முஷ்பிகுர் ரகீம்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | மொகம்மது முசுபிகுர் இரகீம் | |||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இல்லை | |||||||||||||||||||||||||||||||||||
பங்கு | குச்சக் காப்பாளர் | |||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 41) | மே 26 2005 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | சூன் 6 2010 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 80) | ஆகத்து 6 2006 எ. சிம்பாப்வே | |||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | பிப்ரவரி 19 2011 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||
2006–இன்று | இரச்சாகி | |||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 21 2011 |
மொகம்மது முசுபிகுர் இரகீம்: (Mohammad Mushfiqur Rahim, வங்காள மொழி: েমাহাম্মদ মুশিফকুর রিহম) பிறப்பு: செப்டம்பர் 1, 1988) வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் குச்சக் காப்பாளர் ஆவார். வங்காளதேசத்தின் பொக்ரா பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, இரச்சாகி அணி, வங்காளதேச துடுப்பாட்ட ஏ அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
தேர்வுத் துடுப்பாட்டம்
[தொகு]2005 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . மே 26 , இல் இலண்டனில் நடைபெற்ற இங்கிலாந்துத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 56 பந்துகளில் 19 ஓட்டங்கள் எடுத்து ஹோகார்டின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதில் 3 நான்குகள் அடங்கும். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 9 பந்துகளில் 3 ஓட்டங்கள் எடுத்து ஆண்ட்ரூ பிளின்டாஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி ஒரு ஆட்டப் பகுதி மற்றும் 271 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[1]
சூலை 2007 ஆம் ஆண்டிலில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். மசூத்திற்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.[2] இந்தப் போட்டியில் வங்காளதேச அணியின் புதிய தலைவரான முகமது அஷ்ரஃபுல்லுடன் இணைந்து 191 ஓட்டங்கள் சேர்த்தார்.[3][4] இதன்மூலம் ஆறாவது இணைக்கு அதிக ஓட்டங்கள் சேர்த்த வங்காளதேச இணை எனும் சாதனை படைத்தனர். இருந்தபோதிலும் இந்தப் போட்டியில் இலங்கை அணி ஒரு ஆட்டப்பகுதி மற்றும் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[5]
2018 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது . பெப்ரவரி 8, இல் தாக்காவில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் குச்சக் காப்பாளராக 3 கேட்சுகளைப் பிடித்தார். 22 பந்துகளில் 1 ஓட்டங்கள் எடுத்து லக்மலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 51 பந்துகளில் 25 ஓட்டங்கள் எடுத்து ஹெராத்தின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 215 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[6]
ஒருநாள் போட்டிகள்
[தொகு]2006 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. ஆகஸ்டு 6 இல் ஹராரேவில் நடைபெற்ற சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.இந்தப் போட்டியில் களம் இறங்குவதற்கு இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தப் போட்டியில் வங்காளதேச அணி 8 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[7]
2018 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணி முத்தரப்புத் தொடரில் விளையாடியது. சனவரி 7 இல் தாக்காவில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் விளையாடினார். இந்தப் போட்டியில் 40 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்து தனஞ்செய பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[8]
சான்றுகள்
[தொகு]- ↑ "1st Test, Bangladesh tour of England at London, May 26-28 2005 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-29
- ↑ Thawfeeq, Sa'adi (2 July 2007), Mushfiqur replaces Mashud for second Test, Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 24 September 2011
- ↑ Austin, Charlie, Sri Lanka v Bangladesh 2007, Wisden Cricketers' Almanac, பார்க்கப்பட்ட நாள் 14 February 2011
- ↑ Austin, Charlie, Second Test: Sri Lanka v Bangladesh 2007, Wisden Cricketers' Almanac, பார்க்கப்பட்ட நாள் 14 February 2011
- ↑ Bangladesh board releases contracted players' list, Cricinfob, 6 December 2007, பார்க்கப்பட்ட நாள் 22 September 2011
- ↑ "2nd Test, Sri Lanka tour of Bangladesh at Dhaka, Feb 8-10 2018 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-29
- ↑ "5th ODI, Bangladesh tour of Zimbabwe at Harare, Aug 6 2006 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-29
- ↑ "Final (D/N), Bangladesh Tri-Nation Series at Dhaka, Jan 27 2018 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-29