பால் தாக்கரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால் தாக்ரே
சிவ சேனா கட்சி நிறுவனர் மற்றும் தலைவர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-01-23)23 சனவரி 1926
பால்காட், மகாராட்டிரம், இந்தியா
இறப்புநவம்பர் 17, 2012(2012-11-17) (அகவை 86)
மும்பை, இந்தியா
அரசியல் கட்சிசிவசேனா
துணைவர்மீனா தாக்கரே
பிள்ளைகள்பிந்தா தாக்கரே
ஜெய்தேவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே 
வாழிடம்(s)மும்பை, இந்தியா

பால் தாக்ரே (Bal Thackeray) என்று பிரபலமாக அறியப்படும் பால சாஹேப் கேஷவ் தாக்கரே (Balasaheb Keshav Thackeray, மராத்தி: बाळासाहेब केशव ठाकरे, (23, சனவரி 1926 - 17 நவம்பர் 2012) இவர், இந்தியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மாநிலமான மகாராட்டிராவில் மராத்தியர்களுக்கான இனம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சிவ சேனா என்னும் ஒரு பிரபலமான, இந்து தேசியத்துவக் கட்சியின் நிறுவியவரும் தலைவரும் ஆவார்.

ஆரம்ப கால வாழ்க்கையும் தொழிலும்[தொகு]

பால் தாக்கரே, மாதமிருமுறை வெளிவரும் பத்திரிகையான "பிரபோதன்" அல்லது "ஞானோபதேசம்" என்று பொருள்படும் பத்திரிகையில் தாம் எழுதிய கட்டுரைகளால், பாலகட் மத்தியப் பிரதேசத்தில், பிரபோதாங்கர் டாக்கரே என்றும் அறியப்பட்ட கேஷவ் சீதாராம் தாக்கரே என்பவரின் மகனாகக் கீழ் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்.

கேஷவ் தாக்கரே ஒரு முற்போக்கு சமூக சேவகர் மற்றும் எழுத்தாளராக விளங்கினார். அவர் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகப் பணியாற்றி (ஒன்றிணைந்த மஹாராஷ்டிரா இயக்கம் என்று பொருள்தரும்ப) சம்யுக்தா மஹாராஷ்டிரா சல்வால் என்னும் இயக்கத்தின் மூலம் 1950ஆம் ஆண்டுகளில் மராத்திய மொழி பேசும் மாநிலமாக மஹாராஷ்டிரா உருவாவதிலும், அதன் தலைநகராக மும்பை அமைவதிலும் முக்கியப் பங்காற்றினார்.

பால் தாக்கரே தமது தொழில் வாழ்க்கையை மும்பையில் 1950ஆம் ஆண்டுகளில் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் என்னும் ஒரு பத்திரிகையில் கேலிச் சித்திரக்காரராகத் துவங்கினார். அவரது கேலிச் சித்திரங்கள் தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் ஞாயிறு பதிப்புகளிலும் வெளியாயின. 1960ஆம் வருடம் அவர் மர்மிக் என்னும் கேலிச்சித்திர வார இதழ் ஒன்றைத் தனது சகோதரருடன் இணைந்து துவக்கினார். குறிப்பாக குஜராத்தியர் மற்றும் தென்னிந்தியக் கூலி வேலையாட்களை இலக்காக்கி, மும்பையில் மராத்தியர்-அல்லாதவர்களின் செல்வாக்கை எதிர்ப்பதற்கான பிரசாரமாக அதைப் பயன்படுத்திக் கொண்டார்.

1966ஆம் வருடம் ஜூன் மாதம் 19ஆம் தேதி, அவர் மஹாராஷ்டிர மாநிலத்தின் பிறப்புரிமையாளர்களின் (மராத்தியர்களின்) உரிமைகளுக்காகப் போராடும் நோக்கத்துடன் சிவசேனாவைத் துவக்கினார்.[1] சிவசேனாவின் ஆரம்ப கால நோக்கமானது தென்னிந்தியர்கள், குஜராத்திகள் மற்றும் மார்வாடிகள் போன்று வேறு மாநிலங்களிலிருந்து வந்த குடியேறிகளுக்கு எதிராக மராத்தியர்கள் இருந்தது.

அரசியல் ரீதியாக, சிவசேனா பொதுவுடைமைக் கட்சிக்கு எதிரானதாக விளங்கி, மும்பையின் பிரதான வர்த்தகத் தொழிலாளர் சங்கங்களின் மீதான கட்டுப்பாட்டை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிடமிருந்து பறித்து, பெரும்பாலும் குஜராத்தி மற்றும் மார்வாடி வணிகத் தலைவர்களிடமிருந்து காப்புப் பணம் வசூல் செய்வதாகவே இருந்தது. பின்னர், இது பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டு ஏற்படுத்திக் கொண்டது. பிஜேபி-சிவ சேனா கூட்டணி 1995ஆம் வருடம் மஹாராஷ்டிரா சட்டசபைத் தேர்தல்களில் வெற்றி அடைந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது. 1995 முதல் 1999வது வருடம் வரை அரசு புரிந்த காலகட்டத்தில் தாக்கரேயை "தொலைவிலிருந்து இயக்குபவர்" என்று அடைபெயர் இட்டு அழைத்தனர். இதன் காரணம் அவர் அரசின் கோட்பாடுகள் மற்றும் முடிவுகள் ஆகியவற்றில் திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு பெரும்பங்கு ஏற்றதேயாகும்.

சிவசேனா கட்சி, மராத்தி மனூ க்களுக்கு (சாமானிய மராத்தியர்கள்) மும்பை[2] நகரில் பொதுத் துறையில்[3] குறிப்பிடத்தக்க அளவில் உதவியதாக தாக்கரே கோருகிறார். சிவ சேனா அரசு புரிந்த கால கட்டத்தில், தனது அடிப்படை சித்தாந்தமான மண்ணின் மைந்தர்கள் என்னும் கருத்தாக்கத்துக்கு மாறாக, மராத்திய இளைஞர்கள் பெரும்பாலானோரின் முக்கியப் பிரச்சினையான வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கு ஒன்றுமே செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகளான பொதுவுடமைக் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.[4]

பிணக்குகள்[தொகு]

வேறு மாநிலங்களிலிருந்து மும்பை நகரில் குடியேறுபவர்கள், இந்து-அல்லாதவர்கள் (குறிப்பாக இசுலாமியர்கள்) மற்றும் வங்காள தேசம் நாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறும் இசுலாமியர்கள் ஆகியோரை எதிர்ப்பதில் தாக்கரே மிகவும் வெளிப்படையாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு வந்தார். 1960-ஆம் ஆண்டுகளின் இறுதிப்பகுதிகளில் துவங்கி 1970-ஆம் ஆண்டுகளின் இடைக்காலம் வரையிலும் "மஹாராஷ்டிரா மராத்தியர்களுக்கே" என்ற தமது பிரசாரத்தின் ஒரு பகுதியாக தென் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் மும்பையை விட்டு வெளியேறாவிட்டால் அவர்களுக்குத் தீங்கு விளையுமென்று தாக்கரே அச்சுறுத்தி வந்தார்.

2002-ஆம் வருடம், தாக்கரே இசுலாமிய வன்முறையை எதிர்கொள்ள இந்துக்களின் தற்கொலைப் படைகளை உருவாக்க வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்:

அவ்வாறு தற்கொலைப் படைகள் அமைக்கப்பட்டால் தான், நம்மால் வந்தேறிகளின் வெறித்தனமான வன்முறையை எதிர்கொள்ள இயலும்.[5]

தாக்கரேயின் அறைகூவலுக்கு எதிர்வினையாக, வெவ்வேறு சமூகங்களுக்கு இடையில் பகைமையைத் தூண்டுவதாக மராத்திய அரசு அவர் மீது வழக்குத் தொடுத்தது.[6]

தாக்கரேயின் முழக்கம் பற்றி ஏஷியா டைம்ஸ் மேலும் அறிவித்தது:

"இசுலாமியர்களுடன் நேருக்கு நேராக மோதுவதற்கு" "தொல்லை கொடுக்கும் இஸ்லாமியர்கள் நாட்டிலிருந்து ஒழிக்கப்பட வேண்டும்... நாலு கோடி பங்களாதேஷ் இஸ்லாமியர்களை உதைத்துத் துரத்துங்கள்; அதன்பிறகு நாட்டின் பாதுகாப்பு உறுதி பெறும்" என்று சிவசேனாத் தலைவர் கூறினார்.

இந்தியாவை "இந்து ராஜ்யம்" (இந்து நாடு) என்று அழைக்கத் தொடங்குமாறு இந்துக்களை வலியுறுத்திய அவர், "நமது மதம் (இந்து மதம்) மட்டுமே இங்கு மதிக்கப்பட வேண்டும்" என்றும் "மற்ற மதத்தவர்களை நாம் கவனித்துக் கொள்வோம்" என்றும் கூறினார்.[7]

குறைந்தபட்சமாக, ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளான லெஃப்டினண்ட் கர்னல் ஜயந்த் ராவ் சிடாலே மற்றும் லெஃப்டினண்ட் ஜெனரல் பி.என்.ஹூன் (மேற்கத்திய ராணுவப் படையின் முன்னாள் முதன்மைத் தலைவர்) ஆகிய இருவரும் துவங்கி நிர்வகித்து வந்த இரண்டு இயக்கங்கள், இந்தியாவில் தற்கொலைப் படை அமைக்குமாறு பால் தாக்கரே விடுத்த அறைகூவலுக்குப் பதிலிறுத்தன. லெஃப்டினண்ட் ஜெனரல் ஹூன், பயிற்சி முகாம்களை அமைக்குமாறு தாக்கரே தமக்குக் கட்டளை இட்டதாகக் கோரினார்.[8]

தமது கட்சியின் செய்தி மடலான சாம்னா (எதிர்த்து நில்) என்னும் பத்திரிகையில், எளிதில் உணர்ச்சிகளைத் தூண்டும் கட்டுரைகளைத் தாக்கரே தொடர்ந்து பிரசுரித்து வந்தார்.

சச்சின் டெண்டுல்கர், ஒரு பேட்டியில் "மும்பை இந்தியாவிற்கு சொந்தமானது..." என்று கூறி விடுத்த ஒரு அறிக்கையை விமர்சித்து, 2009-வது ஆண்டு நவம்பர் 11 அன்று, சாம்னா பத்திரிகையில் தாக்கரே ஒரு தலையங்கத்தைப் பிரசுரித்தார்.

"நான் ஒரு மராத்தியன்; அதைக் குறித்து நான் மிகவும் பெருமிதம் அடைகிறேன்; ஆனால், முதன்மையாக நான் ஒரு இந்தியன்" என்று சச்சின் கூறியிருந்தார்.[9] இதைத் தொடர்ந்து பால் தாக்கரேவிற்கு பரந்த அளவில் எதிர்ப்புகள் உருவாகத் துவங்கின.[10][11][12]

2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்தித் திரைப்பட உலகின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானின் "மை நேம் ஈஸ் கான்" என்னும் திரைப்படம் பால் தாக்கரேயின் தலைமையிலான சிவசேனா கட்சியினால் சர்ச்சைகளுக்கு உள்ளானது.[13]

இசுலாமியர் மீதான கருத்து[தொகு]

பொதுவாக, இசுலாமியர்களை தாக்குவதும், அவ்வப்போது இரக்கம் கொள்வதுமாக, தாக்கரேயின் கருத்துக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானதாகவே இருந்து வந்துள்ளன. தாம், "ஒவ்வொரு இசுலாமியருக்கும் எதிரானவர் அல்ல; இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டு இந்த மண்ணின் சட்டங்களுக்கு அடி பணியாதவர்களுக்கு மட்டுமே எதிரானவர்" என்று அவர் பறையறிவித்திருந்தார். "அவ்வாறான மக்களை துரோகிகள் என்றே நான் கருதுகிறேன்.[14]" அதிகாரப்பூர்வமாக சிவசேனாவச் சேர்ந்தவர்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தாலும், அவரது கட்சி இசுலாமியர்களுக்கு எதிரானதாகவே கருதப்படுகிறது.[15] இந்துத்துவம் பற்றித் தமது கருத்துக்களை விளக்குகையில், இசுலாம் மதம் என்பதை வன்முறையுடன் ஒன்றாக இணைத்து, "வன்முறையுடன் போராடவும் மற்றும் இசுலாத்துடன் போராடவும்" இந்துக்களை அழைத்துள்ளார்.[16] சுகேது மேத்தாவின் "மாக்சிமம் சிட்டி" என்னும் நூலி அவர், இந்திய இசுலாமியர்களைத் தூக்கிலிட வேண்டும் என்றும், அண்டை நாடான பங்களாதேஷிலிருந்து வந்து குடியேறியுள்ள முஸ்லீம்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் வாதாடுகிறார்.

1980-களில் அவர் கூறியவை:

"அவர்கள் (இசுலாமியர்கள்) புற்று நோய் போலப் பரவுகிறார்கள்; மற்றும் அவர்கள் புற்று நோயைப் போல அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும். இசுலாமியர்களிடமிருந்து நாடு காப்பாற்றப்பட வேண்டும் மற்றும் காவல்துறை அவர்களுக்கு(இந்து மஹா சங்கத்திற்கு] அவர்களது போராட்டத்தில் ஆதரவளித்து, காலிஸ்தானியர்களிடம் பஞ்சாப் காவல்துறை இரக்கம் கொண்டிருந்ததைப் போல நடந்து கொள்ள வேண்டும்."[17]

1992-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதியன்று, வட இந்திய நகரான அயோத்தியில், பதினாறாம் நூற்றாண்டின் பாபர் மசூதி, சிவ சேனா மற்றும் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களால், இடிக்கப்பட்ட வேளையில் தமது கட்சிப் பத்திரிகையான சாம்னா வின் மூலம் பாலா சாஹேப் தாக்கரே இந்திய இசுலாமியர்களை விமர்சித்தும் அவர்களுக்குச் சவாலும் விடுத்தார்.

இதைத் தொடர்ந்து மும்பை மதக் கலவரம் குறித்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா விசாரணைக் குழு, இசுலாமியர்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டி விடுவதாகவும் இதன் விளைவான பல காலங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்ததாகவும், குறிப்பாக பலர் உயிருடன் இருக்கும்பொழுதே அவர்கள் உடலின் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி அவர்கள் எரிக்கப்பட்டார்கள் என்று தாக்கரேயின் மீது குற்றம் சாட்டியது. விசாரணைக் குழு "பாரபட்சமானது" என்றும் மற்றும் "இந்துக்களுக்கு எதிரானது" என்றும் தாக்கரே குற்றம் சாட்டினார். சிவ சேனாகட்சிக்கு வெளியே அவரது கருத்துக்களுக்கு ஆதரவு கிட்டவில்லை.[18]

ஸ்ரீகிருஷ்ணா விசாரணைக் குழுவிற்கு முன்பாக வாக்குமூலம் அளித்த ஒரு சாட்சி, 1993-ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று மும்பையில் நிகழ்ந்த படுகொலைகளில் பெரும்பாலானவற்றை தாக்கரேதான் ஒருங்கிணைத்தார் எனக் குற்றம் சாட்டினார். யுவராஜ் மொஹித் இவ்வாறு கோரினார்: "பாலா சாஹேப் அமர்ந்த நிலையிலேயே பல்வேறு இடங்களிலிருந்தும் தொலைபேசி அழைப்புகளைப் பெற்றுக் கொண்டிருந்தார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் (அவருக்குத் தொலைபேசி அழைப்பு எங்கிருந்து வந்ததோ அந்த இடத்தில்) என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று அவர் கேட்பார்; பிறகு 'அவர்களைக் கொன்று விடுங்கள்' என்று சொல்வார். அவர்களை அல்லாவிடமே அனுப்பி விடுங்கள்.'" மொஹித் விசாரணைக் குழுவிடம் மேலும் இவ்வாறு கூறினார்: "தாக்கரே-

  • சாட்சிக் கூண்டில் நிற்பதற்கு ஒரு இசுலாமியர் கூட உயிருடன் இருக்கக் கூடாது என்று கட்டளையிட்டார்.
  • காவல் துறையின் கூடுதல் ஆணையர் ஏ.ஏ.கானை அவருடைய அல்லாவிடமே அனுப்புமாறு தனது ஆட்களுக்கு ஆணையிட்டார்.
  • ஜோகேஷ்வரியில் இந்துக்கள் கொலை செய்யப்பட்டதற்குப் பழி வாங்குமாறு தனது ஆட்களுக்குக் கட்டளையிட்டார்."

பின்னர், 1993-ம் ஆண்டு பிப்ரவரியில் தாக்கரே கூறியவை: "என் மகன்கள் செய்ததைப் பற்றி நான் பெருமை அடைகிறேன். நாங்கள் திரும்பத் தர வேண்டியிருந்தது; அதைத்தான் செய்தோம். நாங்கள் மட்டும் இல்லாதிருந்தால், இசுலாமியர்களை யாரும் கட்டுப்படுத்தியிருக்க இயலாது."[19]

இருப்பினும், 1998-ஆம் ஆண்டு ஒரு பேட்டியில், இசுலாமியர்களுடன் சிவசேனா கொண்டிருந்த பல பிணக்குகளில், குறிப்பாக பாபர் மசூதி அல்லது ராம ஜன்ம பூமி விஷயத்தில்[20], தனது நிலையை மிதப்படுத்திக் கொண்டு விட்டதாகக் கோரிய அவர் கூறியவை:

"நாம் இசுலாமியர்களை கவனித்துக் கொண்டு நம்மில் ஒரு பகுதியாகவே அவர்களை நடத்த வேண்டும்."[20]

இசுலாமியர்களைப் பற்றி அதற்குப் பின்னரும் அனல் தெறிக்கும் அறிக்கைகளை அவர் விடுத்துள்ளார். இந்துக்கள் அனைவரும் தமது மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து "இந்துக்களுக்கான ஒரு இந்து ராஜ்ஜியம்" காண வேண்டும் மற்றும் "இந்த நாட்டில் இசுலாமிய மதத்தை முழந்தாளிட வைக்க வேண்டும்" என்ற தமது ஆவலையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.[21]

இருப்பினும், இசுலாமிய அடிப்படைவாதிகள் இழைத்த குற்றமான 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி மும்பை புகைவண்டி குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த வேளையில் இசுலாமியர்களை அவர் வியந்து பாராட்டியும் உள்ளார்.

இந்திய இசுலாமியர்களுக்கு எதிரான பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் விடுத்த மிரட்டல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, "பயங்கரவாத நிகழ்வின்போது மும்பைவாசிகள் கொண்டிருந்த ஒற்றுமையுணர்வு "சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அபு அசிம் ஆஜ்மியின் வெறி மிகுந்த ஆதரவாளர்களின் கன்னத்தில் விடப்பட்ட அறையாகும்" என்றும், மேலும் "குண்டு வெடிப்பில் பலியானவர்களுக்காக ஜூலை 18 அன்று இரண்டு நிமிட மௌன அஞ்சலியில் பங்கேற்ற இசுலாமியர்களை" தாக்கரே "வணங்குகிறார்" என்றும் அவர் கூறினார்.[22]

2008வது வருடம், தாக்கரே, "இசுலாமியத் தீவிரவாதம் வளர்கிறது மற்றும் அதை எதிர்கொள்வதற்கு ஒரே வழி இந்துத் தீவிரவாதம் தான்" என்று எழுதினார். "இந்தியாவையும் இந்துக்களையும் பாதுகாக்க நமக்கு தற்கொலைப் படைகள் தேவை."[23]

வட இந்தியாவிலிருந்து வந்த மக்களைப் பற்றிய கருத்துக்கள்[தொகு]

2008-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆறாம் நாள், பால் தாக்கரே, சிவசேனாவின் அரசியல் பிரசாரப் பத்திரிகையான சாம்னா வில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பீகாரிகள் ஒரு "விரும்பத்தகாத கூட்டம்" என்னும் பொருள்படும்படியாக "ஏக் பீஹாரி, ஸௌ பிமாரி (ஒரு பீகாரி நூறு வியாதி) " [24][25] என்னும் ஆசிரியர் தலையங்கம் ஒன்றை எழுதினார். அவர் தமது கட்சியின் அடிப்படைப் பிரசார மேடையான மண்ணின் மைந்தர்கள் என்னும் கருத்தாக்கத்தை எம்என்எஸ் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கடத்திக் கொண்டு போய்விடுவதைத் தவிர்த்து அதை மீண்டும் கைப்பற்றவே இவ்வாறு பிகாரிகளைப் பற்றி எழுதுவதாகப் பரவலாகக் கூறினர்.[26]

"அவர்கள் [பீகாரிகள்] தென் இந்தியாவில், அசாமில், பஞ்சாப் மற்றும் சண்டிகரிலும் கூட விரும்பப்படுவதில்லை. தாங்கள் எங்கே தங்கினாலும், உள்ளூர் மக்களை பீகாரிகள் பகைத்துக் கொண்டுள்ளார்கள். உபி-பீகாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மராத்தியருக்கு எதிரான கிளர்ச்சியை நாடாளுமன்றத்தில் உருவாக்கியதன் மூலம் மும்பை மற்றும் மகாராட்டிராவிற்குத் தமது நன்றி கெட்ட தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்கள்."[26]

மும்பை வாசிகள் மற்றும் மராத்தியர்களை விமர்சனம் செய்வதன் மூலம், "தாங்கள் உண்ணும் தட்டிலேயே எச்சில் துப்புகிறார்கள்" என்று கூறி பீகார் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். "மும்பைவாசிகள் அழுகிய மூளை கொண்டவர்கள் என்று கூறி அணைந்து விட்ட நெருப்புக்கு எண்ணை ஊற்ற அவர்கள் முயல்கிறார்கள்" என்று எழுதியிருந்தார்.

மேலும், இந்துக்களின் தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஆறு நாட்கள் கழித்துப் பெருமளவில் கொண்டாடப்படும் சத் பூஜா என்னும் முதன்மையான விடுமுறையில் ஈடுபடுவதற்காக பீகார், உத்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவற்றிலிருந்து வந்த பாராளுமனற உறுப்பினர்களை அவர் விமர்சித்துள்ளார். அது உண்மையாகவே ஒரு விடுமுறை நாள் அல்ல என்று அவர் கூறினார்.[27] வட இந்தியர்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவை நடவடிக்கைகளுக்குத் தடங்கல் ஏற்படுத்திய பீகார் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான பதிலாக வெடித்த ஒரு நிகழ்வாகத்தான் இது காணப்படுகிறது.[27]

இந்தக் கருத்துக்களினால் மனம் புண்பட்ட பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், இந்தப் பிரச்சினையில் மத்திய அரசும், பிரதமரும் உடனடியாகக் குறுக்கிட வேண்டும் என்று கோரினார். சாம்னா வில் வெளியான ஆசிரியர் தலையங்கம், குறைந்த பட்சம் ஆர்ஜேடி, ஜேடி(யு), எஸ்பி மற்றும் காங்கிரசுக் கட்சிகளின் பிஹார் மற்றும் உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்த பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள், பால் தாக்கரேவிற்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்குமாறு கோரி வற்புறுத்த வழிவகுத்தது.[27] மக்களவையில் இந்த விஷயம் எழுப்பப்பட்டதும், அவைத் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி கூறியவை: "இந்த அவையின் நடவடிக்கைகளில் அதன் உறுப்பினர்கள் ஈடுபடுவது பற்றி யாராவது விமர்சனம் செய்தால், நாம் அதற்குத் தகுந்த முறையில் அவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பது மட்டும் அல்லாமல், இந்த அவையின் நடைமுறைகள் மற்றும் சிறந்த முறையில் நிலை நாட்டப்பட்ட மரபுகளுக்கு ஏற்றபடி அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்." யாரும் மன்னிக்கப்பட மாட்டார்கள்."[27]

2008-ம் ஆண்டு மார்ச் 27-ம் நாள் அன்று, பால் தாக்கரேயின் தலையங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, டெல்லியில் சிவ சேனாவின் தலைவர்கள், மகாராட்டிராவில் மராத்தியர் அல்லாதோருக்கு எதிராக அதன் "வன்செயலான நடத்தை"யைக் காரணம் காட்டி ராஜினாமா செய்து, தாங்கள் ஒரு தனிக் கட்சியைத் துவக்கப் போவதாக அறிவித்தனர்.[28] சிவ சேனாவின் வட இந்தியத் தலைவரான ஜெய் பக்வான் கோயல் பத்திரிகையாளர் கூட்டம் ஒன்றில், மராத்தியர்களுக்கு ஆதரவான "பாரபட்சமான போக்கினை" கட்சித் தலைமை கொண்டிருப்பதன் காரணமாகவே கட்சியை விட்டு விலகும் முடிவை எடுத்ததாகக் கூறினார். 'காலிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் தீவிரவாதக் குழுக்களிலிருந்து சிவ சேனா மாறுபட்ட ஒன்றல்ல. மாநில ரீதியாக மக்களைப் பிரிக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். இந்த இயக்கங்களின் பிரதான நோக்கம் நம் நாட்டை உடைப்பதுதான். மகாராட்டிரா நவ நிர்மான் சேனாவைப் போல, சிவ சேனாவும் வட இந்தியர்களைக் கேவலப்படுத்தி அவர்களை மனிதத்தன்மையற்ற முறையில் நடத்தியுள்ளது" என்று அவர் கூறினார்.[28][29]

அப்துல் கலாமிற்கு எதிரான கருத்துக்கள்[தொகு]

முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களை, தாக்கரே மிகக் கடுமையாகவே விமர்சித்து வந்துள்ளார். கலாம் நாட்டின் முன்னணி அறிவியலாளர் என்றும், ஆனால், அவர் குடியரசுத் தலைவரானதும், அந்தப் "பதவியின் கண்ணியத்தை இழந்து விட்டார்" என்றும் தாக்கரே கூறியுள்ளார்.

2001-ம் ஆண்டு இந்தியப் நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகமது அஃப்சல் மீதான தண்டனை குறித்து கலாம் முடிவெடுக்க இயலாதிருந்ததைக் குறித்து அவர் விமர்சித்துள்ளார். தீவிரவாதி ஒருவன் கருணை கோரி தொடுத்துள்ள மனு கலாமின் பரிசீலனையில் உள்ளது என்பதையே டாக்கரே விமர்சித்துள்ளார்.[16]

"அக்டோபர் மாதம், இந்த நாட்டின் உச்சநீதி மன்றத்தால் அஃப்சலுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது; இருப்பினும், அந்தக் கோப்பானது குடியரசுத் தலைவரின் மேசையில் கடந்த நாலு மாதங்களாகத் தூசி படிந்து கிடக்கிறது. கலாம் பற்றி நான் தவறாக ஏதும் கூறவில்லை. அவர் குடியரசுத் தலைவர் ஆவதற்கு நாங்கள் அனைவருமே ஆதரவளித்தோம். அஃப்சலின் கருணை மனு இன்னமும் குடியரசுத் தலைவரின் கிடங்கலிலேயே உள்ளது. இதைப் போல, ஒரு கருணை மனுவின் மீது முடிவெடுக்க நாலு மாதங்களுக்கு மேலாக குடியரசுத் தலைவர் எடுத்துக் கொண்ட மற்றொரு உதாரணத்தை எனக்குக் காட்டுங்கள்."[16]

கலாம் பற்றிய அவரது கருத்துக்களுக்குப் நாடாளுமன்ற நடவடிக்கைகள் அமைச்சரான பிரியா ரஞ்சன் தாஸ்முனி பொருத்தமற்றவை என்றும் மற்றும் "கண்ணியம் மீறும் தன்மையிலானவை" என்றும் பெருமளவில் கண்டனம் தெரிவித்தார்.[30]

இட்லரை வியந்து பாராட்டியது[தொகு]

இடலர் குறித்து தாம் தெரிவித்த பாராட்டுகளுக்காக தாக்கரே[31][32] மிகுந்த பிணக்குகளுக்கு ஆளானார்.

அவர் இவ்வாறு கூறியதாக ஏசியாவீக் பத்திரிகை தெரிவித்தது:

நான் இட்லரை வியந்து பாராட்டுபவன்; அப்படிச் சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை! அவர் கடைப்பிடித்த வழி முறைகள் அனைத்தும் சரியானவை என்று நான் கூறவில்லை; ஆனால், அவர் ஒரு மிகச் சிறந்த ஒருங்கிணைப்பாளர் மற்றும் சொற்பொழிவாளர். அவருக்கும் எனக்கும் பொதுவான பண்புகள் பல உள்ளன என்று நான் உணர்கிறேன். இரக்க மனப்பாங்குடன் ஆனால் இரும்புக் கரத்துடன் ஆள்கின்ற ஒரு வல்லாட்சியாளர் தான் இந்தியாவிற்கும் மெய்யாகவே தேவை." [2]

2007-ஆம் ஆண்டு ஜனவரி 29 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பிரசுரமான ஒரு பேட்டியில் தாக்கரே கூறியது:

மிகவும் கொடுமையான, அருவருப்பான காரியங்களை இட்லர் செய்தார். ஆனால், அவர் ஒரு கலைஞர்; (அதற்காக) நான் அவரை நேசிக்கிறேன். ஒரு தேசத்தையே, மனித வெள்ளத்தையே தன்னுடன் கூட்டிச் செல்லும் ஆற்றலை அவர் பெற்றிருந்தார். அவர் என்ன மாயம் செய்தார் என்று நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர் ஒரு அற்புதமானவர், யூதர்கள் கொல்லப்பட்டது தவறுதான். ஆனால், இட்லரைப் பொறுத்த ஒரு நல்ல விஷயம் அவர் ஒரு கலைஞர் என்பது. அவர் ஒரு அஞ்சா நெஞ்சர். அவரிடம் நல்ல குணங்களும் தீய குணங்களும் இருந்தன. என்னிடமும் நல்ல குணங்களும் தீய குணங்களும் இருக்கக்கூடும்.இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான கட்டுரை

இருப்பினும், ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியின் ஸ்டார் டாக் என்னும் கலந்துரையாடல் ஒன்றில், தாம் இட்லரை வியப்பவர் அல்ல என்று தாக்கரே கூறினார்.[33] இந்துக்களுக்கு எதிரான மத ரீதியான தீவிரவாதம் மிகுந்துள்ள சூழலில், தாக்கரே இவ்வாறு கூறியது முறையானதுதான் என்று அவரது ஆதரவு பத்திரிகையாளர்களான வர்ஷா போஸ்லே போன்றவர்கள் கூறியுள்ளனர். "ஜெர்மனியின் யூதர்களைப் போல இந்திய இசுலாமியர்கள் நடந்து கொண்டால், அவர்களுக்குக் கிடைத்ததுதான் இவர்களுக்கும் கிடைக்கும்" என்ற தாக்கரேயின் அறிக்கைக்கு ஆதரவளித்து போஸ்லே எழுதியது,

ஜெர்மனியின் யூதர்கள்....? தமது மந்த நிலையை உதறிக் களைந்தெறிந்து நமது நாகரிகம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றைக் காப்பாற்ற இந்துக்களுக்கு வேறென்ன வேண்டியிருக்கிறது? இது போலப் பேசுவது ஒருவரை நாஜியாக்கும் என்றால், நான் சொல்கிறேன்: நல்லது, நேருவின் கருத்தாக்கம் என்று போற்றப்படுகிற, முதுகெலும்பில்லாத, செவிடாக, ஊமையாக, குருடாக உள்ள சமயச் சார்பின்மையை விடவும் இது சிறந்ததுதான். அதன் மீது நான் காறியுமிழவும் மாட்டேன்.[34]

2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி, நியூஇந்தியாபிரஸ்.காம் என்னும் வலைத்தளத்தில் வெளியான ஒரு கட்டுரையில், இந்தியா முழுமைக்கும் இட்லரைப் போன்ற ஒரு வல்லாட்சியாளராகத் தாம் இருக்க விரும்புவதாக தாக்கரே கூறியதாகக் கோரப்பட்டது, அவர் நவகாலில் இவ்வாறு கூறியதாக ஆவணமாகியுள்ளது:

"ஆம், நான் ஒரு வல்லாட்சியாளர் தான். இந்தியாவிற்கு இன்று தேவை ஒரு இட்லர்தான்."

ஒரு முறை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தாம் மும்பை நகரின் இட்லராக இருக்க விரும்புகிறாரா என்று அவர் கேட்கப்பட்டார்.

"என்னைக் குறைத்து மதிப்பிடாதீர்கள்"

என்று அவர் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

"நான்தான் மகாராட்டிரா முழுவதற்குமான (இட்லர்) மற்றும் இந்தியா முழுமைக்குமாக அவ்வாறு விளங்க விழைகிறேன்."

1996-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு பேட்டியில் அவுட்லுக் பத்திரிக்கையாலும், இட்லர் பற்றிய கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது.

"இட்லரின் சில குணாதிசயங்கள் குறித்து ஒரு முறை நீங்கள் பாராட்டியுள்ளீர்கள்." "ஒப்புமையைத் தவிர்க்க முடியவில்லை" என்று மேலும் தூண்டும் முறையில் பேட்டியாளர் கூறினார். அதற்கு தாக்கரே கூறிய பதில், "நான் விச வாயு அறைக்கு யாரையும் அனுப்பவில்லை. அப்படி நான் இருந்திருந்தால், நீங்கள் துணிந்து என்னைப் பேட்டி எடுக்க என்னிடம் வந்திருக்க மாட்டீர்கள்."[35]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு[தொகு]

தான் தமிழீழத்திற்காகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர் என்று தாக்கரே கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "விடுதலைப் புலிகளின் கம்பீரமான போராடும் முறைக்காக நான் அவர்களைக் குறித்துப் பெருமை அடைகிறேன்"[36]

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை உத்தரவை, இந்திய நடுவண் அரசு நீக்க வேண்டும் என்றும் அவர் விரும்பினார்.[37]

கட்சியில் பிளவு[தொகு]

பால் தாக்கரேயின் மகன் உதய் தாக்கரே மற்றும் மருமகன் ராஜ் தாக்ரே ஆகியோருக்கு இடையிலான உட்-கட்சிப் போட்டி காரணமாக சிவ சேனாக் கட்சியில் பிளவுகளுக்கு வழி வகுத்தது. இதற்கும் மேலாக, கடும் வாதத் தலைவரான நாராயண் ராணே போன்ற பல மூத்த தலைவர்கள் வெளியேற்றப்பட்டனர் அல்லது சேனாவிலிருந்து தாமாகவே வெளியேறினர்.

2005-ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று, சிவ சேனாயின் அடிப்படை உறுப்பினராக இருப்பதிலிருந்து தாம் ராஜினாமா செய்வதாக ராஜ் தாக்கரே அறிவித்தார். 2006-ஆம் ஆண்டு மார்ச் 19 அன்று ராஜ் தாக்கரே மகாராட்டிரா நவநிர்மான் சேனா (எம்என்எஸ்) என்னும் கட்சியின் உருவாக்கத்தை அறிவித்தார்.

2009-ஆம் ஆண்டு நவம்பர் 28 அன்று, சிவ சேனாக்கு மற்றுமொரு பலத்த அடி விழுந்தது. பால் தாக்கரேயின் மருமகளான ஸ்மிதா தாக்கரே சிவ சேனாவிலிருந்து விலகிக் காங்கிரசு கட்சியில் இணைந்தார்.[38]

காதலர் தினத்திற்கு எதிர்ப்புகள்[தொகு]

பால் தாக்கரேயின் நடவடிக்கைகளில் ஒன்று, காதலர் தினம் என்றழைக்கப்படும் ஒரு மேற்கத்திய விடுமுறை நாளைக் கொண்டாட இளைஞர்களை அனுமதிக்கும் கடைகள் மற்றும் உணவகங்களைப் புறக்கணிப்பதாகும். இந்தக் கொண்டாட்டத்திற்கு அவர், சிற்றின்ப நாட்டமுள்ள விலங்கியல்பு கொண்டது என்றும் அநாகரிகமானது மற்றும் இந்தியத் தன்மைக்கு எதிரானது என்றும் கூறினார். இத்தகைய புறக்கணிப்புகள் பல நேரங்களில் வன்முறை, அத்தகைய கடைகள் நாசமாக்கப்படுவதிலும் ஈடுபடவைத்துள்ளது.

2006-ஆம் ஆண்டு ஃபிப்ரவரி 16 அன்று மும்பையில் தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த ஒரு காதலர் தினக் கொண்டாட்டத்தில் சிவ சேனா உறுப்பினர்கள் நிகழ்த்திய வன்முறைத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்து பாலா சாகேப் தாக்கரே மன்னிப்பு கேட்டுக் கொண்டார். "நல்லோஸ்பரா சம்பவத்தில் பெண்கள் அடிக்கப்பட்டதாகக் கூறுகின்றனர். உண்மையாகவே அவ்வாறு நடந்திருந்தால், அது கோழைத்தனத்தின் சின்னமாகும்" என்று தாக்கரே கூறினார். "எந்த ஒரு சூழ்நிலையிலும் பெண்களை அவமானப்படுத்தவோ, மிரட்டவோ கூடாது என்று நான் சிவ சேனாவில் உள்ளவர்களிடம் எப்போதுமே கூறி வந்துள்ளேன்."[3] தாக்கரேவும் சிவ சேனாவும், ஒரு "இந்திய மாற்று நிகழ்வுக்கு" ஆதரவளிக்கக் கூடுமெனினும், காதலர் தினக் கொண்டாட்டங்களுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளனர்.[4]

கலாச்சார மேற்குறிப்புகள்[தொகு]

சால்மன் ருஷ்டியின் தி மூர்'ஸ் லாஸ்ட் நைட் என்னும் புதினத்தில் "ராமன் ஃபீல்டிங்" என்று தாக்கரே நையாண்டி செய்யப்படுகிறார். விமர்சகர்கள் பெரிதும் பாராட்டிய, புலிட்ஸர் விருதுக்காகப் பரிந்துரையைப் பெற்ற, 2004-ஆம் ஆண்டிற்கான மாக்சிமம் சிட்டி என்னும் புனைவற்ற நூலில் சுகேது மேத்தா தாக்கரேயைப் பேட்டி காண்கிறார்.

இறப்பு[தொகு]

சூலை 2012 முதல் மூச்சுத்திணறல், மலச்சிக்கல் சிக்கல்களால் பாதிக்கப்பட்டு மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார், ஒரு வாரம் கழித்து வீட்டிற்கு சென்றாலும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலேயே இருந்தார். திங்கட்கிழமை மீண்டும் இவர் உடல்நிலை மோசமடைந்தது. 2012-ம் ஆண்டு நவம்பர் 17-ம் நாள் மாரடைப்புக் காரணமாக உயிரழந்தார்.[39][40]

இறந்த பிறகும் தொடரும் பிணக்குகள்[தொகு]

நவம்பர்-19-ம் தேதி அன்று தாக்கரேயின் இறப்பையொட்டி மும்பையில் நடைபெற்ற கடையடைப்பிற்கு[41] எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்[41] முகநூலில் வெளியிட்ட தகவலுக்காக 21[41] வயது மாணவி, சாகின் தத்தா கைது செய்யப்பட்டார்.[41] அதுமட்டுமின்றி அந்த தகவலை விருப்பமானதாக தேர்வு செய்தமைக்காக அவருடைய தோழி, ரேணு ஸ்ரீநிவாசனையும் மகாராட்டிர காவல்துறை கைது செய்தது.[41] சிவசேனா தொண்டர்கள் சாகினுடைய மாமனாருடைய மருத்துவகத்தின் மீது தாக்கல நடத்தப்பட்டது. அதன்பிறகு எழுந்த பல்வேறு எதிர்ப்புகளைத் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட சிவசேனா தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 10நபர்கள் கைது செய்யப்பட்டனர்.[42]

மேற்கோள்கள்[தொகு]

  1. உங்கள் கட்சியை அறிநது கொள்ளுங்கள்:சிவ சேனா- ரீடிஃப்
  2. ""On the wrong track"". The Hindu. Archived from the original on 2007-11-14. பார்க்கப்பட்ட நாள் 2006-08-11.
  3. ""Sena fate: From roar to meow"". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2006-08-11.
  4. ""Diversionary tactics"". The Hindu Frontline Magazine. Archived from the original on 2006-10-21. பார்க்கப்பட்ட நாள் 2012-11-17.
  5. "Thackeray for Hindu suicide squads". Times of India. http://timesofindia.indiatimes.com/cms.dll/articleshow?artid=25248436. பார்த்த நாள்: 2007-08-25. 
  6. "Case filed against Thackeray for urging anti-terror suicide-squads". ExpressIndia.com. http://www.expressindia.com/fullstory.php?newsid=15895. பார்த்த நாள்: 2007-08-25. 
  7. "India: The politics of passion". Asia Times இம் மூலத்தில் இருந்து 2007-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071020112759/http://www.atimes.com/atimes/South_Asia/DJ31Df02.html. பார்த்த நாள்: 2007-08-25. 
  8. "Sena land sires suicide camps". The Telegraph. http://www.telegraphindia.com/1021115/asp/frontpage/story_1387146.asp. பார்த்த நாள்: 2007-08-30. 
  9. "Mumbai belongs to India, says 'Marathi' Sachin". NDTV. http://www.ndtv.com/news/india/mumbai_belongs_to_india_says_marathi_sachin.php. பார்த்த நாள்: 2009-11-18. 
  10. "Protests against Thackeray's comments". November 17, 2009 இம் மூலத்தில் இருந்து 2009-11-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091124222041/http://beta.thehindu.com/news/states/other-states/article50393.ece. பார்த்த நாள்: 2009-11-18. 
  11. "Thackeray's statement on Sachin, a dangerous trend: Rama Jois". November 17, 2009. http://www.dnaindia.com/india/report_thackeray-s-statement-on-sachin-a-dangerous-trend-rama-jois_1313017. பார்த்த நாள்: 2009-11-18. 
  12. "Political leaders, BCCI attack Thackeray for deriding Sachin". PTI இம் மூலத்தில் இருந்து 2009-11-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091120072127/http://www.ptinews.com/news/379138_Political-leaders--BCCI-attack-Thackeray-for-deriding-Sachin. பார்த்த நாள்: 2009-11-18. 
  13. . TOI. http://timesofindia.indiatimes.com/india/Despite-Sena-threat-MNIK-opens-to-packed-theatres-across-country/articleshow/5564410.cms. பார்த்த நாள்: 2010-02-28. 
  14. பிரிட்டானிகா.காம்
  15. [1]
  16. 16.0 16.1 16.2 பத்திரிகைத்துறை மீது தாக்கரே மீண்டும் கண்டனம்,ஐபிஎன்லைவ்
  17. இந்தியா டுடே பத்திரிகையில் பால் டாக்கரே, ஜூன் 15, 1984
  18. சிவ சேனா கண்டனத்திற்கு ஆளாகிறது பரணிடப்பட்டது 2008-10-12 at the வந்தவழி இயந்திரம்,தி இந்து
  19. "Balasaheb commanded rioters: witness". IBN Live. http://www.ibnlive.com/news/balasaheb-commanded-rioters-witness/47404-3.html?xml&news=Balasaheb%20commanded%20rioters:%20witness&pubDate=Sat%2C+25+Aug+2007+03%3A21%3A51++0100&keyword=ibn_home. பார்த்த நாள்: 2007-08-25. 
  20. 20.0 20.1 ரீடிஃப் தேர்தல் பேட்டி/பால் டாக்கரே,ரீடிஃப்.காம்
  21. http://www.extraindia.com/election/fullstory.php?type=ei&content_id=80435[தொடர்பிழந்த இணைப்பு] இந்துக்களுக்கான இந்துஸ்தானமே என் கனவு: பால் தாக்கரே
  22. மும்பயின் ஒற்றுமை, வெறியர்களுக்கான ஒரு சவுக்கடி: தாக்கரே-இந்தியா-தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
  23. [ஐ பி என் பாலிடிக்ஸ்| http://ibnlive.in.com/news/politicians-intels-in-head=speech-with-impunity/89623-37-64.html[தொடர்பிழந்த இணைப்பு]
  24. Ganesh Kanate; Shubhangi Khapre. "Now, it’s Bal Thackeray’s turn to rail against Biharis". Daily News & Analysis. http://www.dnaindia.com/report.asp?newsid=1154619. பார்த்த நாள்: 2008-04-04. 
  25. "Biharis are an affliction, says Bal Thackeray". Bihar Times. 2008-03-05. பார்க்கப்பட்ட நாள் 2008-06-06. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  26. 26.0 26.1 "Biharis an unwanted lot: Bal Thackeray". The Times of India. http://timesofindia.indiatimes.com/articleshow/2839844.cms. பார்த்த நாள்: 2008-04-04. 
  27. 27.0 27.1 27.2 27.3 "Rattled by Raj, Thackeray abuses Biharis news". The Indian Express. http://www.indianexpress.com/story/281062.html. பார்த்த நாள்: 2008-02-02. 
  28. 28.0 28.1 "Shiv Sena’s North Indian leaders quit". The Times of India. http://timesofindia.indiatimes.com//Shav_Senas_North_Indian_leaders_quit/articleshow/2902796.cms?. பார்த்த நாள்: 2008-04-04. 
  29. "Delhi Shiv Sena chief resigns". The Hindu. http://www.hindu.com/2008/03/28/stories/2008032851310300.htm. பார்த்த நாள்: 2008-04-04. 
  30. கலாம் பற்றிய டாக்கரேயின் கருத்துக்கு தாஸ் முன்ஷி கடும் கண்டனம்
  31. ப.90. இந்தியாவும் சர்வதேச அமைப்பும் சிசிர் குப்தா, மன்னாரஸ்வாமிகலா ஸ்ரீரங்க ராஜன், சிவாஜி கங்குலி ஆகியோருடையது
  32. ப.201 சாதி இனப் பற்று பற்றி ஜவஹர்லால் நேரு நந்த லால் குப்தா எழுதியது
  33. ஸ்டார் டாக் 08/09/11/
  34. நாங்கள் நம்புவது குண்டாந்தடியைத்தான், வர்ஷா போஸ்லே
  35. "Where Hitler meets Thackeray". Newindpress.com இம் மூலத்தில் இருந்து 2007-09-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070927004725/http://www.newindpress.com/NewsItems.asp?ID=IEM20070819224536&Title=Main+Article&rLink=0. பார்த்த நாள்: 2007-08-24. 
  36. "தாக்கரே:"எல்டிடியைப்பற்றி நான் பெருமிதம் கொள்கிறேன்"" (PDF). Archived from the original (PDF) on 2009-03-05. பார்க்கப்பட்ட நாள் 2010-03-22.
  37. "எல்டிடிஈக்குத் டாக்கரே ஆதரவு; தடையை நீக்க விருப்பம்"
  38. தாக்கரே பாபு ஸ்மிதா காங்கிரஸ் கட்சியில் சேர உத்தேசம்
  39. "சிவசேனா தலைவர் பால் தாக்கரே காலமானார்". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 17, 2012.
  40. http://www.ndtv.com/article/india/bal-thackeray-dies-at-86-shiv-sena-appeals-for-calm-293606?pfrom=home-lateststories
  41. 41.0 41.1 41.2 41.3 41.4 "21-year-old girl arrested for Facebook post slamming Bal Thackeray". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 19, 2012.
  42. "சாகின் பேஸ்புக் கருத்து மருத்துவமனை மீது தாக்குதல் சிவசேனா தொண்டர்கள் கைது". Archived from the original on 2012-11-21. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 21, 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_தாக்கரே&oldid=3878449" இலிருந்து மீள்விக்கப்பட்டது