தொண்டன் (2017 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொண்டன்
சுவரிதழ்
இயக்கம்சமுத்திரக்கனி
தயாரிப்புஆர். மணிகண்டன்
கதைசமுத்திரக்கனி
இசைஜஸ்டின் பிரபாகரன்
நடிப்புசமுத்திரக்கனி
விக்ராந்த்
சுனைனா
அர்த்தனா பினு
கௌரி நாயர்
ஒளிப்பதிவுஎன். கே. ஏகாம்பரம்
ரிச்சர்ட் என். நாதன்
படத்தொகுப்புஏ. எல். ரமேஷ்
கலையகம்வசுந்தரா தேவி சினி பிலிம்ஸ்
விநியோகம்வசுந்தரா தேவி சினி பிலிம்ஸ்
வெளியீடுமே 26, 2017 (2017-05-26)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தொண்டன் (Thondan) என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்தியத் தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை சமுத்திரக்கனி எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் விக்ராந்த், சுனைனா, அர்த்தனா பினு மற்றும் கௌரி நாயர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் என்பவர் பின்னணி இசை அமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் தயாரிப்பு டிசம்பர் 2016 இல் தொடங்கப்பட்டு, 2017 ஆம் ஆண்டு மே 26 ஆம் நாள் திரைக்கு வந்தது.

கதைக்களம்[தொகு]

நாராயணன் (நமோநாராயணன்) மத்திய அமைச்சர் பாண்டியனாரின் (கு. ஞானசம்பந்தன்) மகன். நாராணனன் பாண்டியனாரின் பெயரைப் பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கிறார். பின்னவரால் இவை கண்டும் காணாமலும் விடப்படுகின்றன. ஒரு நாள், நாராயணனின் அறிவுறுத்தலின்படி சில அடியாட்கள் ஒரு மனிதனைப் பட்டப்பகலில் கொல்ல முயற்சிக்கின்றனர். அம்மனிதன் இரத்த வெள்ளத்தில் சாய்கிறான். அச்சம்பவத்தை அருகில் இருந்து பார்த்த ஒருவர் அவசர சிகிச்சை ஊர்திக்கு தகவல் தெரிவிக்கிறார். அந்த அவசர சிகிச்சை ஊர்தியின் ஓட்டுநர் மகா விஷ்ணு (சமுத்திரக்கனி), இரக்க குணம் படைத் மனிதராக இருக்கிறார். இவரது வாகனத்தில் ஏற்றப்பட்ட யாரும் இறந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார். விஷ்ணு அந்த மனிதனை ஒரு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றி விடுகிறார். நாராணன் தனது எதிரியைக் காப்பாற்றிய நாராயணன் மீது சினம் கொள்கிறார். அதற்கு பதிலளிக்கும் விஷ்ணு உயிருக்குப் போராடும் மக்களைக் காப்பாற்றுவது தனது கடமை எனக் கூறுகிறார்.

விஷ்ணுவின் தந்தையாராக வேல ராமமூர்த்தி மற்றும் சகோதரி மகிசாசுரமர்த்தினியாக அர்த்தனா பினு ஆகியோர் நடித்துள்ளனர். விக்கி (விக்ராந்த்) மகிசாசுரமர்த்தினியைப் பின் தொடரும் ஒரு குடிகார, வேலையில்லாத இளைஞராக வருகிறார். இவரும் விஷ்ணுவும் நண்பர்களாக இருக்கிறார்கள். விஷ்ணு விக்கியை சீர்திருத்தி மருத்துவப் பரிசோதனையாளருக்கான படிப்பினில் சேர்ந்து படிக்க இசைவு தெரிவிக்க வைக்கிறார். விஷ்ணுவின் வேண்டுதலை வெற்றிகரமாக நிறைவு செய்து தனது காதலையும் தக்க வைத்துக் கொள்கிறார். தான் பெற்ற கல்வியின் மூலமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் மக்களளுக்கு உதவுகிறார். மகி மற்றும் அவரின் காதலி கௌரி ஆகியோரை நாராயணனின் சகோதரன் சின்னபாண்டி (சௌந்தரராஜா) பின் தொடர்கிறார். ஒரு பேருந்தில் கௌரி அவரை அடித்து விடுகிறார். இதனால், அவமதிக்கப்பட்ட சின்னபாண்டி கௌரியை ஒரு மரக்கட்டையால் தாக்குகிறார். இதனால் ஆத்திரமடைந்த மகியும் அவரது நண்பர்களும் சின்னபாண்டியைத் தாக்குகின்றனர். விஷ்ணு தனது அவசர சிகிச்சை ஊர்தியுடன் அந்த இடத்தை அடைகிறார். வாகன நெருக்கடியைச் சமாளிப்பதற்காக சின்னபாண்டி புறவழிச்சாலையில் சின்னபாண்டியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார். சின்ன பாண்டி தனது காயத்தின் காரணமாக இறக்கிறார். இதற்காக நாராயணன் விஷ்ணுவைக் குற்றம் சாட்டி அவரை பலமாகத் தாக்குகிறார். பொது மக்கள் விஷ்ணுவை நாராயணனிடம் இருந்து காப்பாற்றுகின்றனர். நாராயணன் விஷ்ணுவைக் கொல்ல சபதமெடுக்கிறார்.

விஷ்ணு தனது தந்தையின் இறப்பு, தனது செவித்திறன் இழப்பு மற்றும் தனது மனைவி பாகலாமுகிக்கு(சுனைனா) ஏற்பட்ட குறைப்பிரசவம் ஆகியவற்றால் மனம் பிறழ்ந்து நடக்கிறார். இவற்றால் கவலையடைந்து, நாராயணனை எதிர்கொண்டு தனது அறியாமைக்காக வருந்துகிறார். விஷ்ணு ஒரு சாதாரண மனிதனால் அரசியல் அதிகாரமும் பெரும் சக்தியுமுள்ளவர்களை எதிர்த்து எதுவும் செய்ய இயலாது என்பது என்பதை நம்புகிறார். நாராயணன் காவல் ஆய்வாளர் உத்தமன் மற்றும் இன்னும் மூன்று அரசு அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். விஷ்ணுவிற்கு காவல் துணை ஆய்வாளர் உதவி செய்கிறார். விஷ்ணு நாராயணனை அழிப்பதற்கும், நீதியை நிலை நாட்டவும் திட்டமிடுகிறார். அவர் நாராயணனின் சொத்து விவரங்கள் அனைத்தையும சேகரிக்கிறார். மேலும் உத்தமன் மற்றும் அரசு அதிகாரிகள் நாராயணனிடம் இலஞ்சம் பெறும் போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்றை தணிக்கையாளரிடம் இருந்து பெறுகிறார். நாராயணின் தணிக்கையாளரின் மனைவியின் உயிரை முன்னதாக விஷ்ணு காப்பாற்றிய நன்றிக்கடனுக்காக இதை விஷ்ணுவிற்குச் செய்துள்ளார். நாராயணன் பாண்டியனாரின் பெயரினைப் பயன்படுத்தி அதிக அளவிலான பணத்தினைச் சம்பாதித்தது மற்றும் ஊழல் செய்து பல சொத்துகளைச் சேர்த்துள்ளது ஆகியவற்றை அறிகிறார். விஷ்ணு இந்த ஆதாரங்களையெல்லாம் வருமான வரி, ஊழல் தடுப்பு மற்றும் இதர துறைகளுக்கு அனுப்பி வைக்கிறார். விஷ்ணு அந்தக் காணொளியை உத்தமன் மற்றும் இதர அரசு அலுவலர்களின் மனைவிகளுக்கும் அனுப்பி வைக்கிறார். இதன் காரணமாக அவர்கள் தங்கள் குடும்பங்களில் மரியாதையை இழக்கின்றனர். உத்தமனும் மற்ற அலுவலர்களும் நாராயணனுக்கு உதவி செய்வதை நிறுத்திக் கொள்ள முடிவெடுக்கின்றனர்.

வருமான வரித்துறை நாராயணனின் வீட்டினை ஆய்வு செய்து அவரது உடமைகளைக் கைப்பற்றுவதோடு கைதும் செய்கிறது. இந்த நேரத்தில் அவர் தப்பி ஓட முயற்சிக்கிறார். அப்போது ஒரு விபத்தில் சிக்கிக்கொள்கிறார். இந்த நேரத்தில் விஷ்ணு தனது அவசர சிகிச்சை ஊர்தியுடன் சென்று நாராயணனின் உயிரைக் காப்பாற்றுகிறார்.

நடிப்பு[தொகு]

  • மகா விஷ்ணுவாக சமுத்திரக்கனி
  • விக்கியாக விக்ராந்த்
  • விஷ்ணுவின் மனைவியாக பாகலாமுகி சுனைனா
  • மகிசாசுரமர்த்தினி அர்த்தனா பினு
  • கௌரியாக கௌரி நாயர்
  • நாராயணனாக நமோநாராயணன்
  • விஷ்ணுவின் உதவியாளர் சேவியராக கஞ்சா கறுப்பு
  • விஷ்ணு மற்றும் மகியின் தந்தையாக வேல ராமமூர்த்தி
  • காவல் ஆய்வாளர் உத்தமனாக அனில் முரளி
  • விஷ்ணுவின் உதவி ஆய்வாளராக போராளி திலீபன்
  • நாராயணனின் தந்தை பாண்டியனாக கு. ஞானசம்பந்தன்
  • சின்ன பாண்டியாகசௌந்தரராஜா
  • பாண்டியனாரின் மனைவியாக இந்திராணி
  • பாகலாமுகியின் தந்தை சிக்கல் சண்முகசுந்தரமாக ஈரோடு கோபால்
  • ஆர்யாபந்தம் உண்மை தொலைக்காட்சியின் செய்தியாளராக படவா கோபி
  • நித்யா ரவீந்திரன்
  • வி. முருகவேல்
  • இலைக்கடை இராமராக கௌரவத் தோற்றத்தில் சூரி
  • வருமான வரி அலுவலராக தம்பி ராமையா கௌரவத் தோற்றம்

தயாரிப்பு[தொகு]

2016 ஆம் ஆண்டில், ஜெயம் ரவி உடன் நிமிர்ந்து நில் படத்திற்குப் பிறகு இரண்டாம் முறை இணைந்து தொண்டன் என்ற திரைப்படத்தில் இணையப்போவதாக சமுத்திரக்கனி தெரிவித்தார். இக்கதை சசிக்குமாருக்காக எழுதப்பட்டதாகவும் தெரிவித்தார். அவர் இத்திரைப்படம் 2016 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளதாகவும் அல்லரி நரேஷ் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.[1][2] 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஜெயம் இரவிக்கு இருந்த கடும் நேர நெருக்கடியின் காரணமாக இவர்கள் (ஜெயம் ரவி மற்றும் மற்றும் சமுத்திரக்கனி) இணைய முடியாமல் போனது.[3]

டிசம்பர் 2016 இல் இப்படத்தில் நரேஷுக்குப் பதிலாக விக்ராந்த் நடிப்பதாகவும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனியே நடிப்பதாகவும் முடிவானது. இயக்குநர் சுசீந்திரன் படமான வெண்ணிலா கபடிக்குழு 2 மற்றும் இதர படங்களோடு இப்படத்திலும் நடிக்க இருப்பதாக விக்ராந்த் நடித்தார். சமுத்திரக்கனி இத்திரைப்படத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார். எளிய மனிதர்கள், அவர்களது வாழ்க்கையின் வலிகள் மற்றும் சிக்கல்களைப் பற்றியும், பொதுச்சேவையில் இருப்போர் குறைவான ஊதியத்தைப் பெற்றாலும் அவர்களது வாழ்க்கையில் சம்பளத்தையும் மீறி அவர்களது வாழ்க்கையில் ஒரு நிறைவு அவர்களின் சேவையின் மூலம் கிடைக்கிறது என்பதையும் இத்திரைப்படம் பேசுகிறது என்று சமுத்திரக்கனி இத்திரைப்படத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். [4] இத்திரைப்படம் பல்வேறு சமூகப்பிரச்சனைகளை பண மதிப்பு நீக்கம், அரசியலில் ஊழல், விவசாயிகள் தற்கொலை, 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை ஆகியவை பற்றியும் பேசும் என்றும் சமுத்திரக்கனி தெரிவித்திருந்தார்.[5][6] டிசம்பர் 2016 இல் இப்படம் தொடங்கிய போது 2012 இல் வெளியான நீர்ப்பறவை திரைப்படத்தில் நடித்த சுனைனாவை ஒப்பந்தம் செய்தார்.[7][8]

குறிப்புகள்[தொகு]

  1. http://indianexpress.com/article/entertainment/regional/planning-a-film-with-jayam-ravi-samuthirakani-2897127/
  2. http://www.behindwoods.com/tamil-movies-cinema-news-16/jayam-ravis-next-film-with-samuthirakani-has-been-titled-as-thondan.html
  3. http://www.thehindu.com/features/cinema/Planning-a-film-with-Jayam-Ravi-Samuthirakani/article14474401.ece
  4. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Samuthirakani-An-ambulance-driver/articleshow/55911045.cms
  5. http://www.deccanherald.com/content/612647/samuthirakani-his-finest-work-till.html
  6. http://www.deccanchronicle.com/entertainment/kollywood/070417/thondan-is-not-a-political-film-samuthirakani.html
  7. http://behindwoods.com/tamil-movies-cinema-news-16/sunaina-joins-the-cast-of-samuthirakanis-thondan-with-vikranth.html
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-24. பார்க்கப்பட்ட நாள் 2019-10-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொண்டன்_(2017_திரைப்படம்)&oldid=3709374" இலிருந்து மீள்விக்கப்பட்டது