உள்ளடக்கத்துக்குச் செல்

அணுவாற்றல் வழங்குவோர் குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்பல் நிறம் அணுவாற்றல் வழங்குவோர் குழும நாடுகளை குறிக்கிறது.

அணுவாற்றல் வழங்குவோர் குழுமம் (Nuclear Suppliers Group - NSG) அணிவாயுதப் பரவலை குறைககும் நோக்கத்துடன் இயங்கும் ஓர் பல நாடுகள் கொண்ட அமைப்பாகும். அணுவாயுதங்களை தயாரிக்கப் பயன்படும் பொருள்களின் ஏற்றுமதி மற்றும் மறுமாற்றலைக் கட்டுப்படுத்தியும் ஏற்கனவே உள்ள அணுப்பொருள்களை காப்பதையும் பயன்படுத்துவதையும் மேம்படுத்தியும் இந்நோக்கத்தை நிறைவேற்றுகிறது.இந்தியா 1974ஆம் ஆண்டு முதல் அணு ஆயுதத்தை வெடித்த பிறகு உருவான இக்குழு ஆணு ஆயுதம் வைத்திருக்கும் நாடுகளுக்கு, அணுக்கருப் பரவாமை ஒப்பந்தம் (NPT)கையொப்பமிடாதவரை, அணுவாற்றலுக்குரிய பொருட்களையும் தொழில்நுட்பத்தையும் ஏற்றுமதி செய்வதை கட்டுப்படுத்துகிறது.

துவக்கத்தில் இக்குழுவில் ஏழு அங்கத்தினர்கள் இருந்தனர்: கனடா, மேற்கு செருமனி, பிரான்சு, யப்பான், உருசியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா. தற்போது 48 நாடுகள் இக்குழு அங்கத்தினர்களாக உள்ளனர்.

இந்திய அமெரிக்க குடிசார் அணுவாற்றல் உடன்பாட்டிற்கு வழிவகுக்கும் வகையில் அணுவாற்றல் வழங்குவோர் குழுமம் செப்டம்பர் 6, 2008 அன்று இந்தியாவிற்கு பிற நாடுகளிடமிருந்து அணுவாற்றல் தொடர்புடைய எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப வணிகத்திற்கு ஒப்புமை அளித்தது.[1] இதன்மூலம் அணுப்பரவாமை ஒப்பந்தத்தில் கையொப்பமிடாதும் அணுஆயுதம் கொண்டிருந்தும் அணுவாற்றல் வணிகம் அனுமதிக்கப்படிருக்கும் முதல் நாடு இந்தியாவாகும்.[2]

உறுப்பு நாடுகள்

[தொகு]

தொடக்கத்தில் இக்குழுமத்தில் ஏழு நாடுகள் இருந்தன. 1976-77 இல் இக்குழுமம் 15 நாடுகள் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது. 1990 வரை மேலும் 12 நாடுகள் உறுப்பினர்களாயின. சோவியத் ஒன்றியம் மறைந்ததும் அதலிருந்த பல நாடுகளுக்கு எதிர்காலத்தில் உறுப்பினராகலாம் என்ற உறுதிப்பாட்டில் பார்வையாளர் தகுதி கொடுக்கப்பட்டது. 2004இல் சீனா உறுப்பினர் ஆனது.

As of 2016 2016 ஆகத்து வரை இவ்வமைப்பில் (குழுமத்தில்) 48 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன :[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Nuclear Suppliers Group Grants India Historic Waiver - MarketWatch". Marketwatch.com. பார்க்கப்பட்ட நாள் 2008-10-02.
  2. 3 hours ago. "AFP: India energised by nuclear pacts". Afp.google.com. Archived from the original on 2009-12-28. பார்க்கப்பட்ட நாள் 2008-10-02.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  3. [1] NUCLEAR SUPPLIERS GROUP.

வெளியிணைப்புகள்

[தொகு]