சுனைனா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுனைனா

பிறப்பு ஏப்ரல் 18, 1989 (1989-04-18) (அகவை 34)
நாக்பூர், மகாராஷ்டிரா, இந்தியா
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 2004 - தற்காலம் வரை

சுனைனா (ஆங்கிலம்:Sunaina) இவர் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

வாழ்க்கை குறிப்பு[தொகு]

சுனைனா ஏப்ரல் 18, 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் பிறந்தார்.[1] இவர் நாக்பூர் மவுண்ட் கார்மல் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், படித்துவந்தார். தற்போது வர்த்தக இளங்கலை படிப்பு படிப்பதற்கு ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.[1]

செப்டம்பர் 26, 2008 ஆம் ஆண்டு சுனைனா நகுலுடன் இணைந்து நடித்த காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள நாக்கு முக்கா என்ற கானாப் பாடல் தமிழகம் முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தது.[2]

நடித்துள்ள படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2006 சம்திங் ஸ்பெசல் தெலுங்கு
10து கிளாஸ் சந்தியா தெலுங்கு
பெஸ்ட் பிரண்ட்ஸ் மலையாளம்
2007 மிஸ்சிங் தெலுங்கு
2008 காதலில் விழுந்தேன் மீரா தமிழ்
2010 வம்சம் மலர்கொடி தமிழ்
2012 பாண்டி ஒலிப்பெருக்கி நிலையம் வளர்மதி தமிழ்
திருத்தனி சுசீலா தமிழ்
நீர்ப்பறவை எஸ்தர் தமிழ் பரிந்துரை – சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது – தமிழ்
2013 சமர் ரூபா தமிழ்
2014 கதிர்வேலன் தமிழ் தயாரிப்பு நிலையில்
தெனாலிராமன் இளவரசி மாதுளை தமிழ் படபிடிப்பில்[3]
வன்மம் தமிழ் Pre-production[4]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 "South Indian Actress Sunaina Biography". Zimbio. அக்டோபர் 12, 2010. http://www.zimbio.com/Tamil+Movies/articles/9M6nYS5pAYl/sunaina+Biodata. பார்த்த நாள்: டிசம்பர் 7, 2012. 
  2. "நாக்கு முக்கா' - நற்றமிழே!". தினமணி. http://dinamani.com/weekly_supplements/tamil_mani/article857863.ece. பார்த்த நாள்: டிசம்பர் 7, 2012. [தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Srikanth is Nambiar!". Sify. 17 May 2013. http://www.sify.com/movies/srikanth-is-nambiar-news-தமிழ்-nfrixxchfhe.html. பார்த்த நாள்: 17 May 2013. 
  4. http://timesofindia.indiatimes.com/entertainment/தமிழ்/movies/news-interviews/Sunainaa-signs-up-for-Vijay-Sethupathi-Kreshna-film/articleshow/33609074.cms

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுனைனா_(நடிகை)&oldid=3697788" இருந்து மீள்விக்கப்பட்டது