வேலன்டைன் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புனித வேலன்டைன் நாள் அல்லது வேலன்டைன் நாள் பெப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். வேலன்டைன் என்ற பெயருடைய இரு கிறித்துவத் தியாகிகளின் பெயர்களை அடுத்து இந்நாள் வேலன்டைன் நாள் என்றும் காதலர்களே பெரும்பாலும் இந்நாளைக் கொண்டாடுவதால் காதலர் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. காதலர்கள் தவிர பலரும் தங்கள் அன்பை தெரிவித்துக் கொள்ளும் நாளாகவும் இது இருப்பதால் அன்பர்கள் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. தோற்றத்தில் இது மேற்கத்திய உலகக் கொண்டாட்டமாக இருந்தாலும், அண்மைக் காலங்களில் உலகெங்கும் இந்நாளை கொண்டாடும் போக்கு இளைஞர்களிடையே கூடி வருகிறது. எனினும், இது மேலை நாட்டுப் பண்பாடுகளை திணிக்கும் முயற்சி என்றும் காதலின் பெயரால் நினைவுப் பரிசுப் பொருட்களை விற்கும் வணிகமயமாக்கம் என்றும் ஒரு சாராரால் குற்றம் சாட்டப்படுகிறது.


"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்