உள்ளடக்கத்துக்குச் செல்

அர்த்தனா பினு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்த்தனா பினு
பிறப்பு22 பிப்ரவரி 1997 (வயது 23)
திருவனந்தபுரம், கேரளா, இந்தியா.
தேசியம்இந்தியர்
பணிநடிகை, தொகுப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2016 முதல்
பெற்றோர்மலையாள நடிகர் விஜயகுமார் (தந்தை)
பினு டேனியல் (தாய்)

அர்த்தனா பினு (Arthana Binu) இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். இவர் தமிழ் , மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் தோன்றினார். 2016 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான சீதாம்மா ஆண்டலு ராமையா சித்ராலுவில் அறிமுகமானார்.[1] தமிழில் தொண்டன் (2017), செம (2018) மற்றும் கடைகுட்டி சிங்கம் (2018) போன்ற படத்தில் நடித்தார்.[2].

பிறப்பு மற்றும் இளமைக்காலம்

[தொகு]

திருவனந்தபுரத்தின் சர்வோதயா வித்யாலயத்தில் அர்த்தனா தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அவர் தனது 11 ஆம் வகுப்பு பள்ளிப்படிப்பில் மலையாளத்தில் உள்ள டிவி சேனல்களில் தொகுப்பாளராகப் பங்களிக்கத் தொடங்கினார். பள்ளி வாழ்க்கையை முடித்த பின்னர், திருவனாதபுரத்தின் மார் இவானியோஸ் கல்லூரியில் இளங்கலை இதழியல், வெகுஜன தொடர்பு மற்றும் வீடியோ தயாரிப்பு ஆகியவற்றில் சேர்ந்தார். பட்டம் பெறுவதற்கு முன்பே, அர்த்தனா மாதிரியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ஸ்ரீகண்டன் நாயர் ஏற்பாடு செய்த பொழுதுபோக்கு மற்றும் பிரபலமான விளையாட்டு நிகழ்ச்சியான ஸ்மார்ட் ஷோவை தொகுத்தளித்தார் அந்நிகழ்ச்சியை ஃப்ளவர்ஸ் (டிவி சேனல்) ஒளிபரப்பிய பின்னர் அவர் புகழ் பெற்றார். நடிகர் சுரேஷ் கோபியுடன் நிங்கல்கம் ஆகாம் கோடீஷ்வரனுக்கான விளம்பரங்களையும் செய்தார்.[3][4][5]

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி
2016 சீதாமா ஆண்டலு ராமையா சித்ரலு சீதா மகாலட்சுமி தெலுங்கு
முடுகாவ் கங்கா மலையாளம்
2017 தொண்டன் மகிஷாசுரமர்தினி தமிழ்
2018 செம மகிழினி தமிழ்
கடைக்குட்டி சிங்கம் ஆண்டாள் பிரியதர்ஷினி தமிழ்
2019 வெண்ணிலா கபடி குழு 2 மலர் தமிழ்
2020 ஷைலாக் பூங்குழலி மலையாளம்

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புக்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்த்தனா_பினு&oldid=3055675" இலிருந்து மீள்விக்கப்பட்டது