பேச்சு:காலிஸ்தான் இயக்கம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் இந்திய நாட்டின் ஒன்றிய அசினை (Union Govt) நடுவண் அரசு (Central Govt) என குறிப்பிட்டிருந்தனர். இந்திய அரசமைப்புச்சட்டமானது இந்தியாவை "ஒன்றியம்" என்றே அழைக்கிறது, அதுபோல அரசையும் ஒன்றிய அரசு, மாநில அரசு என்றே குறிப்பிடுகிறது. மேலும், இந்திய அரசானது பண்புரீதியாகவும் ஒரு "ஒன்றிய அரசே". ஆதலால், "நடுவண் அரசு" என வரும் இடங்களை "ஒன்றிய அரசு" என மாற்றியுள்ளேன் - பத்மாக்சி (உரையாடுக) 8:42, 18 சூன் 2017 (IST)

வணக்கம் பத்மாக்சி, மேலும் சில கட்டுரைகளில் நடுவண் அரசு என்பதை ஒன்றிய அரசு என மாற்றியுள்ளீர்கள். ஒவ்வொரு கட்டுரையிலும் உரையாடுவதைவிட இது தொடர்பாக ஆலமரத்தடியில் உரையாடுவது சிறந்தது எனக் கருதுகிறேன். ஒன்றிய அரசு என அறியப்படுவதைவிட மத்திய அரசு (நடுவண் அரசு) என்றே பெரும்பாலும் அறியப்படுகிறது.--இரா. பாலா (பேச்சு) 11:36, 18 சூன் 2017 (UTC)Reply[பதில் அளி]