காவற்பெண்டு
காவற்பெண்டு சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரே ஒரு பாடல் புறநானூறு 86[1] எண் கொண்ட பாடலாக அமைந்துள்ளது.
- துறை - ஏறாண்முல்லை
ஆண்சிங்கம் போலப் போராடும் ஆண்மகனின் சிறப்பினைக் கூறுவது ஏறாண்முல்லை.
பாடல்
[தொகு]'சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுளனோ என வினவுதி, என்மகன்
யாண்டு உளனாயினும் அறியேன் ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே.
பாடல் சொல்லும் செய்தி
[தொகு]போருக்கு அரசன் அழைப்பு வந்துள்ளது. காவற்பெண்டு குடிசை வீட்டில் வாழ்ந்துவந்தாள். ஒருவன் அவள் வீட்டுக்கு வந்து அவளது வீட்டுத் தூணைப் பற்றி நின்றுகொண்டு உன் மகன் எங்கே என்று காவற்பெண்டைக் கேட்டான். அப்போது அவள் சொல்கிறாள்.
என் மகன் எங்கு இருக்கிறானோ எனக்குத் தெரியாது. அவனைப் பெற்ற வயிறு இதோ இங்கு இருக்கிறது. (இது மறக்குடி மகனைப் பெற்றெடுத்த வயிறு) அவன் கட்டாயம் போர்களத்துக்குத் தானே வந்து நிற்பான். (நீ செல்)