 பெண்கள் வீதம் உள்ளனர். 2,683 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 928 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 76.27% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 80.15% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 71.96% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 281,795 ஆக உள்ளது. [2] இம்மாவட்ட மொத்த மக்கள் தொகையில் தலித்துகள் 3,58,580 பேர் உள்ளனர்.

சமயம்[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 690,939 (27.74 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,716,935 (68.94 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 12,502 (2.18 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 54,344 (2.18 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 3,152 (0.13 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 876 (0.04 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 1,044 (0.04 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 10,864 (0.44 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்[தொகு]

பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி மொழியான பஞ்சாபி மொழியுடன், இந்தி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலங்கள்[தொகு]

அமிர்தசரஸ் பொற்கோயில், ஜாலியன்வாலா பாக் தேசிய நினைவிடம், வாகா (இந்திய-பாகிஸ்தான் எல்லைச் சாவடி), துர்ஜியானா கோயில் (இலக்குமி நாராயணன் கோயில்) மற்றும் கோபிந்துகர் கோட்டை முதலியன.

முக்கிய நிகழ்வுகள்[தொகு]

ஆங்கிலேய ஆட்சியின் போது பொற்கோயில் அருகே அமைந்த ஜாலியன்வாலா பாக் எனுமிடதில் கூடியிருந்த இந்திய விடுதலை இயக்கத்தினரை 13 ஏப்ரல் 1919 அன்று ஆங்கிலேயே இராணுவத்தினர் துப்பாக்கிகளால் சுட்டுக் கொன்றனர். இதில் ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வை ஜாலியன்வாலா பாக் படுகொலை என இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது.

பொற்கோயிலில் வளாகத்தில் பதுங்கி, இந்திய அரசிற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டிருந்த காலிஸ்தான் இயக்கத்தினரை புளூஸ்டார் நடவடிக்கை என்று அழைக்கப்படும் இராணுவ நடவடிக்கைகள் மூலம் பொற்கோயிலிருந்து வெளியேற்றினர்.

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. Amritsar District : Census 2011 data

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amritsar district
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிர்தசரஸ்_மாவட்டம்&oldid=3695840" இலிருந்து மீள்விக்கப்பட்டது