தருமநாதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தருமநாதர்
Dharmanatha.jpg
இராஜஸ்தான், சந்திரகிரி கோயிலில் தருமநாதரின் சிற்பம்
அதிபதி15வது சமணத் தீர்த்தங்கரர்

தருமநாதர் (Dharmanatha) சமண சமயத்தின் 15வது தீர்த்தங்கரர் ஆவார். இவர் இச்வாகு குலத்தில் அயோத்தி அருகே சிகார்ஜி எனும் ஊரில் பானு - சுவிரதா எனும் இணையருக்கு பிறந்தவர். இவர் ஒரு சித்த புருஷர் என சமணச் சாத்திரங்கள் கூறுகிறது. தருமநாதர் ஜார்க்கண்டு மாநிலத்தில் உள்ள கிரீடீஹ் மாவட்டத்தின் சிகார்ஜி எனும் மலையில் முக்தி அடைந்தார். தீர்த்தாங்கரர் தருமநாதர் தங்க நிறமும், வஜ்ஜிராயுதமும் கொண்டவர்.

கிபி1848ல் தீர்த்தங்கரர் தருமநாதருக்கு அர்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற அதீஸ்சிங் கோயில், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ளது.

கேரளா மாநிலத்தின் கொச்சி அருகே உள்ள மட்டஞ்சேரி எனும் ஊரில் தருமநாதருக்கு ஒரு கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.[1]

படகாட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தருமநாதர்&oldid=2716848" இருந்து மீள்விக்கப்பட்டது