அணு சக்தித்துறை (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணு சக்தித்துறை
परमाणु ऊर्जा विभाग
துறை மேலோட்டம்
அமைப்புஆகத்து 3, 1954 (1954-08-03)
தலைமையகம்மும்பை, மகாராட்டிரம், இந்தியா[1]
பணியாட்கள்வகைப்படுத்தப்பட்டது
அமைப்பு தலைமை
  • டாக்டர் ஆர்.கே. சின்ஹா, இந்திய அரசு செயலாளர்.
வலைத்தளம்dae.nic.in

இந்திய அணுசக்தித் துறை (Department of Atomic Energy; டி.ஏ.ஈ) என வழங்குவது, இந்தியப் பிரதம மந்திரியின் நேரடி மேற்பார்வையில், மகாராட்டிர மாநிலத்திலுள்ள மும்பை நகரத்தை தலைமை அலுவலகமாகக் கொண்டு செயல்படும் துறையாகும்.[2]

இந்தத் துறையானது அணுசக்தி மின்சாரம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட அணுசக்தி தொழில்நுட்பங்களுக்கு பொறுப்பானதாகும்.

அமைப்பு[தொகு]

இந்திய ந்யூக்ளியர் பவர் கோர்போரேசன் என்ற அமைப்பு இத்துறையின் செயல்பாடுகளை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறது. அணுசக்தி ஆணைக்குழு, அணுசக்தி சட்டமுறையியல் வாரியம் ஆகிய நிறுவனங்கள் இந்த அமைப்பின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துகின்றன.

இந்திய ந்யூக்ளியர் பவர் கோர்போரேசன் நிறுவனம் மத்திய அரசின் புகழ் பெற்ற அரசு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம், அணுக்கரு அணுசக்தியை மின்சாரம் தயாரிப்பதற்கும், அதன் வழியாக மக்கள் மேம்பாடு அடைவதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல் பட்டு வருகிறது.

இந்திய ந்யூக்ளியர் பவர் கோர்போரேசன் நிறுவனம் 1987ஆம் ஆண்டில் துவங்கிய நிறுவனமாகும். இந்நிறுவனம் செயல்படுத்தும் அனைத்து அணுசக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களும் ஐஎஸ்ஓ 14000 தரநிர்ணயம் கொண்ட நிறுவனங்களாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Department of Atomic Energy, Government of India". Dae.gov.in.. 2009-11-03 இம் மூலத்தில் இருந்து 2011-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110227204433/http://www.dae.gov.in/contacts.htm. பார்த்த நாள்: 2011-02-16. 
  2. 1. ^ "Department of Atomic Energy, Government of India". Dae.gov.in.. 2009-11-03. http://www.dae.gov.in./contacts.htm பரணிடப்பட்டது 2011-02-27 at the வந்தவழி இயந்திரம். Retrieved 2010-08-06

^