அஜிதநாதர்
தோற்றம்
| அஜிதநாதர் | |
|---|---|
| சமண சமய இரண்டாம் தீர்த்தங்கரர் | |
அஜிதநாதர், 12ஆம் நூற்றாண்டு பளிங்கு சிற்பம், தெற்கு இராஜஸ்தான் | |
| விவரம் | |
| வாழ்ந்த காலம் | 5 x 10^223 ஆண்டுகளுக்கு முன் |
| குடும்பம் | |
| தந்தை | ஜிதாசத்ரு |
| தாய் | விஜயாதேவி |
| அரச குலம் | இச்வாகு |
| இடங்கள் | |
| பிறப்பு | அயோத்தி |
| வீடுபேறு | சம்மெட் சிகார் |
| பண்புகள் | |
| நிறம் | பொன்னிறம் |
| வாகனம் | யானை |
| உயரம் | 1,350 மீட்டர் |
| இறக்கும் போது வயது | 7,200,000 |
| உதவியாள தேவதைகள் | |
| யட்சன் | மகாயட்சன் |
| யட்சினி | அஜிதா |
அஜிதநாதர் (Ajitnatha), சமண சமயத்தின் இரண்டாவது தீர்த்தங்கரர் எனக் கருதப்படுபவர்.[1] சமண சமய சாத்திரங்களின்படி கர்மத்தளையிலிருந்து விடுபட்ட சித்த புருஷர் ஆவார். இச்வாகு குல அயோத்தி மன்னர் ஜிதசத்ருவுக்கும் அரசி விஜயாவுக்கும் பிறந்தவர்.[1]
வேத காலத்தில் அஜிதநாதர்
[தொகு]யசூர் வேதத்தில் அஜிதநாதரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதன் பொருள் தெளிவின்றி காணப்படுகிறது. சமண மரபின்படி, அஜிதநாதரின் இளைய சகோதரன் சகரன் (பகீரதனின் பாட்டன்) என்பவன் அயோத்தியை ஆண்டான் என்பதை, இந்து சமய புராண, இதிகாசங்களிலும் காணப்படுகிறது.