உள்ளடக்கத்துக்குச் செல்

காலிஸ்தான் இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொடி

காலிஸ்தான் இயக்கம் (Khalistan movement) என்பது சீக்கிய மதம் சார்ந்த தேசியத்தை வலியுறுத்தும் ஓர் அரசியல் இயக்கமாகும். சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் இந்தியாவின் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் என சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணங்களை இணைத்து தனி நாடு வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஜர்னையில் சிங் பிந்தரன்வாலாவால் அமைக்கப்பட்டது காலிஸ்தான் இயக்கம்.[1][2][3]

இயக்கம் தோன்றக் காரணம்[தொகு]

பஞ்சாப் மாகாணம் சீக்கியர்களின் பாரம்பரிய நிலப்பகுதியாகும். இந்திய நிலப்பகுதிகள் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிற்குள் வருவருதற்கு முன் சுமார் 50 ஆண்டுகள் இப்பகுதிகளை சீக்கிய பரம்பரையினர் ஆண்டனர். இந்திய பாகிஸ்தானிய பிரிவினைக்குப் பின் பெருமளவில் சீக்கியர்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசத்திற்கு குடியேறினர். பின்னர் மொழிவாரி மாநிலங்கள் பிரிவினையின் அடிப்படையில் அதிக சீக்கியர்கள் வகித்த இந்தியாவின் பஞ்சாப் மாகாணம் மொழியின் அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும் என அகாலி தளம் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வந்தது. இந்திய அரசு முதலில் இதை நிராகரித்தாலும் பின்னர் நடந்த தொடர் கோரிக்கைகளாலும் வன்முறைச் சம்பவங்களாலும் இந்திய ஒன்றிய அரசு இதற்கு உடன்பட்டது. ஆனால் தங்களுக்கு அதிக அதிகாரம் ஒன்றிய அரசால் தரப்படவில்லை என்ற காரணத்தால் காலிஸ்தான் தேசிய இயக்கம் தொடர்ந்து இயங்கி வந்தது. காலிஸ்தானுக்கு என அமரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் ஆதரவு திரட்ட முயற்சித்தது. காலிஸ்தான் அமைப்பால், காலிஸ்தான் தனி நாடு என அறிவிக்கப்பட்டு அதற்கெனத் தனி நாணயத்தையும் அஞ்சல் தலையையும் வெளியிட்டது. இந்திராகாந்தி தலைமையிலான ஒன்றிய அரசு காலிஸ்தான் தேசியவாதிகளை புளூஸ்டார் நடவடிக்கையால் கட்டுப்படுத்தபட்டது. தற்போது பஞ்சாபில் இக்கோரிக்கை பரவலாகக் கைவிடப்பட்டுவிட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Shah, Murtaza Ali (27 January 2022). "Khalistan flag installed on Gandhi Statue in Washington". Geo News இம் மூலத்தில் இருந்து 31 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220731125523/https://www.geo.tv/amp/395548-khalistan-flag-installed-on-gandhi-statue-in-washington. 
  2. Kinnvall, Catarina (2007-01-24). "Situating Sikh and Hindu Nationalism in India". Globalization and Religious Nationalism in India: The Search for Ontological Security (in ஆங்கிலம்). Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-13-413570-7. Archived from the original on 30 March 2023. பார்க்கப்பட்ட நாள் 14 August 2015.
  3. Crenshaw, Martha, 1995, Terrorism in Context, Pennsylvania State University, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-271-01015-1 p. 364
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலிஸ்தான்_இயக்கம்&oldid=3914740" இலிருந்து மீள்விக்கப்பட்டது